Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஆகஸ்ட், 2007 க்கான தொகுப்பு

                நான் காலேஜ் படிக்கும்போதே நாவல் எல்லாம் எழுதுறதுக்கு நோட் புக் வாங்கி வச்சிருப்பேன். ஆனா சில நண்பர்கள் என்னை சீக்கிரம் கதையை முடிக்க வைக்கணும்ங்கிறதுக்காக அந்த நோட்ல இருக்கிற பக்கங்களை கிழிச்சு சிறிசாக்கி ஏமாத்துவாங்க. அது மாதிரி தாங்க நேற்று நட்சத்திர வார முடிவுரை எழுதலாம்னு காத்துகிட்டு இருந்தேன், ஆனா மழை அடிச்சதால நெட் வரலை. யாரு செஞ்ச சதியோ? இப்ப தான் வந்தது. 
சரி மேட்டருக்கு வரேன். இந்த ஒரு வாரமும் நிச்சயமா எனக்கு நல்ல வாரமா இருந்தது. சில ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்க ஆரம்பிச்சேன். [...]

முழு பதிவையும் வாசிக்க »

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமிதம் நீர்த்து.                                                     (சிறுமை : காமம்)
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.                         
(இவறல் : கடும் பற்றுள்ளம், ஏதம் : குற்றம்)
இது ரெண்டு குறளும் குற்றங்கடிதல் என்கிற அதிகாரத்துல நாம களைய வேண்டிய குற்றங்களாக வள்ளுவர் சொல்றாருங்கோ.  அதெல்லாம் என்னாதுன்னு பாத்தா… செருக்கு : துட்டு வந்தா ஓவரா ஆடுறதுன்னு வச்சிகிலாம், சினம் : ரொம்ப கோபப்படுறது, சிறுமையும் : ஓவரா சைட் அடிக்கறது இல்லாகாட்டி ஐடத்துகிட்ட போறதுன்னு வச்சிகலாம், இவறல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

அட ஆமாங்க ஒரு வாரம் நட்சத்திரமா நான் என்னைப் பற்றி சொல்வதைவிட உங்களுடைய பங்களிப்பை அதிகமாக எதிர்பார்த்தேன்  என்பது உண்மை.  அது தாங்க முன்னமே எழுதி வச்ச என்னுடைய நல்ல கதைன்னு நான் நினைச்சு பலராலும் வாசிக்கப் படாம விட்ட ஒரு கதையைத் திருப்பிப் போடறேன்.  ஏற்கனவே படிச்சவங்க இன்னொரு மீள்வாசிப்பு பண்ணிப் பாருங்களேன். இந்தக் கதை பிடிக்கலாம்.
…………………………………………………………………………………………………………………………………………….

இலவசம்
 
                       சென்னையின் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு அருகே வந்து அம்ர்ந்தாள். நீதி மன்றம் அருகே தான் உள்ளது. ஆனால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

அட ஆமாங்க மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த கட்சிகள். அவை எல்லாம் ஒவ்வொரு மூலையில நின்றுகிட்டு ஒவ்வொருத்தரையும் திட்டி தீர்க்கிறத இப்போ தொலைக்காட்சி வரைக்கும் கொண்டு வந்திட்டாங்க.
அதே இரெண்டு கட்சி அரசியல் அமைப்பு கொண்ட அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னாடி ரெண்டு தலைமையும் ஒரே மேடையில் ஒவ்வொருத்தருடைய கருத்துகளையும் சொல்லி விவாதம் பண்றாங்க. 
  இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான விவாதம் நம்ம நாட்டுக்கு ரொம்ப அவசியம்னு நான் நினைக்கிறேன். மத்திய அரசிலாவது தலைமைகள் ஒரே மேடையைப் பகிர்வதை பார்த்திருக்கிறோம். மாநில அரசுகள் ம்ம்ம்…
இன்னும் எவ்வளவு நாள் தான் ஓட்டுப் போடுகிறவங்களை இப்படி ஏமாத்திகிட்டு இருக்கப் போறாங்க?  [...]

முழு பதிவையும் வாசிக்க »

                தொலைக்காட்சிகள் சமீப காலமாகக் கட்டுப்பாடின்றி பல நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது நாம் கண்டு வரும் உண்மை. தேவையில்லாத செய்திகளை பரபரப்பாக மாற்றுவது, சிலரின் தனிமையில்  நுழைந்து அசிங்கப்படுத்துவது, சஞ்ஜ்ய் தத்தை தியாகி ஆக்குவாது என பல வரம்பு மீறல்கள் கண்கூடு.
                 இவை அனைத்தையும் கட்டுப்பட்டுத்த அரசு ஒளிபரப்பு கட்டுப்பாடு மசோதா ஒன்று தயாரித்து உள்ளது. மொத்த தொலைக்காட்சி நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்த முறை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பாடும் என்று தெரிகிறது.
                 ஆனால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நட்சத்திர வாரத்தில் அனைவருடைய சிந்தனைக்கும் தீனி போட விரும்பி இதோ ஒரு சின்ன போட்டி ஒன்று வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
            அபோகாலிப்டோ படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பலருக்குத் தெரிந்திருக்க கூடும். அந்த படத்தில் ஒரு பெரியவர் கதை ஒன்று சொல்வார். அதாவது மனிதன் காட்டில் இருக்கும் விலங்குகளிடம் தனக்கு தேவையான ஒவ்வொரு பலத்தையும் வரமாகப் பெற்றுச் செல்வானாம். அப்பொழுது ஒரு ஆந்தை இவன் நம் அனைவரையும் விட பலசாலியாகி விடுவானோ என்று சந்தேகப் பட்டு கேட்கும். [...]

முழு பதிவையும் வாசிக்க »

                டெல்லியில் சென்ற மாதம் ஒன்பதாவது ஓசியான் (ஆசிய-அரபு) திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒரு படத்திற்கு 20 ரூபாய் மட்டும் டிக்கட் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் க்ரீன் பார்க், பி.வி.ஆர் திரையரங்குகளில் ஒரு வாரம் 100க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் நண்பர்களோடு நானும் கடைசி நாள்தான் சென்று பார்த்தேன். உலக அளவில் இருந்து பல நல்ல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், இந்தியப் பிரிவிற்கான போட்டியில் பருத்திவீரன் திரையிடப் [...]

முழு பதிவையும் வாசிக்க »

                கொஞ்ச நாட்களுக்கு முன் ருத்ர வீணை என்ற தொடர் சன் டி.வி. யில் ஒளிபரப்பான தொடரை பலர் பார்த்திருக்கக் கூடும். அதில் தொடருக்கு முன் ஒவ்வொரு கருநாடக இசையின் ராகத்தால் ஏற்படும் நண்மைகள் குறித்து ஒரு சிறு விளக்கப் படம் இருக்கும்.  திருட வந்தவனின் மனத்தைத் திருத்துவது, தீராத வயிற்று வலியைப் போக்குவது, செல்வங்கள் வந்தடைவது என பல மானுட தேவைகளை தீர்த்து வைக்க இந்த இசை எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது [...]

முழு பதிவையும் வாசிக்க »

                திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.
               குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் -
               குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
               குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
              குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
              குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
என்கிறார்.
              அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு [...]

முழு பதிவையும் வாசிக்க »

                நியூ டெல்லி இரயில் நிலையம்.  பன்னிரண்டாவது ப்லாட்ஃபார்ம் என்ற உடனேயே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ் தான். அன்று நான் திரும்பும்போது ஆறு வருடத்திற்கு முன்பு கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த சமயம் நிகழ்ந்த சம்ப்வம்தான் நினைவிற்கு வந்தது. முதல் முறையாக அரைகுறை மொழியறிவோடு தமிழகம் விட்டு வெளியேறும்போது 18 வயது இளைஞனின் மனதில் இருக்கின்ற ஒரு பாதுகாப்பின்மையும் தான் நினைவிற்கு வந்தது. அந்த கசப்பான நினைவை மனத்தில் அசைபோட்டுக் கொண்டு வண்டிக்குள் ஏறி [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »