நேற்று இது நடந்திருந்தால்….
“சித்தி மவ சடங்குக்குப் போனவளச் சவமா கொண்டுச் சேத்தாகளேன்னு அம்மா செத்த அன்னிக்கு ஏங்கி ஏங்கி அழுதியே தாயி… இன்னிக்கு என்ன ஆச்சு? நாதி யத்துக் கிடந்த உன்னைப் பக்குவமா பாத்துக்கி ட்டாகளே அவுக செத்தும் சொட்டுக் கண்ணீர் வி டாம உட்கார்ந்திருக்கியே. அழுதிடு தாயி… அழுதிடு… சோகத்தைத் தேக்கி வச்சா உடம்புக்கு ஆகாதம்மா அழுதிடு“. அப்பாவின் சாவுக்கு வந்த அனைவரும் அவளி டம் பேச அவள் மட்டும் கண்களில் நீர் வற்ற வா சலையே பார்த்து இருந்தாள்.
“அந்தப் புள்ள என்ன பண்ணும்! தாயில்லா பிள்ளை நாதியில்லாம போகக்கூடதுன்னு சீக்கிரமா கலியாணம் பண்ணி வச்சாரு, அவனும் ஒரு ஒதவாக்கரையா போயிட்டா ன். அந்தத் தப்புக்குத்தானே கூட இருந்து இத்தனை நாளைக்கும் பாத்துக்கிட்டரு. அதுதான் இப்ப அவரும் இல்லாம போயிடவே என்ன செய்யன்னு புரியாம உட்கந்துகிட்டு இருக்குது போல இருக்கு.”
“அதுக்குன்னு இழவு வீட்டுக்கு வந்தவங்களைப் பா த்துக்கூடவா அழுகத் தோணல. அதிசயமாத்தான் இருக்குது”
“என்ன பண்ணும் ஆறு மாசமா ஆம்பளைப் பிள்ளை இருந்திருந்தாக்கூட அப்படிப் பாத்துக்கிட மாட்டான். சலிக்கா ம பீ அள்ளுறதுல இருந்து எம்புட்டுகானம் பாத்தா…?”
அதற்குள் வெளியே இருந்து அவளுடைய புருஷன் நா ன்கைந்து சகாக்களோட ஓடி வந்து, “மாமா…மா மா…..” என்று விம்மி விம்மி அழுதான். அத்தனை அழுகையிலும் போலித்தனம்.
“பாரு தாயி உன் புருஷனைப் பத்தி எம்புட்டு கொறை சொல்லுவ? அவன் கூட வந்து இப்படி அழுகுறா ன். தான் ஆடலைனாலும் தான் சதை ஆடணுமடி… அழு தாயி…”
ஆண்பிள்ளைக்கும் நீலிக்கண்ணீர் வருமா என்பது போல் புருஷனைப் பார்த்தாள். அவனருகே இருந்த அவனுடைய சகாக்களைப் பார்த்தாள். ஒருவன் மட்டும் அழுகிற நே ரங்களில் கூட இவள் மேல் விடுத்த வக்கிரப் பா ர்வையை இவள் கவனிக்கத் தவற வில்லை. மெதுவாகக் கிடத்தி வைத்திருந்த அப்பாவையும் உற்றுப் பார்த்தாள்.
நானா அப்பா அழ மறுக்கிறேன். சாகறதுக்குள்ள டீச்சர் வேலை வாங்கித் தந்திடறேன்னு சொன்னீகளே…. அதுக்கு அப்புறம் இவனைத் தொரத்திଡ଼’அ2ட்டு நீ நிம்மதியா இருதாயின்னு சொன்னீகளே… நானா அப்பா அழ மறுக்கிறேன். இவனைக் கட்டி வச்சி, இவன்கூட படுத்து எழுந்ததே பாவம்னு நினைச்சேனே. அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சுதான் ஆகணும் பொறுமையா இருன்னு என் பிரசவம் வரைக்கும் பாத்துத் தந்தீகளே நானா அப்பா அழ மறுக்கிறேன்.
ஒத்த பிள்ளைன்னு செல்லமா வளத்தீகளே. கெளரவமா வாழ்ந்த குடும்ப்ந்தான், அம்மாவுக்கப்புறம் எல்லாமே போயிடுச்சு. அவசரக் கலியாணத்துல ஏமாந்து போனப்புறமும்கூட உங்ககூடவே உங்கமேல வச்சிருந்த மருவாத கலையாம இம்புட்டு நாள் இருந்தேனே நானா அப்பா அழ மறுக்கிறேன். இம்புட்டு நாளும் ஒருத்தர் நிழலிலேயே வாழப் பழக்கிக் கொடுத்துட்டு, தி டீர்னு யாரும் இல்லாம ஆக்கிப்புட்டீகளே அதுக்கா அப்பா அழாம இருக்கிறேன்.
சாவப் போறோம்னு தெரிஞ்சிருந்தும் ஏம்பா நேத்து அப்படி ஒரு அவமானத்துக்கு ஆளாக்குனீங்க. முடியல முடியலன்னு தூக்கி வை படுக்க வைன்னு பாடா படுத்துனீகளே. என்னால முடியலன்னு சொல்லியும் உன் டீச்சர் வேலைக்குச் சொல்லி வச்சிருக்கேனே அதுதான் அந்தப் பாவியோட சிநேகிதன் அவனைப் போய் கூட்டியான்னு சொன்ன ଡ଼’அ3களே….
கெளரவமான வீட்ல செல்லமா பொறந்த பிள்ளைன்னு பாத்து பாத்து வளத்தீகளே….. நேத்து என்ன ஆச்சு? உங்களைத் தூக்கி எடுத்து வச்சுப்புட்டு என்னைத் தனியா கூப்பிட்டு…. உனக்கு வெளி வேலைல இருந்து உள் வேலை வரைக்கும் நான் ஒத்தாசையா இருக்கேனே….. எனக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக்கூடாதான்னு அந்த நாயி கேட்டுப்புட்டு போச்சே. இதை போயி நான் வெளியி லனாலும் சொல்ல முடியுமா? இல்லை உங்ககிட்ட சொன்னப்பவும் நீங்க புரிஞ்சுக்கிற நிலைலதான் இருந்தீகளா? சுய ந னவுக்குக் கூட வாராம இப்போ போயி சேந்துட்டீகளே? என்னாலையாப்பா அழ முடியல…
விழியோரம் மெதுவாக ஈரம் கசிய மனது மட்டும் அவள் பெண்மையைச் சுட்ட நேற்றைய சம்பவத்தையே அசை போட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவளால் தேம்பி தேம்பி அழ முடியவில்லை. ஒரு வேளை நேற்று மட்டும் இது நடந்திருந்தால்…..







ஒரு சம்பவத்தை சேர்த்து பதிவாக சொன்ன
முயற்சிக்கு ஒரு சபாஷ.இழவு வீட்டுக்குள் ஒளிந்து இருக்கும் இது போன்ற நிகள்வுகளின் உண்மையை
மெண்மையாக சொன்ன விதம் அருமை.பதிவு
நிறைவதற்குள் மெதுவாக அவள் ஏன் அழ முடியவில்லை என்று கூரிய விதமும் அருமை.
வாழத்துக்கள்.
கதைக்குள் கதை சொன்ன விதம்..! சபாஷ்!
sirukadhai arpudham. nenjhil padhiya vaikkum kadhai.
@ tamila tamila:
arul உங்கள் வாழ்த்துக்கு நன்றி
நல்ல கதை இது.இன்னும் ஆழமும் நுணுக்கமும் வேண்டும் இனி வரும் படைப்புகளில்..