சமபத்திய நேர்முகத் தேர்விற்காகப் பின் நவீனத்துவம் குறித்தத் தகவல்கள் எனக்குத் தேவைப்பட்டது. இலக்கிய ஆர்வமேயன்றி அனுபவம் குறைவாக இருக்கும் எனக்கு டில்லியில் இது குறித்த விவரங்கள் சொல்லும் அறிஞர்கள் மிகச் சிலரே. அவர்களுள் பின்நவீனத்துவ எழுத்தாளராகக் கருதப்படும் ‘பிர’பல இரட்டையருள் ஒரு முக்கிய எழுத்தாளர் இங்கு தான் பணிபுரிவதாகத் தெரிய வந்தது. அவருடைய கைபேசி எண் கிடைத்ததால் அவரைத் தொடர்பு கொண்டேன். என்னை நான் முழுவதும் அறிமுகப் படுத்துவதற்குள் அவர் தற்போது வெளீயூரில் இருப்பதாகவும், பதினைந்து நாட்கள் கழித்துத் தொடர்பு கொள்ளுமாறும் கூறிவிட்டார். ஆனால் அவர் அன்று காலையிலும் மறுநாளும் டில்லி பல்கலையில் தேர்வு நடத்தினார் என்பது ஊரறிந்த உண்மை. இருந்தும் இப்படி ஒரு பொய். எனது்து மலையாள நண்பர்களுக்கு அவர்களது இலக்கியம் குறித்தத் தக்வல்களைச் சொல்ல டில்லியின் அனைத்துப் பேராசிரியரும், எழுத்தாளர்களும் முன்வர எனக்கு மட்டும் தமிழ் இலக்கியம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் போனது மிகப் பெரிய வருத்தம். நான் வேறு நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது அதுகுறித்த இணையங்களும்,புத்தகங்களும் கிடைத்தன. அனைத்டையும்்த ஓரிரவில் முடித்தபின் நான் புரிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
தி.சு. நடராசன் எழுதிய ‘திறனாய்வுக்கலை’ புத்தகத்திற்கும், டிஸ்பாஷனேட்டட் டிஜேவுக்கும்், மாமன்் sorry அண்ணன் பாலபாரதிக்கும் எனது நன்றி.
சுருக்கமாகப் பின் நவீனத்துவத்தை ‘விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வுகளைப் பதிவு செய்யும் ஊடகமா’கக்கருதுகிறார் திருபா.பா.
தி.சு.ந.வோ கருத்தியல்்திய்ல்வழிமுறைகளையும்,நிலைபாடுகளையும் பின்வருமாறு தொகுக்கின்றார்.
1. முதலாளித்துவத்தின் அடுத்த கட்டத்து வள்ர்ச்சியாகிய பின்னை முதலாளித்துவம், தொழில் குழும உற்பத்தி முறை, உலகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் இது வருகிறது.
2. மாற்றுவது அல்ல, மறுப்பது; தீர்ப்பது அல்ல சச்சரவு செய்வது. (்வீட்வ்வ்வ்வ் வீட்ல அடங்காத பிள்ளை மாதிரின்னு வச்சுக்குங்களேன்)
3. முழுமைக்கும், ஒட்டுமொத்தப் படுத்தலுக்கும் மறுப்பு. பகுதிகளை தொடர்பற்ற தன்மைகள் கொண்ட தீவுகளாக வருணிப்பது.
4. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முகத் தன்மை கொண்டது .
5. வரலாற்றைத் திரும்பப் பார்த்து பயணிக்கச் செய்வது
6. பெருநெறி, பெருங்கதையாடலுக்கு மறுப்பு சொல்லி சிறுங்கதையாடலை வலியுறுத்துவது.
7. பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ‘புனிதம்்’ என்பவற்றைமறுப்பது.
8. சுய முரண்பாடுகள் கொண்டது
9. வம்பபோலி நகை முரண் நிரம்ப நிற்பது.
இவற்றை உள்வாங்கிய பின் டிஸ்பாஷனேட்டட் டிஜேவின் புரிதலான ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற கொள்கையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் ஏதோ ஒருமாதிரி பின் நவீனத்துவம் மனத்திற்குள் தீவுகளாக சிறு சிறு பகுதிகளாக உரு எடுக்கின்றது.
‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற கொள்கை ஒரு படிஅப்பை படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டுமே அன்றி ஆசிரியனோடு இணைட்துப் பார்க்கக் கூடாது என்று விவரிக்கப் படுகின்றது. (‘ஊருக்குதான்யா உபதேசம் எனக்கில்லை’தெளிவாசொன்னா என்ன!)
அதே ‘பிர’பல இரட்டையருள் ஒருவரை என் நண்பர் மறுநாள் அதே வேலைக்காக அணுகினார். உடனே பல்கலை அலுவலகத்துக்கு ்துக்கு வரச் சொன்னார்.நண்பரின்வேலையக் கேட்டுவிட்டு ஒருவாரம் கழித்து வந்தால் அவருக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து வைப்பதாகச் சொன்னார். அந்த உரையாடலில் முந்தைய எனது உரையாடல் குறிட்து தெளிவடைய விசாரித்து உள்ளார். எனது நண்பர் அந்த சம்பவம் குறித்துத் தனக்குத் தெரியாதது போல் காட்டிக் கொண்டார். பின்பு ஒரு வாரம் கழித்துத் தொடர்பு கொண்ட போது தனக்கு நேரமே கிடைக்கவில்லை என்றும், சாகித்ய அகாடமி நூலகத்திற்குச் சென்று படித்துத் தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டார்.
தி. சு. ந. சொன்னது உண்மை என்றால் சுய முரண்பாடு கொண்ட தீர்வுகள நோக்கிப் பயணப்படாத, ஒரு படைப்பிற்குபின் இறந்து்விடுகிற இந்தப் ‘பிர’பல இரட்டையருள் ஒருவரும் ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் தானே.







நான் இந்த பதிவை தொடர்ந்து படிக்கிறேன் என்பதற்கு சான்றாக இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.
பி.கு. தொடந்து படிச்சாலாச்சும் பின்நவீனத்துவம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமே
ஆமாங்க அடுத்த சந்திப்புல உங்கப் பேரப்போட்டு பின் …என்னங்க இது சொல்லவே வர மாட்டேங்குது சரி என்னவோ ஒரு தத்துவம் அதப்பத்தி ஒரு சின்ன ஸ்பீச் குடுக்கிறார்ன்னு போடலாம்ன்னு இருக்கோம்.
தயவு செய்து ஒத்துக்கோங்க…எங்களுக்கு புரிய வைக்க முடியுமான்னு பாருங்க.
அது சரி… நீங்க கத்துகிட்ட பின்நவீனத்துவத்தை கொஞ்சமாவது சொல்லிக் கொடுப்பீங்கன்னு பார்த்தேன்..
இது உதவலாம்.. வசந்தனின் குரல்பதிவு ஒண்ணும் இருக்கு.. நான் கேட்டதில்லை, ஆனா உதவலாம்..
வாருங்கள் ஷென்ஷி…..
முதல் முறையாக ஒரு டெல்லி பதிவர் என் பக்கத்தில் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்்.
முத்து லட்சுமி அவர்களே உங்களுக்கும் என் வாழ்த்துகள்….. நிச்சயம் அடுத்தே வாரமே கூட நாமெல்லாம் சந்திச்சு கொஞ்ச நேரம் இதை பற்றி கதைக்கலாம்
பொன்ஸ்….. அது என்னங்க அது இந்த பின் நவீனத்துவம் பற்றி இவ்வளவு்வு படிக்கிறீங்க ், பேசுறிங்க, ஆனால் இதோட ஒரு முக்கியமான அம்ஸத்தை எல்லாரும் மறந்திட்டாலும் ்வு புரிஞ்சி நடந்துக்கிறீங்க.
ஆமாம் நான் படிச்சு தெரிஞ்சிகிட்ட ஒரு முக்கியமான விஷயம் இந்த பின் நவீனத்துவம் பற்றி எல்லாரும் நிறைய பேசி படிச்சிட்டு ஒன்றுமே புரியலப்பா என்று சொல்கிற விஷயமும் பின் நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு…