(வாசகர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இனங்கி இந்த விளக்கம். இது மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை என்ற ‘கதை வாயில்’க்கான சிறு கதை)
பரபரப்பான தில்லி மாநகரில் அன்றைய தினம் சுமார் இரெண்டயிரம் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் வழக்கத்தை விட அதிகமான பரபரப்போடு அமர்ந்திருந்தனர். இந்த நாளுக்காகத் தானே நாமும் எத்தனை நாட்கள் காத்திருந்தோம், இல்லை தவமாய்த் தவமிருந்தோம்.
போன மே மாதத்தில் முதல் நிலைத் தேர்வு எழுதி, ஆகஸ்டு மாதத்தில் அதன் முடிவு தெரிந்து, அக்டோபர் மாதத்தில் முக்கியத் தேர்வு எழுதி மூன்று லட்சம் மாணவர்களுள் முதல் ஆயிரம் பேருள் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு முடித்து…… அப்பா! இத்தனைத் தடைகளையும் தாண்டி இன்று முடிவு தெரியும் நாள்.
வயசான அப்பா அம்மா, வயசுக்கு வந்த தங்கச்சி, வீட்டுமேல கடன் மென்பொறியாளனாக இருந்தும் இது அத்தனையையும் விட்டுவிட்டு கனவுகளையும் லட்சியத்தையும் மட்டுமே பெரிதாக எண்ணி இங்கு வந்து இரெண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்றைய முடிவுக்குப் பின் பெருமையோடு வீடு திரும்பும் நாள் இது. அப்போது எங்கள் பரபரப்பு நியாயம்தானே. இன்னும் அரைமணி நேர்த்தில் இந்த தோல்பூர் மாளிகையில் முடிவுகளை ஒட்டி விடுவார்கள். தோல்பூர் மாளிகை. இங்குதான் வெள்ளை நிற அம்பாஸிடர்கள் சிவப்பு நிற விளக்குகளை ஏந்தி, எக்கச்சக்க மரியாதையோடு எத்தனை அதிகாரிகளைச் சென்ற மாதம் வரவேற்றது. வருங்கால அதிகாரிகளாய் நாமும் ஆவோம் என்ற நம்பிக்கையில் அந்த நேர்முகத் தேர்வு முடித்து வந்த நாள்…… “கண்ணு உள்ளே கேள்வியெல்லாம் ரொம்ப சுலபமா இருந்ததாப்பா?” ஒரு ஏழை விவசாயி தன் மகனை இத்துணை தூரம் வள்ர்த்துவிட்டு வெளியே அவன் புன்னகையோடு வரமாட்டானா என்று ஆவலோடு காத்து இருந்தார். “அங்க ராமசாமின்னு என் மகன் இருந்தானே அவனைத் தெரியுமா?” ஒரு வேளைக்கு நாற்பது நபர்கள் எட்டுத் தேர்வுக்குழுக்களை சந்திக்கின்றனர். மொத்த இந்தியாவில் இருந்து மாணவர்கள் வந்திருப்பினும், அன்றைய தினம் தென்னிந்தியா மாணவர்களைத் தேர்வு செய்வதால், மேலும் வாழ்க்கை ஊசலாடும் நிமிடங்களில் அறிமுகம் ஏற்படுவது கடினமே. “இல்லைங்கய்யா….” “ரொம்ப நல்லா படிப்பான். அதுனால்தான் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு இதுக்கு படிடான்னு சொல்லிட்டேன். எங்க சொந்தங்களுக்குக் கூடத் தெரியாது. இதுல இருக்கிற கஷ்டம் அவங்களுக்கு எங்க தெரியும்? ரிச்ல்ட் வரலைன்னா இவன்லாம் எங்க க்லியர் பண்ணுவான்னு வெட்கம் இல்லாம பேசுவாங்க. அதுதான் இவன் கலெக்டர் ஆயிட்டான்னா அப்புறம் எல்லாரும் வாயை மூடிப்பானுங்கன்னு சொல்லல. இது வரைக்கும் அவன் திறமைய நிரூபிச்சிட்டான். இன்னும் ஒரு கட்டம் தான். நீங்க கூட இருந்தா நம்பிக்கையா இருக்கும்பான்னு சொன்னான். அதுதான் இன்றைக்கு தம்பி மக கலியாணத்துக்கு கூட போகாம கிளம்பிட்டேன். நாளைக்கு கலெக்டர் ஆயிட்டான்னா அப்புறம் நம்ம பின்னாடி வருவானுங்க இல்லை” அந்த பெரியவர் முகத்தில் எத்தனை பெருமிதம். ஆனால் இந்த ஆயிரம் பேரில் வெறும் தொண்ணூறு பேர்தான் ஐ. ஏ. எஸ். ஆவார்கள். நானூறு பேர்தான் வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதி அறுநூறு பேரும் அவரவர்களுக்கு ஒருகதையைச் சுமந்து வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய வேண்டும். ஆனால் நானூறில் ஒருவனாவதற்கும் அறுநூறில் ஒருவனாவதற்கும் எத்தனை வித்தியாசம். இன்னும் நாலு நாட்களில் அடுத்த ஆண்டுக்கான முதல் கட்டத் தேர்வு வேறு. முடிந்த தெர்வின் நம்பிக்கை சுமந்து பறப்பதா? வாழ்க்கையின் யதார்த்தம் நினைத்து படிப்பதா? அதோ அங்கே சுடச்சுட முடிவுகள் வந்தாகிவிட்டது. அதற்காக காத்திருந்த மாண்வர்களும் முந்தி அடித்துக்கொண்டு அவரவர் பெயரைத் தேடுகின்றனர். என்ன கூட்டம்? அதற்குள் தொலைதூர நண்பர்கள் வேறு தொலைபேசியில் “என் பேர் இருக்குதா….. சுரேஷ்க்கு என்ன ஆச்சு? ரீத்து க்ளியர் பண்ணியாச்சாமே?……..” அத்தனையும் பார்த்து ஒரு வழியாக எல்லார் பெயர்களையும் அலசி அராய்ந்தாயிற்று. இந்த முறையும் எனது பெயர் விடுபட்டுப் போனது. சற்று நேரம் உலகமே நின்றதாய்த் தோன்றியது. வீட்டில் காத்துக்கிடக்கும் பெற்றோர்க்கு என்ன சொல்ல?……. “எந்த ஒரு முயற்சியிலும் தோல்வி அடைந்தால் நீ உன்னுடைய முழுவதையும் கொடுக்கலைன்னு அர்த்தம். என்ன தப்பு பண்ணன்னு யோசிச்சு இந்த தடவை நல்லா பண்ணு” அப்பாவின் ஆறுதல்.
என் கதை அறுநூறில் ஒரு கதையாய் தான் மாறியது. நிச்சயம் நானூறில் ஒரு கதையாய் ஆகிற நாளும் வரும். இப்படி நம்பிக்கையை ஆதாரமாய்ச் சுமார் ஐம்பதாயிரம் இளைஞர்கள் வாழ்க்கையை அறுநூறுக்கும் நானூறுக்கும் நடுவில் ஊசலாட வைக்கும் அந்த மூன்றெழுத்து “ஐ.ஏ.எஸ்” கெட்ட வார்த்தைதானே!







Iam sure it is not “KAADAL”
Enna enru kandupidika mudiyavillaye
நல்லா எழுதியிருக்கீங்க காத்திருப்பின் அவஸ்தையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்
நன்றி டுபுக்கு….என் கதைக்கு வந்த முதல் கருத்து இதுதான்.
இந்த மாதிரியான எ-கடிதஙள் தான் என்னை மாதிரியான ஆர்வலர்களை பேனா பிடிக்க வைக்கும்…
இன்றைக்கு நான் சந்தோஷமா அடுத்தப் புதிர்க்கான விடையை எழுதுவேன்.
மிக நன்றாக எழுதுகின்றீர்கள். உங்கள் ஜ.ஏ.எஸ் முயற்சி வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
I am extremely delighted by your efforts in bringing up this this blog site. all the articles are worth reading and appreciable especially this particular one which reflects the realties wounding UPSC aspirants.nevertheless, you are at your best now and i wish you all the best in your endeavour.
@premkumar:
அய்யா நீங்க இன்னும் படிச்சிட்டுப் பின்னூட்டம் கொடுக்கல….
@kalaiarasan:
நன்றி… பதில் எழுத நாளெடுத்தத்ற்கு மன்னிக்கவும். உங்களைப் போன்ற ஊக்கம் தான் எங்கள் உணவு…. நிழலின் பயணம் தொடரும்.
@ sivasankaran:
உனது வாழ்த்துக்கு மிகவும் நன்றி…. இன்னும் நிறைய வரவிருக்கிறது…..
அயன்
Dear karthick, I hope the three words never become worst after adding behind of your name.you are the person beyond that three words..you are more good enough and even over qualified for that three words.but i hope one day will come not so long to await to attach the three words with you..congrats and make me to tell twice within 8 months.bye…krithi
[...] முதற்படி - மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை.. [...]
[...] போன கனவுகளோடு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை என்ற சிறுகதை (சிறுகதைன்னா என்னன்னே [...]
அன்பின் கார்த்திக் ஐபிஎஸ்
நல்வாழ்த்துகள் கார்த்திக்
வாழ்வில் மேன்மேலும் முன்னேற, எல்லாம் வலல் இறைவன் எப்பொழுதும் உடனிருக்க நல்வாழ்த்துகள் கார்த்திக் ஐ பி எஸ்
நட்புடன் சீனா