திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.
குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் -
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
என்கிறார்.
அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரெண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடோடு பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.
மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிக்கும் x, y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அப்படி இருக்க திருமூலரின் பாடலிலும் உண்மை உண்டென்றால் நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது? இன்னும் திருமந்திரத்தில் குழந்தை ஊனமாகப் பிறப்பது குறித்தும், குழந்தையின் ஆயுள் நிர்ணயிக்கும் நேரம் குறித்தும் பல கருத்துகள் உள்ளது. ஏன் அதை தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து…. நீங்க எப்படி?







நல்ல செய்திதான்… மேலும் இருந்தா பதிவு செய்யுங்க. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கும், குழந்தை பெற விரும்புபவர்க்கும் உதவியா இருக்கும்!
வணக்கம் ராஜா,
இதுல என்ன ஒரு சிக்கல்னா, திருமூலர் சொல்வது அனைத்தும் மூச்சுப் பயிற்சியின் அடிப்படையில் வருவது. நானும் அதை முழுவதுமாகக் கற்றது கிடையாது. மற்றொன்று நமக்கு புத்தக அறிவைத் தவிற வேறு எதுவும் கிடையாது. மருத்துவமும் கை மருத்துவம் தான். படித்த செய்தியைக் கொடுக்கின்றேன் மற்றபடி இந்தத் துறையில் தேரியவர்களின் அனுபவம் தான் பலருக்கு உபயோகப் படும்.
நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது?
நீங்கள் சொல்வது சரிதான்.
நம்ம ஆளுங்க எல்லாத்தையும் பூடகமாத்தான் சொல்லி வச்சிருப்பாங்க…அறிவியலை ஆன்மீகத்தோட இணைத்து என்ன என்ன வோ சொல்லிவச்சாங்க இன்னிக்கு யார் அதெல்லாம் பின்ப்ற்றுராங்க…வெற்று நம்பிக்கைன்னு எத்தனையோ விசய்த்தை தூக்கிப்போட்டாச்சு…
நான் இதுவரைக்கும் இதுபோன்ற அறிவுரைகளை கேள்விபட்டதும் கூட கிடையாது. இதெல்லாம் எந்த அளவுக்கு நடைமுறைக்கு விஞ்ஞான அறிவியல் பூர்வமா சாத்தியமோ?
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
அயன்,
திருமூலரின் (கள்) கருத்துக்கள் ஆணாதிக்க வெளிப்பாடேயன்றி, அறிவியல் உண்மையல்ல.
வலது (சோத்தாங் கை) – ஆண்
இடது (பீச்சாங் கை) – பெண்
பழங்கால இலக்கியத்தில் சொல்லப்பட்டவற்றையும், இனிமேல் பிற்காலத்தில் சொல்லப்படுபவற்றையும், அக்கால கட்டங்களில் நில்விய காலாச்சாரோத்தோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டுமேயன்றி, இதுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்யச் சொல்லி ஏற்கனவே அறிவியலுக்கு ஒதுக்கப்படும் குறைவான பணத்தை வீண்டிக்கச் சொல்லாதீர்கள்.
குறிப்பு: நான் முறையாகச் சித்த மருத்துவம் பயின்றவன்.
மூச்சுப் பயிற்சியின் அடிப்படையில் வருவது. நானும் அதை முழுவதுமாகக் கற்றது கிடையாது.
சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள்.
திருமூலர் சொன்னதில் எவ்வளவு உண்மை என்று முயற்சித்ததில்லை.
//6 தங்கவேல்
அயன்,
திருமூலரின் (கள்) கருத்துக்கள் ஆணாதிக்க வெளிப்பாடேயன்றி, அறிவியல் உண்மையல்ல.
//
I strongly condemn this view of yours. mr thangavel. read thirumoolam completely.
படிக்கும்போதே சந்தேகமா இருந்தது.. நம்ம டாக்டரைய்யா தெளிவுப்படுத்திபுட்டாரு..
திரு. வேழம் (அழகான பெயர்),
எனது முந்தைய பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள், குறிப்பாகக் கீழ்க்கண்ட வரிகளை
//பழங்கால இலக்கியத்தில் சொல்லப்பட்டவற்றையும், இனிமேல் பிற்காலத்தில் சொல்லப்படுபவற்றையும், அக்கால கட்டங்களில் நில்விய காலாச்சாரோத்தோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டுமேயன்றி, //
அப்புறமும் புரியவில்லையென்றால், மன்னிக்கவும், நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
திரு தங்கவேல் அவர்களே,
//பழங்கால இலக்கியத்தில் சொல்லப்பட்டவற்றையும், இனிமேல் பிற்காலத்தில் சொல்லப்படுபவற்றையும், அக்கால கட்டங்களில் நில்விய காலாச்சாரோத்தோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டுமேயன்றி, //
உங்களுடைய இந்த கருத்துக்கு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். திருமூலர் சொல்வதில் அறிவியல் உண்மை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் திருமந்திரமும் ஒரு ஆணாதிக்க சிந்தனையோடு படைக்கப் பட்ட இலக்கியம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியல்லை. ஒவ்வொரு அடிகளிலும் சிவ-சக்தியின் சரியான வழிபாட்டு வடிவமும், ஈடுபாடும் கொடுக்கப் பட்டதை பார்த்தால் அது புரியும். நேற்று சொன்ன விஷயம் தான் எல்லாவற்றையும் பொதுமைப் படுத்த முடியாதல்லவா?
பொன்ஸ் –
என் சந்தேகமும் தீர்ந்து போனது…..
வடுவூராரே நிச்சயம் சீக்கிரம் கற்றுக் கொள்கிறேன்.
முத்தக்கா மற்றும் மாசிலாவிற்கு நம்ம சலாமுங்க…
தங்கவேல் சொல்வதை புளியமரத்தடியில் நின்று ஏற்றுக்கொள்கிறேன்…
it is true..ture..true…
first you test your self.
you breath in your right side nostle. you get orgasm too early. so your semen reaches first into the @@GARPPA ARRAI@@ so the baby possible to be a male.
you breath in your leftside nostle. you get orgasm too late. so first your partner’s egg reaches first into the @@ garppa arrai@@ so the baby possible to be a female.
FACT: semen or egg which one reaches first into the garppa arrai that made be a baby’s body.
x and y chromosomes are delivered by your science.
அயன்
காம சூத்திரத்திலும் இது போன்ற வரிகள் இருப்பதாக கேள்விப் பட்டுள்ளேன்.
அலோகோபதி மட்டும்தான் மருத்துவம் அறிவியல் என்றால் திருமூலரின் இந்த வரிகள் அபத்தமாகப் படும். ஆனால் மருத்துவத்தையோ அறிவியலையோ ஒரு வட்டத்திற்குள் வைத்தால் இழப்பு மனித இனத்திற்குத்தான்.
மற்றபடி இந்த ஆராய்ச்சிக்கு செலவு யார் செய்வது என்பது Million Dollar Question..
சில ஆடம்பர அரசு விழாக்களையும் திரைப் பட வெற்றி விழாக்களையும் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கலாம்.
நன்றி
‘Thirumandiram ‘ is known as ‘Irumbukadalai’ i.e. so difficult to understand. It cannot be ignored as baseless. Dr. Jayam Kannan has written in detail about all matters related to childbearing dealt with in Thirumandiram. She may be able to give some explanations in this matter.
//திருமூலரின் (கள்) கருத்துக்கள் ஆணாதிக்க வெளிப்பாடேயன்றி, அறிவியல் உண்மையல்ல.
//
தங்கவேல் என்பார் எழுதிய (கள்) என்ற சொல்
இவர் ஓரளவும் திருமந்திரம் படித்தவரல்ல என்று
சொல்கிறது.
//பழங்கால இலக்கியத்தில் சொல்லப்பட்டவற்றையும், இனிமேல் பிற்காலத்தில் சொல்லப்படுபவற்றையும், அக்கால கட்டங்களில் நில்விய காலாச்சாரோத்தோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டுமேயன்றி,
//
ஒரு சித்த மருத்தவம் முறையாகப் பயின்றவர் என்று
சொல்லும் இவர், பழம் இலக்கியங்களை “கலாச்சாரத்தோடு”
இணைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வது
மருத்துவத்துக்கும் இவருக்கும் நீண்ட இடைவெளியோ
என்று எண்ணத்தோன்றுகிறது.
மூச்சு விடுவது என்ன கலாச்சாரச் செயலா என்பதை
அவர்தான் விளக்க வேண்டும்.
இவர் சொல்வதைப் பார்த்தால் திருமூலர் காலத்தில்
மூக்கால் மூச்சு விட்டார்கள் என்பது போலவும்,
இப்பொழுது அப்படி இல்லையோ என்பது போலவும்
இருக்கிறது.
திருமந்திரம் கள் என்றால் அதைவிட அறியாமை வேறேதும்
இல்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
டாக்டர் திருமதி ஜெயம் கண்ணன் அவர்கள், இவர் ஒரு ஆங்கில மருத்துவர், மகப்பேறு நிபுணர், சென்னையில் இவரின் கர்ப்பரட்சாம்பிகை ஆஸ்பத்திரி, பிரபலம் ஆனது, இவர் திருமந்திரத்தை நன்கு ஆராய்ந்து ஒரு பெரிய கட்டுரைத் தொடர் எழுதி உள்ளார். இது “மங்கையர் மலர்’ என்னும் பெண்கள் பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. அதில் திருமூலர் இந்த ரத்தக் குறைபாட்டினால் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை போன்றவை பற்றியும் விளக்கி இருப்பதாய்க் கூறி அதை எடுத்தும் காட்டி இருந்தார். இப்போ என்னிடம் இருந்த அந்தப் புத்தகத் தொடர் தொலைந்து விட்டது. ஆனால் நண்பர் மூலமாய் அது பற்றிய கட்டுரையைக் கேட்டுப் பெற முயற்சிக்கிறேன். திருமூலர் எழுதி இருப்பது பற்றியும், ஆங்கில மருத்துவம் கூறுவதையும் அவர் மிக நன்காய் எடுத்துக் காட்டி இருந்தார். இது பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல் சிலர் பேசுவது மனதுக்குக் கஷ்டமாய் உள்ளது.
தங்கவேல் சொல்வதை புளியமரத்தடியில் நின்று ஏற்றுக்கொள்கிறேன்…
HA HA HA HA HA HA ……………….. LOLLU
[...] மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல… திருமந்திரத்தில் நம் வாழ்வியலு […] [...]
அயன்,
என்னுடைய விமரிசனம், நீங்கள் எடுத்தாண்டிருக்கும் திருமூலரின் வரிகள் குறித்துத் தானே தவிர முழு திருமந்திரம் குறித்தல்ல.
//sri
it is true..ture..true…
first you test your self.
you breath in your right side nostle. you get orgasm too early. so your semen reaches first into the @@GARPPA ARRAI@@ so the baby possible to be a male.
you breath in your leftside nostle. you get orgasm too late. so first your partner’s egg reaches first into the @@ garppa arrai@@ so the baby possible to be a female.
FACT: semen or egg which one reaches first into the garppa arrai that made be a baby’s body.
x and y chromosomes are delivered by your science.//
மனம் விட்டு சிரிக்க வைத்த வரிகள். எள் முனையளவு அறிவியல், மற்றவையெல்லாம் இட்டுக்கட்டிய பொய்கள் என்றளவில், தற்போது சில சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் தோன்றி எனர்ஜி மருத்துவம், நியூமராலஜி, பராம்பரிய மருத்துவம் என்ற ரீதியில் பகற்கொள்ளயடிக்கும் திருடர்களின் இலக்கணம் மேலே பின்னூட்டமிட்ட நபருக்கு முழுமையாகப் பொருந்துகிறது. முதலில் மனித இனப்பெருக்கம் குறித்து இணையத்தில், நல்ல தளங்களில், சிறிது தேடினாலே நிறைய விசயங்கள் துலங்கும் என்று அந்த நபருக்கு, உண்மையாகவே ஆர்மிருக்கும் பட்சத்தில், சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
//அலோகோபதி மட்டும்தான் மருத்துவம் அறிவியல் என்றால் திருமூலரின் இந்த வரிகள் அபத்தமாகப் படும். ஆனால் மருத்துவத்தையோ அறிவியலையோ ஒரு வட்டத்திற்குள் வைத்தால் இழப்பு மனித இனத்திற்குத்தான். //
சிவபாலன்,
அலோபதி மட்டும்தான் அறிவியல் மருத்துவம் என்று நான் எங்கும் சொல்லவில்லையே! இதுதான் நம்மிடமுள்ள பெரிய குறை. தவறான திருமந்திர வரிகளை விமரிச்சித்தால், உடனே உணர்ச்சி வசப்பட்டு, பிரச்சனையை வேறு தவறான கோணத்திற்கு (தெரிந்தோ, தெரியாமலோ) திசைதிருப்புதல் வழமையாக நடந்துவருகிறது. சிவ்பாலன் நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை என எனக்குப் புரிகிறது.
நமது மண்ணின் மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம் என்ற இரண்டையும் ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். கூடிய விரைவில் எனது வலைப்பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
நன்றி.
I know yoga and read thirumandiram well and I have read all the above blogs. the discussion is like how everyone is looking the stone in their views and none of them fully read the book well. Without any expereince none of the ancestor wrote any books. Its all true and you can ask any doubt in that book I will explain.
Thanks
Venkat R.
thank you for your commands mr. thangavel
//திருமூலரின் (கள்) கருத்துக்கள் ஆணாதிக்க வெளிப்பாடேயன்றி, அறிவியல் உண்மையல்ல//
மேற்கண்ட எனது சொற்றொடர் மிகவும் பொதுமைப்படுத்துவதாக ஆகிவிட்டதை இப்போதுதான் கவனித்தேன். அவசரத்தில் நடந்துவிட்டது. மன்னிக்கவும், ஆயினும் அதன்பின் என்னுடைய பின்னூட்டத்தில் எனது நிலையைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
//திருமந்திரம் கள் என்றால் அதைவிட அறியாமை வேறேதும் இல்லை.//ஆ
நான் ‘கள்’ விகுதியைச் சேர்த்தது திருமூலர் என்பார் ஒருவர் தானா! அல்லது நம்முடைய தமிழ் மரபுப்படி வேறு சிலரும் அத்தகைய பெய்ருடன் எழுதியுள்ளார்களா என்பதைச் சுட்டிக்காட்டவே தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. ஏனெனில், திருமந்திரத்தில் இடைச்செருகல் (கள்) இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அவ்வையார், திருவள்ளுவ நாயனார் (சித்த மருத்துவ குறிப்புகள் எழுதியுள்ளார்), அகத்தியர் போன்ற பலருக்கும் தமிழ் மரபில் போலிகளோ அல்லது அவர் (கள்) மீது பற்றுக் கொண்டு அவர் பெயரையே தம் பெயராக வைத்துக் கொண்டவர்கள் சிலர் இருப்பதை குறித்தே ‘கள்’ விகுதியைச் சேர்த்தேன் என்பதை திருவாளர் நாக இளங்கோவன் புரிந்து கொண்டால் சரி.
//பழம் இலக்கியங்களை “கலாச்சாரத்தோடு”
இணைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வது
மருத்துவத்துக்கும் இவருக்கும் நீண்ட இடைவெளியோ
என்று எண்ணத்தோன்றுகிறது.
மூச்சு விடுவது என்ன கலாச்சாரச் செயலா என்பதை
அவர்தான் விளக்க வேண்டும்.
இவர் சொல்வதைப் பார்த்தால் திருமூலர் காலத்தில்
மூக்கால் மூச்சு விட்டார்கள் என்பது போலவும்,
இப்பொழுது அப்படி இல்லையோ என்பது போலவும்
இருக்கிறது.//
ஐயா. நாக இளங்கோவனாரே முதலில் எனது முதலாவது பின்னூட்டத்தை சற்று ஒழுங்காகப் படித்துப் பாரும். நீர் உம்மை ரொம்ப அறிவாளி என்று காட்டிக்கொள்வதாக நினைத்து உமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்.
மற்றபடி திருமூலர் மேலோ அல்லது நமது மூதாதையர் மேலோ நமக்கு பற்ற்றிருக்கலாம், அதற்காக அவர்கள் காலத்தை அவர்கள் பிரதிபலித்த சில விசயங்களுக்கெல்லாம், இன்றைய அறிவியல் முலாம் பூசுவது அறிவுடைமையன்று என்பதே என் விமரிசனத்தின் சாராம்சம்.
நம்மூரில் கொஞ்சூண்டு அறிவியல், இன்னும் கொஞ்சம் ஆன்மீகம், மேலும் கொஞ்சம் பிரபல்யம், நிறைய இட்டுகட்டியவை இவைகளோடு எழுதப்படும் புத்தகங்க்ள் சிலாகிக்கப்பட்டு, நம்பப்படுவது ஒன்றும் ஆச்சரியமல்லவே.
வணக்கம் ஸ்ரீ,
நீங்கள் திருமந்திரத்தை ஆதரித்து எழுதியது புரிகிறது ஆனால் உங்கள் கருத்தில் அறிவியல் புரிதல் முழுமையாக இல்லையோ என்பது தெளிவு, திரு தங்கவேல் அவர்கள் அதைத்தான் கொஞ்சம் காமெடியாக எழுதியுள்ளார். உங்கள் மனது புண்பட்டிருக்குமெனின் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
செந்தழலார், சிவா, சிவபாலன் வருகைக்கு நன்றி!
தொண்டன், கீதா சாம்பசிவம் அவர்கள் கொடுத்த தகவல் உபயோகமானதாக இருந்தது. மிக்க நன்றி. கீதா அவர்கள் அந்தக் கட்டுரை கிடைத்தால் உடன் எனக்குத் தனி மடலில் அனுப்பவும். தங்க்வேல் முழுவதுமாகா புரியாமல் எழுதவில்லை, தன் கருத்துககளை முழுவதுமாக எழுதவில்லை. ஆகவே வருத்தம் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.
திரு வெங்கடேஸன் அவர்களின்ன் வருகைக்கு நன்றி. நிச்சயம் சந்தேகம் வரும்போதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.
நாக இளங்கோவன் அவர்களே முதல் பின்னூட்டத்தில் சற்று தெளிவில்லாமல் தங்கவேல் எழுதி இருப்பினும் பின்பு அதைத் தெளிவுப்படுத்தி விட்டார். ஆக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்கியே தீர வேண்டும்.
தங்கவேல் அவர்களே தங்களுடைய பகிற்விற்கு மிக்க நன்றி. இந்தத் தெளிவு முதல் பின்னூட்டத்தில் இல்லாததாலே சிலருக்கு வருத்தமுற்று பேசி இருக்கக் கூடும். அனைவர் சார்பிலும் நான் உங்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருத்தப்பட வேண்டாம். நாக இளங்கோவனாரையும் கோவிக்க வேண்டாம் சரியா?
இறுதியாக அனைவருடைய கருத்தும் ஒன்றாகவே இருந்துள்ளது ஆனால் வெளிப்படுத்திய விதங்கள் சிலரை சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது இதைப் புரிந்து கொண்டால் இனி பிரச்சனை இருக்காது சரியா?
தங்கவேல்
தங்களை தாக்கவோ அல்லது திசை திருப்பவோ நான் முயலவில்லை. அப்படியாகின் என் வருத்தத்தை இங்கே கூறிவிடுகிறேன்.
தங்கள் இடுக்கைக்காக காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்!
நன்றி!
தங்கவேல் அவர்களுக்கு:
கள் என்ற பயன்பாட்டைப் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
//ஐயா. நாக இளங்கோவனாரே முதலில் எனது முதலாவது பின்னூட்டத்தை சற்று ஒழுங்காகப் படித்துப் பாரும்.
//
முதலில் சொல்ல வருவதை “ஒழுங்காக எழுதினால்”
படிப்பவர்களும் ஒழுங்காகப் படிப்பார்கள். யாருக்கும் ஒழுங்காகப் படித்துப் பார்க்கச் சொல்லி அறிவுரை கூற
வேண்டியதில்லை பாருங்கள்!
//நீர் உம்மை ரொம்ப அறிவாளி என்று காட்டிக்கொள்வதாக நினைத்து உமது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்.
//
நான் அறிவாளி அல்ல என்பது உண்மை. ஆனால்,
அறிவாளிகளைக் காண முடியாதவன் இல்லை.
//பழங்கால இலக்கியத்தில் சொல்லப்பட்டவற்றையும், இனிமேல் பிற்காலத்தில் சொல்லப்படுபவற்றையும், அக்கால கட்டங்களில் நில்விய காலாச்சாரோத்தோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டுமேயன்றி, இதுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்யச் சொல்லி ஏற்கனவே அறிவியலுக்கு ஒதுக்கப்படும் குறைவான பணத்தை வீண்டிக்கச் சொல்லாதீர்கள்.
//
நீங்கள் சித்த மருத்துவம் படித்திருக்கிறீர்கள் என்றால்,
மருத்துவத்தில் நிபுணராக இருக்கக் கூடியவர். மற்ற மருத்துவங்களையும் உணர்ந்திருக்கக் கூடியவராகவும்
இருப்பீர்.
அயன் ஒரு மந்திரச் செய்யுளை போட்டு, இப்படி
முடியுமா என்ற பகிர்தலை வைத்துள்ளார்.
அதற்கு, ஒரு மருத்துவரான நீங்கள், இது தவறு
அல்லது இல்லை இப்படி இருக்க வாய்ப்பேயில்லை
என்று சொல்லலாம்.
சித்த மருத்துவத்தில் இப்படிச் சொல்லப் படவே
இல்லை – இடகலை, பிங்கலை என்பதெல்லாம்
சித்த மருத்துவத்தில் இல்லை என்றும் கூட
சொல்லலாம்.
உங்கள் மருத்துவச் சிறப்பின் மேல் நின்று, இந்தச் செய்யுள்
திருமூலரின் செய்யுளாயினும், அல்லது இடைச்செருகலாயினும் முட்டாள்தனமான ஒன்று என்று
கூட சொல்லலாம். ஏனென்றால் உங்களின் உயர்ந்த மருத்துவ அறிவின் பாற்பட்டு “முட்டாள்தனம்” என்று சொல்வது உங்களுக்கு எளிது.
ஆனால், மருத்துவ விஞ்ஞானக் கூறுகளை எல்லாம் விட்டுவிட்டு கலாச்சாரக் கூறின்படி பார்க்க வேண்டும் என்று
கூறுவது எந்த வகையில் சரி?
மீண்டும் கூறுகிறேன் – மருத்துவ வழியில் நீங்கள் அதை
நீங்கள் தவறு என்று சொல்ல உங்களுக்கு மருத்துவ
அறிவு இருக்கலாம். ஆனால், கலாச்சாரத்திற்கும் கலவியின் போது காற்று மூக்கின் எந்த ஓட்டையின் போய் வருகிறது என்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? இதற்கு விளக்கம்
கேட்பது உங்களுக்கு மட்டுமே முட்டாள்தனமாகப் படும்
என்று நினைக்கிறேன்.
திரு.அயன்:
//நாக இளங்கோவன் அவர்களே முதல் பின்னூட்டத்தில் சற்று தெளிவில்லாமல் தங்கவேல் எழுதி இருப்பினும் பின்பு அதைத் தெளிவுப்படுத்தி விட்டார். ஆக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வாபஸ் வாங்கியே தீர வேண்டும்
//
எனது பின்னூட்டு அவரின் 6ஆம் எண்ணிட்ட பின்னூட்டை
வைத்துத்தான். நான் பின்னூட்டு எழுதும்போது அவரின்
வேறெந்த பின்னூட்டும் நான் பார்க்கவில்லை.
வாபசு வாங்கியே தீரவேண்டும் என்று கட்டளையிடுவதற்கு
பதில் நீங்கள் எனதுப் பின்னூட்டையே முடக்கியிருக்கலாம்.
எனக்கு அப்படியொன்றும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் எனது பின்னூட்டுகளை
அழித்துக் கொள்ளுங்கள். என் பின்னூட்டி இங்கே இருந்தே ஆக வேண்டும் என்று நான் ஒன்றும் அழவில்லை.
ஏதோ திருமந்திரம் பற்றியெல்லாம் இந்தப் பதிவில்
இருக்கிறதே என்று உயர்வாக எண்ணி இங்கே படிக்க வந்தேன். இப்பதான் புரிகிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அயன், உங்களது பதிவை சண்டைக்களமாக மற்றிவிட்டமைக்கு மன்னிக்கவும். எனது நேரமின்மையாலும், அவசரத்தினாலும், நீங்கள் எடுத்தாண்டிருக்கும் திருமூலரின் (களின்) வரிகள் குறித்தான என்னுடைய விமரிசனம், சற்று தெளிவின்றியைமைந்து, திருமூலரை மதிக்கும் (என்னைப்போலவே) சிலரின் வெறுப்பிற்கு ஆளாக நேர்ந்தது.
ஆனால் நான் தெளிவாக இருக்கும் சில விசயங்களில் இதுவும் ஒன்று. மேலும் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் – திருமூலர் தமிழ்க் குமூகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்களுளொருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. தமிழன் என்ற முறையிலும், இன்னும் குறிப்பாக சித்த மருத்துவப் பட்டதாரி என்ற முறையிலும் அவர் மேல் எனக்கு மதிப்புண்டு. அதற்காக அவர் சொன்னதெல்லாம் முழு முற்றான உண்மை என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. நீங்கள் எடுத்தாண்டிருக்கும் திருமந்திர வரிகளின் இன்றைய காலத்தின், (அறிவியல் முன்னேறிய), பொருந்தாமை குறித்தே எனது விமரிசனம், அதுவும் உங்கள் இடுகையின் தலைப்பில் நீங்கள் கேட்டுக்கொண்டதால்.
அதற்காக திருமூலர் முட்டாள் என்று பொருளல்ல. தமிழ்க் குமூகாயத்தில் காலங் காலமாக நிலவி வரும், வலது –ன்றால் உசத்தி – ஆண், இடது என்றால் தாழ்வு – பெண் என்ற பொதுப்புத்தியை திருமூலரும் பிரதிபலிக்கிறார் என்ற அடிப்படையிலேயே, வட்டார வழக்கைச் சற்று பயன்படுத்தி, எனது முதலாவது பின்னூட்டத்தில் விளக்க விரும்பினேன். இதனையே காலாச்சாரத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கூறியிருந்தேன். இதை வேண்டுமென்றே திரு. நாக இளங்கோவன் திரித்து மறுமொழி எழுதியுள்ளார். அவருக்கு மீண்டும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாகக் காலத்தை மீறிச் சிந்திப்பவர்களையே நாம் சிந்தனையாளர்கள் என்போம். ஆயினும் அவர்கள்ளும் அவர்தம் காலகட்டத்தைச் சேர்ந்த தவறான நம்பிக்கைகள் புகுந்துவிடுவதுண்டு. அவ்வாறு புகுந்த ஒன்றே ஆண், பெண் குழந்தைகள் குறித்த திருமூலரின் கருத்து. என் கருத்தை மேலும் வலியுறுத்த திருமூலர்: காலத்தின் குரல் என்ற நூலின் ஆசிரியரன கரு, ஆறுமுகத் தமிழன் எழுதியுள்ளதை மேற்கோளிடுகிறேன்.
“நிலன், பொழுது இவற்றிலிருந்து வெளியேறி அப்பாலே சென்றுவிட்டவர்கள் என்று கருதப்படுகிற அறிவர்களும்கூட அவர்கள் வாழ்ந்த நிலனின், பொழுதின் தேவைகளை ஒட்டியே சிந்தித்திருக்கிறார்கள்; வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.”
இதுவே என் விளக்கம். மேலும் எனது இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்,
// நம்மூரில் கொஞ்சூண்டு அறிவியல், இன்னும் கொஞ்சம் ஆன்மீகம், மேலும் கொஞ்சம் பிரபல்யம், நிறைய இட்டுகட்டியவை இவைகளோடு எழுதப்படும் புத்தகங்க்ள் சிலாகிக்கப்பட்டு, நம்பப்படுவது ஒன்றும் ஆச்சரியமல்லவே.//
என்று நான் குறிப்பது திருமந்திரம் குறித்தல்ல. மருத்துவர் ஜெயம் கண்ணன் எழுதிய புத்தகம் குறித்துத் தான்.
// தங்களை தாக்கவோ அல்லது திசை திருப்பவோ நான் முயலவில்லை. அப்படியாகின் என் வருத்தத்தை இங்கே கூறிவிடுகிறேன்.
தங்கள் இடுக்கைக்காக காத்திருக்கிறேன்.//
சிவபாலன், நான்தான் நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை என்பதைப் பரிந்துகொண்டேன் என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேனே.
கடைசியாகவொன்று, யோகா குறித்து பல்வேறு வகையான தவறான நம்பிக்கைகள் புழக்கத்திலுள்ளன. யோகா கற்றவர் இந்த உலகத்தையே வில்லாக வளைத்துவிடுவார் என்ற ரீதியில் இவைகளுள்ளன. அத்தகைய மனோநிலையிலிருந்து எழுதப்பட்டதுதான் திரு. வெங்கடேசுவரனின் கீழ்க்கண்ட பின்னூட்டமும்.
// I know yoga and read thirumandiram well and I have read all the above blogs. the discussion is like how everyone is looking the stone in their views and none of them fully read the book well. Without any expereince none of the ancestor wrote any books. Its all true and you can ask any doubt in that book I will explain.
Thanks
Venkat R.//
இதையெல்லாம் படிக்கும்போது கிண்டல்தான் செய்யத் தோன்றுகிறது.
அயன், எனது விவாதங்களுக்கு உங்களது பதிவில் இடமளித்தமைக்கு நன்றி.
நாக இளங்கோவரே…
நான் எந்த நிலையிலும் உங்களூக்கு கட்டளை அளிக்கவில்லை. வலைப்பூவை ஒரு கருத்துப் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தும் போது, சிலருடைய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். அதே நேரத்தில் தெளிவின்மை குறித்து வருந்தும்போது அந்த வருத்ததை நாமும் நினைத்துப் பார்ப்பது நல்லது தானே. மற்றபடி நட்பு ரீதியாகத்தான் சிலரை புண்படுத்தும் விதமாக அமையும் வார்த்தைகளை வாபஸ் வாங்கலாமே என்று சொன்னேன். சண்டைக்களமாக ஆக்கி மனவருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கா பகிற்கிறோம். உங்களுக்கு என் கருத்தோடு ஒத்து போனால் ஓ.கே. இல்லாவிட்டாலும் என் வலைப்பூவை மதித்து வந்த விருந்தாளியின் கருத்து ஜொலித்துக் கொண்டுதான் இருக்கும் அதில் மாற்றம் என்றும் கிடையாது. தங்களை நான் புண்படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நாக இளங்கோவனாரே,
நான் வேண்டுமென்று உங்களை புண்படுத்தி எழுதவில்லை. உங்கள் கருத்துக்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டவே அவ்வாறு எழுத நேர்ந்தது. மேலும் விவாதத்திற்கு
ஒருதெளிவை ஏற்படுத்த எதிர்க்கருத்துடையோரைத் தூண்டவே சில வார்த்தைகளை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேனென
நம்புகிறேன். மற்றபடி தனி மனித தாக்குதலெல்லாமில்லை. உங்களது தனித்தமிழ் இடுகைகள் குறித்து, நான் வாசித்தவரையில், எனக்கு பெரிதும் இணக்கமுண்டு.
ஆனால் ஒரு விடயம் எனக்கு விந்தையாக உள்ளது.
//முதலில் சொல்ல வருவதை “ஒழுங்காக எழுதினால்”
படிப்பவர்களும் ஒழுங்காகப் படிப்பார்கள். //
என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். இவ்விடுகைக்கான எனது முதன் முதலான பின்னூட்டத்தின் முதல் பகுதியில் நான் பின்வருமாறு எழுதியுள்ளேன்.
//திருமூலரின் (கள்) கருத்துக்கள் ஆணாதிக்க வெளிப்பாடேயன்றி, அறிவியல் உண்மையல்ல. //
இந்த வரிகள் மட்டுமே, எனது கவனக் குறைவினால், முழு திருமந்திரதையும் பொத்தாம் பொதுவாக குறிப்பதுபோல் தெளிவில்லாமலமைந்துவிட்டது. அதைக் குறித்தே அயன் அவர்களும், நீங்கள் எவ்வாறு முழு திருமந்திரத்தையும் ஆணாதிக்கக் கருத்தியலலென அடையாளப்படுத்தலாமென வினவியிருந்தார். ஆனால் அதற்கடுத்து வருகின்ற வரிகள்,
//’வலது (சோத்தாங் கை) – ஆண்
இடது (பீச்சாங் கை) – பெண்//
மிகத்தெளிவாக எனது விமரிசனத்தை முன்வைத்துள்ளன. உண்மை இவ்வாறிருக்க நீங்கள் தொடர்ந்து நான் தெளிவில்லாமல் எழுதியிருக்கிறேன் எனக்கூறுவது,
அதுவும் நான் கூறியதைப் புரிந்துகொண்டு அயன், பொன்ஸ், செந்தழல் ரவி ஆகியோர் பின்னூட்டுகளை இட்டதற்குப் பிறகும், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். எங்களைவிட தமிழில் ஆற்றலும், புலமையுமிக்க (நையாண்டியல்ல, உண்மையான வார்த்தைகள்) உங்களுக்கு இது புரியாமல்போனது தான் விந்தையிலும் விந்தை.
என் புரிதலின்படி, எனது முதல் வரியால் ஏற்படுத்தப்பட்ட தவறான தோற்றம் உங்களை அதற்கடுத்த வரிகள் சொல்லவந்ததை புரியவொட்டாமல் செய்துவிட்டன என
நினைக்கிறேன். மற்றபடி நீங்கள் ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்’ என்ற ரகத்தைச் சேர்ந்தவரல்ல என்பது என் அனுமானம். அது உண்மையாயிருக்கவே விரும்புகிறேன்.
மேலும், நீங்கள் பின்வருமாறு கேட்டுள்ளீர்கள்
//ஆனால், மருத்துவ விஞ்ஞானக் கூறுகளை எல்லாம் விட்டுவிட்டு கலாச்சாரக் கூறின்படி பார்க்க வேண்டும் என்று
கூறுவது எந்த வகையில் சரி?//
உங்களது தனித்தமிழின் இன்றியமையாமை குறித்த சில இடுகைகளில் சில வரலாற்று ரீதியான தகவல்களை நீங்கள் வைத்திருந்ததைப் படித்த ஞாபகம். அவ்வாறு எழுதும் உங்களுக்கு பண்பாடும், கலாச்சாரமும் எவ்வாறு மனிதர்களின் சிந்தனையோட்டத்தை, எப்பேர்ப்பட்ட அறிஞராயினும், பாதிக்கும் என்பது புரியாமல்போவதும் எனக்கு பெரு வியப்பாக உள்ளது. அறிவியலும் மனிதர்களால் உண்டாக்கப்படுவதுதானே. அது என்ன வானத்திலிருந்து குதித்து வந்துவிட்ட சுத்த சுயப் பிரம்மமா?; அல்லவே. அறிவியல் மற்றும் தத்துவ மார்க்கங்களின் வரலாறு தாங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இதுவரை தங்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லையெனில், உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியாமல் போயிருக்கலாம்.
//சித்த மருத்துவத்தில் இப்படிச் சொல்லப் படவே இல்லை – இடகலை, பிங்கலை என்பதெல்லாம் சித்த மருத்துவத்தில் இல்லை என்றும் கூட சொல்லலாம்.//
உங்களின் மேற்கண்ட வரிகளில் காணப்படும் சித்த மருத்துவ அடிப்படைகளாகச் சுட்டப்படும் தத்துவங்கள் குறித்து எனக்கு மாற்றுப்பார்வைகளுண்டு. அது குறித்து எனது பதிவில் நான் எழுதவேண்டுமென விரும்புகிறேன். அங்ஙனமெழுதும்போது அதை உங்களுக்கு அறியத்தருகிறேன். அதற்கு உங்கள் கருத்துக்களையறிய ஆவலாக உள்ளேன்.
நல்ல விவாததிற்கு வழியமைத்த உங்களுக்கும், இடமளித்த அயனுக்கும் நன்றி.
உங்கள் பதிவிற்காக நானும் காத்திருக்கிறேன்.
அயன்,
//உங்கள் பாட்டிவிற்காக நானும் காத்திருக்கிறேன்//
நீங்கள் சொல்லவந்தது அடுத்த பதிவுதானே, பாட்டியல்லவே?!
pathiveethaan…. maatrivitteene paarkavillaiya? e-kalappai kaalaiyil irunthu kaalai sorry kaiya vaaruthu
திரு.தங்கவேல் அவர்களே,
இதெல்லாம் ஒரு புண்படுத்தல் என்று நான் கருதவில்லை.
கவலை வேண்டாம்.
// உங்கள் கருத்துக்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டவே அவ்வாறு எழுத நேர்ந்தது.
//
நான் எங்கங்க கருத்து சொன்னேன்….?
)
கலாச்சார ஒப்பீடு பற்றிய கேள்வி அல்லது விளக்கம்தான்
எனது முதல் பின்னூட்டில் கேட்டேன். அதுக்குள்ள நீங்க எங்கெங்கோ சென்று வந்துவிட்டீர்கள்
பரவலாக இணையத்தில் ஒரு போக்கு உண்டு.
தமிழக பழைய இலக்கியங்கள் பலவற்றையும்
பல கூறுகளையும் சட்டென்று எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று காலால் எட்டி உதைக்கும் போக்கு. அது மருந்தாகினும், வீரமாகினும், அறமாகினும்,
இறையாகினும்
பலர் சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் நமது இலக்கியங்களையெல்லாம்
எடுத்துத் தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும்
என்று சொல்லவில்லை.
இதற்கு இணையத்திலேயே இப்படி நொகு (-ve) தொனியைப் பல இடங்களில் நான் கண்டிருக்கிறேன்.
நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.
தங்களின் முதல் பின்னூட்டில் ஆணாதிக்கத்தில் தொடங்கி
பல்வேறு விதயங்களையும் பார்த்ததில் எனக்கு அப்படியான
ஒரு தொனி தெரிந்தது. அதன் விளைவுதான் எனது பின்னூட்டுகள்.
சற்று நான் வெகுண்டு எழுதியது உண்மைதான். இம்மாதிரிச் சூழலில் என் எழுத்துக்கள் சினம் சுமந்தே வ்ந்திருக்கின்றன.
இதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாத போக்கு
என்னுடையது.
எனினும், தாங்கள் வேண்டும் என்று எழுதவில்லை என்று சொல்லிய/விளக்கிய பிறகும் நோக்கம் அப்படியில்லை என்று அறிந்த பிறகும், தனித்தமிழ் பற்றிய உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களிடம் தீய காரணங்கள் இருக்க
வாய்ப்பில்லை என்று நிச்சயம் நம்புகிறேன். மகிழ்ச்சி.
ஐயா,
சோற்றாங்கை, பீச்சாங்கை என்ற இரண்டு சொற்பழக்கத்தையுமே
கவனித்துப் பாருங்கள். இவை செய்யும் செயலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டன. இங்கே வலது, இடது என்ற நிலைகளுக்கு வேலை இல்லை.
கரண்டியில் அல்லது குச்சியை வைத்து சாப்பிடுபவர்களுக்கு
சோத்தாங்கை, பீச்சாங்கை என்ற பாகுபாடு இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், கரண்டியில் சாப்பிடுவோர்க்கும், குச்சியில் சாப்பிடுவோர்க்கும்
கையில் சாப்பிடுவோர்க்கும் இடமும் வலமும் உண்டு.
திருமூலர் சொல்வது தெளிவாக இடம் வலம் என்று குறிக்கப் பட்டிருக்கிறது.
அவர் தமிழ்க் கலாச்சார அடிப்படையில் சோற்றாங்கை, பீச்சாங்கை என்று
சொல்லவில்லை. அவர் தெளிவான இரண்டு நிலைகளை, இரண்டு புறங்களைக் குறிக்கிறார்.
ஆக அதில் ஏதோ ஒரு செய்தியைத் தன் பட்டறிவில் அல்லது ஞானத்தில் சொல்ல
வருகிறார் அல்லவா?
இடம், வலம் என்று குறிப்பிட்டு சொல்வது வேறு:
சோற்றாங்கை பீச்சாங்கை என்று சொல்வது வேறு.
இடதுகையில் சோறு சாப்பிடப் பழகியிருந்தால் அது சோற்றாங்கையாக ஆகியிருக்கும்.
ஆனால், அதனால் இடது வலது என்ற உடலியல் தன்மை மாறியிருக்காது.
அதைத்தான் நான் கலாச்சார அடிப்படையில் பார்ப்பது தவறானது என்றும்.
உடலியல் கூறில் பார்க்க வேண்டும் என்ற கருத்துப் பட எழுதினேன்.
அதோடு ஆணாதிக்கம் என்ற ஒரு கருத்து தங்களிடம் மட்டுமல்ல
பலரிடமும் உண்டு. அது உண்மையும் கூட. பெரிய அளவில் அது ஆணாதிக்கமாக
பல நெறிகளில் காணக்கிடக்கினும் தமிழர்களின் இயல்நெறிகளான சைவ, வைணவ
நெறிகள் அப்படி இல்லை. குறைந்தது சிவ நெறியில் அப்படிக் கிடையாது என்று
ஓரளவு என்னால் விளக்க முடியும். ஆயினும் பொதுவிலே தமிழர்களின் நெறிகளுக்கு
நாயகரான கடவுளரையே வைதீகமும் பற்றியிருப்பதாலும், வைதீகத்திலே கிடக்கின்ற
ஆணாதிக்கச் சழக்குகள் நம்மிடையே பரவியிருப்பதாலும், அது நமது நெறிகளும்
அப்படி என்று எண்ணம் கொள்கிறோம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
நமது குறைகளை நமது சைவ நெறிகளோடு பார்க்க முற்படுகிறோம். தமிழ்நாட்டின்
இந்த இரண்டு இயல் நெறிகளின் ஆதிக்கமற்ற பரப்பு போல தமிழ்நாட்டில்
பரவிக்கிடக்கும் வைதீகம் உள்ளிட்ட எந்த அயல்மதத்திலும் காணமுடியாது.
நாம் நமது நெறிகளைத் தவறவிட்டு அயல்மதங்களை வாங்கிப் புழங்கி வருகிறோம்.
இதற்காக நமது தொன்மம் முழுமையும் ஆணாதிக்கம் அற்றுக் கிடந்தன என்று
சொல்லவரவில்லை. அது நடைமுறையில் இருந்திருக்கின்றது. நமது நெறிகளை
நாம் பயன்படுத்தாமல் போய், அதுவே வழக்காகிப் போய்விட்டது என்று சொல்லலாம்.
இதற்கு மேல் இதனை எழுதினால் அது வேறெங்கோ போய் முடியும்.
‘ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்” என்ற மந்திரத்தின் முதல் பாடல்
சொல்லும் செய்தி மிக உன்னதமானது. அதேபோல தேவார மூவர்களும் ஏனையோர்களும்
திருவாசகரும் ஆக்கிய மறைகளில் எங்குமே பெண்ணை தாழ்த்தி நான் பார்த்ததில்லை.
மாதொருபாகன், கூறிடையன் என்ற சொற்களில் உள்ள தத்துவம் மிக ஆழமானது.
“ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்”
என்ற மாணிக்க வாசகரின் வரிகளை வைத்துக் கொண்டு நானும்
இது ஒரு ஆணாதிக்க சிந்தனையின் எழுத்தோ என்று எண்ணினேன்.
ஆனால் அதற்குப் பின்னர் பல இடங்களையும் பார்த்த போது என் எண்ணம் மாறிவிட்டது.
இது பற்றி விரிவாக எனக்கும் ஆவல் – பரப்பு அதிகமாகையால் தற்போது ஏலவில்லை.
ஆகையால் திருமந்திரம் உள்ளிட்ட சைவசித்தாந்த நூல்களைப்
பற்றிய கருத்துகள் சொல்லும்போது அவை ஆணாதிக்கத் தன்மையன
என்ற பொருள்பட கூறிவிட வேண்டாம் என்று அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
அப்படியே தோன்றினாலும் அதைச் சொல்லக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை.
அதன் பரப்பு மிக அதிகம் – மேலும் சற்று ஆழ சிந்தித்து விட்டு சுகமான வாதிட
நிறையவே இருக்கிறது என்பதனைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மீண்டும் இட,வலத்திற்கு வருவோம். நான் மருத்துவம் அறிந்தவன் அல்ல.
எனது கருத்துக்கள் அதனடிப்படையில் அல்ல. இதைச் சொல்வதற்கு
உங்களைப் போன்ற உடலியல் மருத்துவம் அறிந்தவர்களால்தான் முடியும்.
சாதாரணமாக மூச்சு விடும்போது நமது நாசியில் இருந்து வரும் அல்லது
நாசிக்குள் செல்லும் சுவாசமானது சமமாக இருக்காது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதை எனது சுவாசத்திலும் சோதித்திருக்கிறேன். சில ஓகப் பயிற்சிகளின் போதும்
அதை உணர்ந்திருக்கிறேன். ஒரு துளையை அடைத்து மறுதுளையில் மூச்சு விட்டு
அத்துளையில் இழுத்து அடை அடைத்து மறுதுளையில் மூச்சு விட்டுப் பார்த்தால்
பெரும்பாலான நேரங்களில் ஏதோ ஒரு துளையில் மட்டுமே தடையில்லா சுவாசம்
இருக்கும். இன்னொன்றில் சிறிதேனும் தடுக்கும். இது பெரும்பாலோனோர்க்கு
அப்படித்தான் என்றும் படித்திருக்கிறேன்.
அப்படி இருக்கும்போது இரண்டு சுவாசத்தின் சூழலிலும் உடலியல் தன்மை
வேறுபடக் கூடும் என்ற சிந்திக்க இருக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்படுவது
உண்டு. அது பற்றி நீங்கள்தான் மேலும் சொல்ல முடியும்.
இன்னொன்றையும் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் அல்லது படித்திருக்கிறேன்.
வலமூச்சு இடமூச்சு ஓட்டம் என்பதனை மாற்றும் கலையை ஞானிகள் அல்லது
சித்தர்கள் அல்லது முனிவர்கள் கையாள்வார்கள் என்றும் அவர்களின்
மூச்சு ஓட்டத்தைக் கட்டுப் படுத்தவும், மாற்றவுமே அவர்களின் யோகநிலை
அமர்வில் கைக்குத் தாங்கலாக வைக்கப் படும் ஒரு மரத்தாங்கல் என்றும்
சொல்லப்படுகிறது. அதாவது தடையில்லா மூச்சு ஓட்டத்தினை வலமிருந்து இடமாகவும்
இடமிருந்து வலமாகவும் மாற்றுவதற்கு முனிவர்கள் தங்கள் கரத்தினைத் தாங்கும்
அந்த மரத்தாங்களை வலக்கரம் இடக்கரம் மாற்றி யமைப்பார்கள் என்றும்
அதனைக் கட்டுப்படுத்தும் நாடி அவ்விடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை வேறு பல உத்திகளிலும் செய்வது உண்டு என்றும் சொல்கிறார்கள்,
சாதாரணமாக நாம் ஒரு முனிவரின் படத்தைப் பார்த்தார் அவர்
கையில்/அருகில் ஒரு கமண்டலம் வைத்திருப்பார் அப்புறம் இந்தத் தாங்கல்
ஒன்று இருக்கும். அக்கமணியும் இருக்கும்.
இப்படி இருக்கையில் ஏன் இந்த இட வல மூச்சுகளுக்கு, சகசரதளம்
என்று சொல்லப்படுகிற துரியம் என்று சொல்லப்படுகிற
ஆறாய் விரிந்து ஏழு உம்பர்ச் சென்றனன் என்று திருமூலரால் சொல்லப் படுகின்ற
இடத்துக்கு நாசி வழிச் செல்லும் காற்று இடம் போனால் ஒரு தன்மையையும்
வலம்போனால் ஒரு தன்மையையும் கொடுக்காது என்று சிந்திக்க இடம்
இருப்பதாகவே என் சிற்றறிவிற்குப் படுகிறது. இதனை மந்திரத்தை நன்கு
கற்றவர்களும் உங்களைப் போன்ற மருத்துவர்களும் நிறைய அறிந்திருப்பீர்கள்.
நேரம் வாய்க்கும்போது எழுதுங்கள்.
மற்றபடி கலவியின்போது மூச்சுக் காற்று நாம் நினைக்கும் வழி போகாவிடில்
))
நாம் என்ன கலவியை நிறுத்தியா விடப்போகிறோம்
அன்புடன்
நாக.இளங்கோவன்
நாக இளங்கோவரே, கொஞ்சம் கோபம் தனிந்து தங்கள் பக்கத்து நியாயத்தை எழுத வந்த பல நல்ல செய்திகளை அறிய நேரிட்டது. பின்னூட்டமே நான் எழுதும் ஒரு பதிவின் அளவிற்கு வந்தது குறித்து மகிழ்ச்சி. அதைவிட எனக்குப் பிடித்த வைதீகத்தைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்னும் மேலும் ஆனந்தமுறச் செய்தன.
உங்கள் பகிற்விற்கு நன்றி.
நிச்சயம் சித்தாந்தம் சம்பந்தமான பல செய்திகளை உங்கள் வாயால் கேட்க விரும்புகின்றேன்.
//நிச்சயம் சித்தாந்தம் சம்பந்தமான பல செய்திகளை உங்கள் வாயால் கேட்க விரும்புகின்றேன்.
//
நண்பர் அயன்,
சித்தாந்தம் மிகப் பெரிய கடல். ஏதோ இரண்டு எழுதிவிட்டேன் என்றால் நன்கு தெரிந்தவன் என்று பொருளல்ல. இதனைக் கற்க ஆர்வமுள்ளவன் என்றளவே
என்னளவு. எனினும் நேரம் வாய்க்கும்போது சிலவரிகளை
இவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவினைக்
குறியன் (bookmark) இட்டு வைக்கிறேன். மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அயன் அவர்களுக்கு,
திரு நாக.இளங்கோவன் ஓரளவு தெளிவாக்கி இருக்கிறார். இருந்தாலும் யோகமுறையில் மலம் , சிறுநீர் முதலியனவற்றைக் கட்டுப் படுத்த முடியும்போது, இதுவும் சாத்தியம் என்பது என் எண்ணம். மேலோட்டமாய் விளக்கம் எடுத்துக் கொண்டால் நீங்கள் சொல்வது சரி என்றாலும், உள்ளார்ந்த விளக்கம் அதுவாய் இருக்காது என்பதும் என் எண்ணம். நேரம், காலம் போன்றவையும் பழங்காலத்தில் கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளது. இதில் அறிவியல் இருப்பதாய்த் தான் என்னளவில் நம்புகிறேன். திருமதி ஜெயம் கண்ணன் அவர்களின் புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் தாங்கள் முத்தமிழ்குழுமத்தின் திரு இரவா.வாசுதேவன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். ஜெயம் கண்ணனுக்கு நெருங்கிய நண்பர் அவர். மேலும் இந்தக் குறிப்பிட்ட பாட்டில் திருமூலர் குறிப்பிட்டிருப்பது “” ஆக இருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது.
மன்னிக்கவும் அதில் xy க்ரோமோசோம் எனக் குறிப்பிட மறந்து விட்டேன். இரவா அவர்களின் இ-மெயில் ஐடி என நினைக்கிறேன். rvasudevan@gmail.com.