பிரேம்குமார் அவர்களின் அழைப்பை ஏற்று எட்டு ஆட்டம் விளையாடலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு இன்றைக்கு நானும் எட்டெடுத்து வச்சிட்டேன். ஏன்னா இது வரைக்கும் நான் என்னைப் பற்றிய விஷ்யங்களைப் பகிர்ந்து கொண்டதே இல்லை.
1. எனக்கு நடிப்புன்னா ரொம்ப பிடிக்குமுங்க. நான் மட்டும் அண்ணா பல்கலைல பொறியியல் சேரலைன்னா ஒரு நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ மாறி இருக்கலாம். இப்படி தான் நான் 8வது படிக்கும்போது ஒரு கன்னட நாடகத்தில் (நான் படித்தது கன்னட சங்க உயர்நிலை பள்ளி, அயன்புரம்) என்னை சித்தூர் ராணியின் தளபதியாக நடிக்கச் சொன்னாங்கா கதைப் படி நான் தாங்க ஹீரோ (கதை இல்லைங்க நம்புங்க..) ஆனால் நமக்கு கன்னட்ம் தெரியாது. என்ன செய்ய என் நண்பர்களின் உதவியோட எல்லா வசனங்களையும் ஹிந்தியில எழுதி அதற்கு அர்த்தம் புரிந்து ரொம்ப நல்லா தட்டி வச்சு நடிக்கைறதுக்கு மேடையில ஏறியாச்சு. அப்பவே ஏன் கன்னட நாடகத்துல தமிழ் பைய்னை நடிக்க வைக்குறீங்கன்னு எங்க மேலிடத்துல இருந்து ஒரு சலசலப்பு இருந்தது. ஆனால் என் திறமையை மதிச்சு ஏத்தி விட்டுட்டாங்க. அதுல ஒரு சீன்ல ராணிகிட்ட ஆவேசமா பேசிக்கொண்டே உடை வாளைத்தூக்கிக் காட்டனும். இதுதான் அந்த நாடகத்துலயே ஹைலைட்டு. ஆனா பாருங்க அன்றைக்கு உடைவாள் கிடைக்கலன்னு மிகிஸியைச் சுரண்டறதுக்கு இருக்கிற கத்தில கோல்டு பேப்பர் ஒட்டீ கொடுத்துட்டாங்க. நானும் ஆவேசமா உருவினதுக்கு அப்புறம் என் இடுப்பில கட்டி இருந்த பட்டி இருகிட்டது. அப்புறம் அந்த உடைவாலைச் செருகிவிட்டு பேச வேண்டிய ஆவேசமான வசனங்கள் அதைச் செருக முடியாம கஷ்டப் படும்போது மறந்திடுச்சு. தமிழ்னாலும் பூந்து விளையாடலாம் ஆனால் கன்னடம் என்பதால ரொம்பத் திண்றிப்போனேன். நல்ல வேளையா சித்தூர் ராணியா நடிச்ச கன்னடப் பொண்ணு கொஞ்சம் எடுத்து கொடுத்து காப்பாத்திடுச்சு.
2. எனக்கு என்னோட அம்மாவை ரொம்ப பிடிக்குமுங்க. நான் பள்ளி படிக்கும் போதில் இருந்து நான் எந்த நாடகத்துல கலந்துகிட்டாலும், போட்டில கலந்துகிட்டாலும் கண்டிப்பா என் அம்மா தான் கூட இருந்து தயார் பண்ணி அனுப்புவாங்க. இன்றைக்கு நான் இங்க வந்து இவ்வளவு வருஷம் மனம் தளராம போராடுறதுக்கு என் அம்மா இல்லைன்னா முடிஞ்சிருக்காது.
3. என்னோட அப்பாவைப் பற்றி சோல்ல நான் மறக்ககூடாது. ஒரு சாதாரண மளிகைக் கடை வியாபாரிக்கு கோவில்பட்டில 4வது மகனா பிறந்து, ஒரு குழந்தைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எந்த வசதியும் கிடைக்காத பட்சத்திலயும் தன் சொந்த முயற்சியாலேயே தென்னிந்திய பலுதூக்கும் போட்டியில முதல் பரிசு வாங்கி இன்றைக்கு சென்னைல ஒரு கௌரவமான வாழ்க்கைக்கு விதை போட்டது அப்பாதான். எனக்கு வெற்றி கிட்டாத கட்டங்களில் எல்லாம், இன்னும் வெற்றி பெற என்ன செய்யப் போற அப்படிங்கிற கேள்விலயே அடுத்து எடுத்த காரியத்தை விடக் கூடாதுன்னு ஒரு வேகம் வந்திடும்.
4. நாலாவதா எனக்குப் பிடிச்ச ஆளு சிவம். இவரு இருக்காருன்னு சிலர் நம்புவாங்க சிலர் இல்லைன்னு வாதிடுவாங்க. ஆனால் நான் எனக்குள்ள இருக்கிற பூரணத்துவம் (perfection) தான் அவன் நம்புவேன். எனக்குள்ள இருக்கிற ஒரு ஆளா ஆயிட்டதால நிறைய சண்டை நடக்கும், சமாதானம் இருக்கும். ஆனால் என்றைக்கும் விட்டுப் பிரியனும்னு நினைச்சதில்லை.
5. என்னோட கற்பனை வளரக் காரணமா இருந்த கே. பாலசந்தரும், அது மங்கிப் போக காரணமா இருக்கும் என்னோட படிப்பும். கே.பியை பற்றி ஒரு புத்தகமே எழுதுவேன். கதாநாயகர்களின் புகழைப் பரப்ப மட்டும் படம் வந்து கொண்டிருந்த காலத்துல, கதையை மட்டுமே நம்பி படம் எடுக்கத் துவங்கியவர்களில் முன்னோடி. அவருடைய பார்ப்பனத்துவம் அதிகமான விமர்சனத்துக்கு ஆளானாலும் அவருடைய முக்கியமான படைப்புகள் இன்றும் மனதில் நிற்கும். “returned with thanks”னு சொல்கிற சிந்து, “என்னை 24 மணி நேர நர்ஸா இருக்கவிடுங்கன்னு ” கேட்கிற நந்தினி, தொடர்கதையா விளங்குகிற அந்தப் பெண், அவர்கள், சொல்லாத்தான் நினைக்கிறேன், கல்கி, புதுப்புது அர்த்தங்கள், கல்யாண அகதிகள், கையளவு மனசு.. இப்படி அடுக்கிகிட்டே போகலாம். முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து படம் செய்ததில் பெரிய் ஆள் பாலு. எனக்கும் நிறைய இது மாதிரி நல்ல படங்கள் எடுக்கணும்னு ஆசை. சரி அதை விடுங்க. அதுதான் இன்னும் கொஞ்ச வருஷத்துக்க்காவது நிறைவேறாதே!
6. எனக்குள்ள இருக்கீற முரண்பாடுகள் பற்றி சொல்லியே தீரணும். “ஓநாயோட பார்வைல இருந்ந்து பார்த்தாதான் அது பக்கத்து நியாயம் புரியும்னு சொல்லுவாங்க” அதுனால நான் ரெண்டு பக்கத்து நியாயத்தையும் பார்த்து குழம்பிப் போயிடுவேன். மேல்தட்டு உண்மையை உணார இன்னும் நாளாகும்னு நினைக்கிறேன். உதாரணத்திற்கு பெண்கள் கல்லூரிக்கு ஜீன்ஸ் போடக்கூடாதுன்னு வாதாடுகிற கும்பலும் அதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்கிற கும்பலும் நம்பளை ரோம்ப குழப்ப்புவாங்க. ஆனா நான் இப்பொ அது முழுக்க முழுக்க பெண்ணோட சுதந்திரம்னு விட்டுட்டேன். ஏன்னா சுடிதார், புடவைன்னு கட்டிகிட்டு வரணும்னு சொல்கிறவர்கள் வெறும் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு கல்ல்லுரிக்கு வருவார்களான்னு தான் கேட்கிறேன்.
7. என்னை எப்பையுமே குழப்புகிற ஒரே விஷ்யம் மரணமுங்க். சாதிக்கணும்னு நினைத்து போராட தயார் பண்ணிகிட்டு இருக்கும் போது ஏதாவாது ஒரு மரணம் பற்றிய தகவல் வாழ்க்கையோட வெறுமையை மாற்றி மாற்றி உணர்த்தும். வருஷம் 16 பார்த்து இருக்கீங்களா? அது மாதிரிதான் நான் எடுத்த வேலைய முடிச்சு வீடு திரும்புவதற்குள் எல்லாரும் ஃபோட்டோவ்வில தான் தொங்குவாங்க போல இருக்கு. தாத்தா, பாட்டி, பிரியமான பெரியப்பா, பெரியம்மா, பக்கத்துவிட்டு சந்திராக்கா, அண்ணன் பைய்ன் யதுநந்தன்(7 வயசு)… இப்படி இந்த ஆறு வருஷம் ரொம்ப கசப்பான மருந்தைதான் கொடுத்து இருக்கு.
8. இப்போ நான் துவங்கனும்னு நினைக்குற மென் – பள்ளி (e-school). இதுக்காக ஒரு பதிவு போட்டும் கொஞ்சமான பதில் மட்டும் வந்திருக்குதேன்னு ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும் நம்மளால முடியும்னு எங்கையோ மனசுல ஆழமான ஒரு நம்பிக்கை இர்ருக்கத்தான் செய்யுது.
அப்பா ஒரு வழியா நம்மளைப்பற்றி எழுதி முடிச்சிட்ட்டேங்க.
ஆனால் இந்தப் போட்டியை நானே முடிச்சுவச்சதா இருக்கட்டுமே. அதுனால நான் யாரையும் கூப்பிடலை ரைட்டா……………







அடடா, கலக்கலான விசயங்களா எழுதி தள்ளிட்டீங்க. வாழ்த்துக்கள்
ஆஹா…நிறைய விஷயங்கள் உன்ன பத்தி தெரிஞ்சுட்டேன்….ரொம்ப நல்லா வந்து இருக்கு…. இந்ஹ்ட முரண்பாடு உனக்கும் இருக்கா..எனக்கும்…
நீ எடுக்குற முயற்சிகள் கண்டிப்பா வெற்றி அடையும்..
//நான் ரெண்டு பக்கத்து நியாயத்தையும் பார்த்து குழம்பிப் போயிடுவேன்//
கார்த்தி மரணம் பற்றி கேள்விப்படும்போதெல்லாம்..வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அர்த்தமே குழப்பமாகிடுது இல்லயா…அதுவும் சிறு குழந்தை என்றால் ரொம்ப கஷ்டம்.தான்.
முரண்பாடுகள்…. நீங்கள் சொல்லி இருப்பது போல அந்த அந்த வாழ்க்கை சூழல் , நிர்ணயிப்பது தான். நாம மிடில்கிளாஸ் என்றால் நமக்கு மேலிருப்பவர்களும் கீழிருப்பவர்களும் செய்வது நமக்கு தவறாக வே படுகிறது. உடை விஷயம் காலம்காலமா மாறி வருது.. நாமளே கட்டுப்பாடு போட்டு அதை ஒன்னு ஒன்னா மீற ஆரம்பிச்சது தானே.
மென்பள்ளி விசயம் நல்லா புரியல…….அதனால அந்த பதிவுக்கு என்ன சொல்றது….வாழ்த்துக்கள் நிச்சயம் கனவு பலிக்கட்டும்.
கார்த்தி மரணம் பற்றி நான் இப்போ சில வாரங்களுக்குள்தான் அறிந்து கொண்டேன்.
ஆனால் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தைக் கற்றுக் கொண்டீர்களா!