என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே!
சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே!
பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே!
தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே!
முந்தை கருமப் பலனென்று கூறி
இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே!
முன்னே காலன் வந்துநின்ற போதும்
எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே!
வாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி
புத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே!
உண்ணா நோன்பு நோற்ற நேரம்
உயிரைக் காத்து வந்ததும் சிவனே!
உயர்ந்த எண்ணங்கள் தந்த போதும்
உடலுள் ஒளிந்து வாழ்தல் தகுமோ!
உன்னை வெளிக்கொணர உயிரே
இன்னும் என்ன செய்திடல் வேண்டும்!
உன்மேல் பழி சுமத்தி ஓடும்
கோழையின் வாதங்கள் என்றா நினைத்தாய்
எந்தன் பாரங்கள் தாங்க நாடும்
நான்க கவை பிள்ளைக் குமுறலையா!!
(நான்கு வருடத்திற்கு முன்பு பேருந்து உடலில் ஏறி இறங்கியும் இறவாத சிவ பக்தன் ஒருவனின் உள்ளக் குமுறல்)







அடடா, நல்லதொரு கவிதை.வாழ்த்துக்கள்
(கடைசியில் என்னமோ புரியாத மாதிரி இருக்குங்க)
திரு ப்ரேம் அவர்களே, உங்க சந்தேகத்தைத் தீர்க்கிற பின் குறிப்பு …. நேற்று போட மறந்தது. இப்போ புரியும்னு நினைக்கிறேன்.