ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம் புரிஞ்சிருக்கும்…
அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள விருந்தாளிகள் புத்தகத்துல “கடவுள் இப்பள்ளிக்கூடத்திற்கு மேலும் மேலும் அபிவிருக்தியைக் கொடுக்கட்டும்”னு எழுதி கையெழுத்து போட்டு இருக்காராம். இதை அவரது இயக்கித்தின் காரணமாக அந்தப் பள்ளிக்கூடத்து நிர்வாகிகள் (அவர்களும் நாயக்கர் என்ற பின் குறிப்பு வேற அந்த செய்திக்கு) மறைமுகமா வைத்து இருந்ததா அந்த செய்தித் தாள்ல போட்டு இருக்கு.
நான் பெரியாரை அவ்வளவா படிச்சு இல்லைனாலும் நான் புரிஞ்சு வச்சுகிட்டது அவரோட எதிர்ப்பு மூட நம்பிக்கைகள்க்கு மட்டும் தான்னுதான். ஆனால் அவர் கடவுளுக்கும் எதிரின்னு பேசிகிட்டு இருக்குறவங்க இதுக்கு என்ன பதில் சொல்றாங்கன்னு தெரியல. !!!







இது ஒன்றும் புதிய செய்தி இல்லை. இந்த குறிப்பு குறித்து தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி-பதில் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தக் குறிப்பை தேடி பதிவு செய்கிறேன். பொறுத்திருங்கள்.
எனக்கு இது இன்றைக்கு புதுசாதான் இருந்தது…. நான் பெரியாரை அதிகம் படிக்காததால…. மேலும் பழைய விஷயத்தையா புதுசு மாதிரி செய்டித்தாள்ல எழுதி இருந்தாங்க!!!
பெரும்பான்மையிலிருந்து வேறு படுத்திக் கொள்கிற ஆர்வத்தில் தனக்கே ஒப்புதல் இல்லாத விஷயங்களைப் பேசுவதும் செய்வதும் வழக்கமாக இருக்கிற பலர் இருக்கிறார்கள். ஆனால் திரு.ஈ.வே.ரா. அந்த ரகமா என்று தெரியவில்லை!
http://kgjawarlal.wordpress.com