இது கொஞ்சம் பழைய மாவு தான். ஆனால் அதுல அரைக்கப் படாம ஒடுங்கின அரிசையைப் பற்றி திரும்பி பார்க்கலாம்னு தான். எல்லாருக்குமே தெரியும் போன வருஷம் குஷ்பூ சொன்ன ஒரு சின்ன வார்த்தைக்காக அவங்களை என்ன பாடு படுத்தினாங்கன்னு. நான் அவங்க சொன்னது சரியா தப்பாங்கிறதைப் பற்றி பேச இங்க வரலை. ஆனால் அதுக்கு கண்டனம் தெரிவிச்சிருந்த பல பேர் நமது தமிழ் கலாச்சாரத்திற்கு ஆகாத விஷயத்தைப் பேசிட்டாங்கன்னு எதிர்ப்பு தெரிவிச்சிருந்தாங்க. அப்பவே ஏதாவது ஒரு ஊடகத்துல என் கருத்தை எழுதனும்னு இருந்தேன். இப்போதான் அதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சது.
தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன? அது எங்கே இருந்து வந்தது ? என்று கேட்டால் உடனே திராவிட இயக்கத்தார் சங்க காலத்தைச் சுட்டுவாங்க. சங்க காலத்து கலாச்சாரத்தைப் பற்றி நாம் இங்கே பார்த்தால் திருமண்த்திற்கு முன் உடலுறவு அவர்களிடைய இருந்ததா என்பதை ஆராய்ந்தால் இவர்களது கண்டனம் நியாயம்தானா இல்லையா என்று தெரிந்துவிடும்.
தமிழ்க் காதலை ஆய்ந்தால்… திருமண்த்திற்கு முன் வரும் காதல் வாழ்வைக் களவு என்று பிரிப்பர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தக் களவு 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று நம்ம ‘தொல்ஸ்’ ஏன் ரூல்ஸ் போட்டு வச்சிருக்கு? அதுலயும் ‘இயற்கைபுணர்ச்சி’ , ‘இடந்தலைப்பாடு’, ‘பாங்கற் கூட்டம்’, ‘தோழியிற் புணர்ச்சி’ போன்ற கட்டங்கள் எதற்காக உண்டாக்கப் பட்டது. குறுந்தொகையில் இருந்து ஒரு அருமையான பாடல் ஒன்று நினைவிற்கு வருகின்றது
‘யாருமில்லை தானே களவன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே. -கபிலர்
அதாவது இந்தப் பாட்டு சொல்றது என்னன்னா…ஒரு தலைவி ஒரு காவாலிப் பயகிட்ட ஏமாந்து போனான்னு வச்சுக்குவோம், அவ தன்னுடைய தோழிகிட்ட தாம் புணர்ந்த இடத்துல சான்றுக்கு ஒருவருமே இல்லையென்றும் ஒரே ஒரு குருகுதான் அதுவும் ஓடைல ஆரல் மீனை எதிர்பார்த்துகிட்டு இருந்துச்சு என்று வருத்தப்பட்டு பாடிருக்காங்க. இதுல இருந்து நான் என்ன சொல்ல வரேன்னு தெரிஞ்சிருக்கும்.
அதாவதுங்க.. சங்க காலத்துல திருமணத்திற்கு முன் காதலிக்கும் தலைவனுக்கும், தலைவிக்கும் நடுவே உடல் உறவு இருந்தது என்பது பல ஆய்வுகளின் முடிவு. ஆனால் தலைவிக்கு அந்தக் கூடல் நிகழ்த்தியவனோடே திருமணம் முடித்து வாழவேண்டும் என்று ஒரு சமூகக் கட்டுப்பாடு இருந்தது. இதை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் வ.சுப. மாணிக்கனார் எழுதிய தமிழ்க் காதல் என்கிற புத்தகம் உங்களுக்கு சுவையான அனுபவத்தை ்தி்ர்்ண கொடுக்கும். ஆக தமிழ் கலாச்சாரத்துல எங்கையுமே திருமணத்திற்கு முன் உண்டான பாலியல் அனுபவம் மறுக்கப் படவில்லை என்று இருக்கும் போது…. இன்னும் ஏன் தமிழ் மக்கள் கலாச்சார ரீதியாக முன்னேற வேண்டும் என்றெல்லாம் கூக்குரலோ..? குஷ்பூ்ந்த் சொன்ன வார்த்தைக்கு ஏன் அத்தனை எதிர்ப்போ? சரி அதை விடுங்க எதிர்ப்பு தெரிவிச்ச பல பேர் என்னவோ தாலியைக் கட்டாமல் பெண்ணைத் தொட்டதே இல்லை என்பது போல் பேசியது மிகப் பெரிய தவறு இல்லையா. அந்த சம்பவம் நடந்த பொழுது வெளி மாநிலத்தில் இருந்ததால் சொல்கிறேன். தமிழர்கள் என்றாலே ‘ரொம்ப ஒழுங்கு பிள்ளை மாதிரி நடக்குற hypocrites’ என்று பரவலாக ஒரு கருத்து இருந்தது. அதை உண்மையென நிரூபிப்பது போல் தானே இந்தச் சம்பவ்ங்கள் நடந்தது? தயவு செய்து கலாச்சார பாதுகாவலர் இனி கலாச்சாரம் குறித்த வகுப்புகளில் இருந்துவிட்டு சர்ச்சையை கிளப்புங்கள்.






எடுத்துக்காட்டுகளோடு சொல்லி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு கிடைத்த அவல் தான் குஷ்பூவின் பேச்சு. எத்தனையோ கவனிக்க பட வேண்டிய சமூக அவலங்கள் இருக்க, இதை பெரிதுபடுத்தி நம்மை நாமே தான் இழிவுப்படுத்திக்கொண்டோம்.
வேற வேலை இல்லாம அவங்க அந்த விஷயத்த வைச்சு அரசியல் பண்ணாங்க…
நடைமுறையில பார்த்தா இதெல்லாம் உண்மைதாங்க…..
//யாருமில்லை தானே களவன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே. -கபிலர்
//
மிக அருமையான எடுத்துக்காட்டு
பேசி ஒன்னும் பிரயோஜனம் இல்ல
நாம பேசினா அது useless
அதுவே ஒரு பிரபலம் பேசினா அது தான் அன்னைக்கு Hot Topic
[...] குஷ்பூ அக்காவை [...]
நம்முடைய போலித்தனத்தை மறுபரிசீலனை செய்யனுமா?
இல்லை
குஷ்பூ மாதிரி பிரபலங்கள் Loose talk விடக்கூடாதா..ஒன்னுமே புரியலீங்க..
Protests against Kushboo is fueled by SUNTV to revenge the programme she is doing in JEYA TV “Jackpot” . so they have used this opportunity to spread hatred against her . there is no realistic approach to the issue .
// தமிழர்கள் என்றாலே ‘ரொம்ப ஒழுங்கு பிள்ளை மாதிரி நடக்குற hypocrites’ //
True .
Even I have check with my friends and amazingly they are also same with suntv SPIN even though they are ready to go to strip bars and Las Vegas escorts before marriage which clearly defines SUNTV can do magic with Tamils. It is like Hitler style of propaganda machine which is not good for society as a whole . Hope Maran Family will change this style in future as there is no political opposition to them now ( jj is just comedy not a reckon force in TamilNadu as before )