பதிவர்கள் வருந்தக் கூடிய சுய தரிசனம்
இந்தப் பதிவு யாரையும் தாக்கியோ அல்லது அனைவரையும் வருத்தப்பட வைக்கவோ எழுதப் பட வில்லை. இது நம்மை இன்னொரு முறை கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொள்வதற்காக சிறு முயற்சி.
இரெண்டு நாட்களுக்கு முன் ‘தெரியுமா உங்களுக்கு’ என்று நமது தகவல் உரிமை குறித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். நேற்று ‘ஜோதிகாவிற்கும் கௌதமிற்கும’ என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்த இரு பதிவு மட்டும் அல்ல, இதுவரை சில தகவல்கள் பற்றியும் பதிவுகள் போட்டிருந்தேன். இந்த ஒரு வாரத்தில் என்னுடைய ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்த வரவு குறித்து ஒரு சின்ன சர்வே…..
|
இதில் நீங்களே கவனித்தீர்கள் ஆனால் மக்கள் உரிமை குறித்த பதிவிற்கு உண்டான வரவுகள் எத்தனை என்று தெரியும். முக்கியமாக ஜோவின் பதிவு போட்ட அன்று அதாவது நேற்று என் பதிவுகளுக்கு மொத்த விருந்தினர் மட்டும் 290. நான் பதிய தொடங்கி ஒரு நாளில் இதுவே அதிக விருந்தினர் கொண்ட நாள். அது மட்டுமில்லை அந்தப் பதிவிற்கு மட்டும் தான் அதிகமான பின்னூட்டம் கூட.
இது ஏன் பதிவர்களே? வாழ்க்கைல கிசுகிசு இருக்கலாம், ஆனால் கிசுகிசுவே வாழ்க்கையாகலாமா? அதுவும் உரிமையை மறந்திட்டு அப்படி என்ன கிசுகிசு.
எனக்கு சித்திரப்பாவையில் அகிலன் எழுதியதுதான் ஞாபகத்துக்கு வருகுது.. ஒரு நல்ல கலைஞன் ரசிகர்களின் ரசனையை கீழே இறக்கி அதன் மேல் ஏறி முன்னேற நினைக்கக் கூடாது. ஆமாம் அதுதான் சரி இனி இந்த மொக்கைக்காக நான் அலைய மாட்டேன். ஆனால் கலாய்த்தல், விளையாட்டுகள் தொடரும்… வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்ட அல்ல என் மன சாந்திக்காக… நீங்களும் கொஞ்சம் சிந்திக்கலாம்…..







நான் இன்று உங்கள் பதிவுக்கு வரவே இல்லை…
எனக்கும் இதே ஞானோதயம் அடிக்கடி வ்ரும் அண்ணாச்சி
ஆனா, போதி மரத்தை வேரோட யாராவது உடனே பிடுங்கிடுவாங்க. பதிவுலகுல இதெல்லாம் ஜகஜமப்பான்னு இருக்க வேண்டியதுதான்.
சாத்தான்குளத்தான்
//ஒரு நல்ல கலைஞன் ரசிகர்களின் ரசனையை கீழே இறக்கி அதன் மேல் ஏறி முன்னேற நினைக்கக் கூடாது//
miga sari
nethu neengal sonnathukku indru arthan puritanthu
(mannika tamilil type seyya mudiyavillai)
more or less ellla rasikargalum cinemava thaane pozhupokkaka ninaithu kolgirargal
athaan ungal blog adikama parvaiyida pattullthu
unmai sudum enna seyya yaarum antha valiyil irunthu thappathu illa
அதானே… என்ன கொடும சரவணா இது..
நம்ம தல, அஞ்சா நெஞ்சன் பாலபாரதி பேருக்கு கொஞ்சம் கூட மதிப்பு தராம இந்த பாகச ஆளுங்க எங்க போயிட்டாங்க. யாரெல்லாம் குஷ்பூவுக்கு கொடி பிடிச்சிருக்காங்க தெரியல…
ச்சே! வெட்கம்.. அவமானம்…வேதனை….
அகில தலைவன் பாலபாரதி பேர் போட்ட பதிவை புறக்கணித்த பாகச தலைமையே அதை மீண்டும் திரும்பிப்பார். அதன் ஹிட் கவுண்டரை அதிகப்படுத்த டெல்லி கிளை கேட்டுக்கொள்கிறது
பி.கு: தமிழ்மணத்துல மறுமொழி பக்கமும் பதிவு வரணும்ப்பா. அப்பத்தான் நல்ல பதிவுக்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இல்லன்னா நம்மாளுங்க எப்பவும் கில்பான்ஸாத்தான் அலைவாங்க.
டெல்லி பாகச கிளை செயலாளர்
சென்ஷி
//வாழ்க்கைல கிசுகிசு இருக்கலாம், ஆனால் கிசுகிசுவே வாழ்க்கையாகலாமா? அதுவும் உரிமையை மறந்திட்டு அப்படி என்ன கிசுகிசு.//
அட..அட.. என்னமா சொல்றீங்க விஷயத்த….
ம்ஹ்ம்.. இதுக்கு நான் ஒரு விளம்பரம் கொடுத்துடறேன்.
ஓகேவா
நம்மபேரைதான் இழுக்கிறீங்களோன்னு எட்டி பார்த்தேன்.. அப்படியே அபீட்டு..:)
அய்யா.. இதைப்பத்தி நானும் ஒரு பதிவு போட்டாச்சு.
படிச்சுக்குங்க
பாலபாரதிக்கு ஒரு ஹிட்டுத்தானா…அவருக்கு தருமடி கிடைக்குமேங்க…நான் கூட இப்போ தான் பார்த்தேன்…
ஹிட் இப்போ ஏறி இருக்கா பாருங்க…
பிரச்சினை என்னவென்றால் உங்கள் பதிவில் பாலபாரதி பதிவை க்ளிக் செய்தா 404 எரர் வருகிறது…சில சமயம் பதிவு தெரிகிறது…
கொஞ்சம் கவனியுங்க.
//இதைப்பத்தி நானும் ஒரு பதிவு போட்டாச்சு//
அதுக்கு நானும் பின்னூட்டம் போட்டுட்டேன்..
You are 100 per cent right.