வணக்கம்,
என்னுடைய ஆசையை மதித்து பூங்கா இதழில் பதிவு செய்த பெரியோர்களுக்கு என் நன்றிகள்.
நான் சொல்லிய விஷயம் குறித்து இன்னும் தெளிவாக எழுதலாம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இதோ e-schools பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
மென் பள்ளிகள் (e-schools) என்பது வலையுலகை மூலதனமாக வைத்து நடத்தப்படும் பள்ளிகள். இது குறித்து உலக அளவில் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இந்தியாவில் இன்னும் இது திட்ட அளவிலேயே தான் உள்ளது. ஐ.நா. வின் global e-schools and communities initiatives என்ற திட்டத்தின் மூலமாக Information and Communication Technologies ஐ கல்வித்துறையில் பயன்படுத்த பல திட்டங்கள் இயற்றப் பட்டு வருகிறது. இவர்கள் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதன் மூலமாகத் தொழிற்கல்வி திட்டத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளனர். இது மிகவும் சுலபமாக முடியும் ஏனென்றால் நாம் கற்றுக் கொடுக்க வேண்டியவர்கள் வயதுக்கு வந்தவர்களாகவே அமைகின்றனர். ஆனால் வலை மூலமாக ஒரு மென்பள்ளி உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களை வைத்து செயல்படுகிறதா அது முடியுமா என்று வலை முழுவதும் தேடிய பின்புதான் அது முடியும் என்ற நம்பிக்கை கொள்வது போல் கனடாவில் உள்ள ஒரு மென் – பள்ளி தென்பட்டது. உங்கள் பார்வைக்காகவும் நமது திட்டத்திற்காகவும் இதோ அது குறித்து சில விளக்கங்கள்.
அந்த மென் – பள்ளியின் வளாகத்தை இங்கே சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்.
முதலில் அவர்களுடைய நோக்கத்தை சற்று பார்ப்போம்.
வேலை காரணமாகவோ குடும்பச் சூழல் காரணமாகவோ பள்ளி செல்ல இயலாதவர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வீட்டில் அமர்ந்த படியே அவர்களால் தங்களது படிப்பைத் தொடரமுடியும். இதுகிட்டத்தட்ட நான் முந்தையமடலில கூறியதோடு ஒத்துப் போகிறது அல்லவா. ஆனால் இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு இவற்றை எப்படிசெய்யப் போகிறோம் என்பது தான் நமது முதல் பிரச்சனை. முதலில் நாம் இநத அமைப்புக்கு ஏற்ற மென்வளாகத்தை (domain) அந்தப் பள்ளியின் அமைப்பைப் போன்று ஒரு பக்கம் ஏற்படுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க software engineersஓட வேலை. நமக்கு அவ்வளவு அறிவு கிடையாதுங்க.. அப்புறம் அவர்களுக்குத் தேவையான பாட திட்டத்தை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடத்தையும் எந்த முறையில் நாம் அமைக்கப் போகிறோம், அதன் விளைவை எப்படி சோதிக்கப் போகிறோம் என்பதெல்லாம் ஆசிரியர் பயிற்சி பெற்ற சிலருடைய உதவியோடு நாமே செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதைவிட முக்கியமான கட்டம் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்பதுதான். இதற்கு நான் முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்தத் துறையில் வேலை பார்க்கும் NGOக்களை தான். ஆம் அவர்களுடைய உதவியோடு பல இடங்களில் மையங்களை உருவாக்கி அங்கே இலவச கணினி வழி கல்வி வழங்க வேண்டும்.
அதோடு அந்தப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த மாணவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் சில வாக்கு மாறாத ஆசிரியர்களும் தேவை.
இவ்வளவுக்கும் தேவையான பணத்திற்கும், ஆளுதவிக்கும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய மூலங்கள் சிதறிக் கிடப்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வலைஞர்களின் ஆதரவைத்தான் மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன். அது எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறும்…
அயன்.







Hi,
Nice one…
If you wish, i can develop the website.
சிந்தனை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், தேர்வுகள் [tests] இணையத்திலேயே மாணவர்களுக்கு வளங்கப்படுமா (அ) நேரடியாக குறிக்கப்பட்ட இடங்களில் [ஊருக்கு ஒரு இடம் என்று ஏதாவது] வளங்கப்படுமா?
என்னாலான முயற்சிகளை செய்கிறேன். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் எடுத்திருப்பது ஒரு பெரிய வேலை, சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சித்தே வெற்றி பெறும்.
_______
CAPitalZ
ஒரு பார்வை
இதுக்கு பின்னூட்டம் வரலன்னதும் புதுப்பதிவா …அதுவும் கேட்சியா தலைப்பு வைத்து …ம்..கலக்குங்க
அப்புறம் ஒரு கணக்கெடுப்பு வருமா பின்னாடியே…:)
முத்துலட்சுமி அக்கா,
ஒரு தடவை ஒன்னு பண்ணா அதுவே திரும்பியும் பண்ணுவேன்னு நினைச்சீங்களா…
இல்லை உண்மையில் எனக்கு ரொம்ப நாளா மன்சுல் இருந்த ஆதங்கத்தைத் தான் வெளிப்படுத்தினேன். வேற ஒன்னும் இல்லை. மற்றபடி நான் சொன்னதுலயும் நியாயம் இருக்குதா இல்லையா?
யக்கோவ்,
இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எனக்குத் தேவையான அள்வுக்கு வந்துச்சு. பதிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதை வெளியிடல. மேலும் அவர்களோடு தனிமடல் தொடர்பு ஆரம்பம் ஆயிடுச்சு.
அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப் படும்.
கார்த்தி…
தனி மடல்ல கருத்துக்கள் வந்ததே சந்தோஷம் தான்….. எடுக்க வேண்டிய முயற்சிகள் எடுப்போம்….அப்புறம் பார்க்கலாம்….