அயனீகம் சூன்யத்தில் இருந்து சூன்யத்தை நோக்கிய பயணத்திற்கான மாற்றுக் கருத்து நரம்பியல் வள்ர்ச்சியில் முதிர்நிலை அடைந்த நரனின் மனத்தில் நாளும் உதித்திடும் கேள்வி ஏன்? வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே ஊசலாடும் உயிருள்ள வாழ்க்கைதான் ஏன்? வறுமைக்கும் செழுமைக்கும் நடுவே பந்தாடும் பருவந்தான் ஏன்? தக்கோன் நிலைப்பான் என்றக் கூர்தலறக் கோட்பாடு சொன்னான் டார்வின் அமைதியை நோக்கிய ஆன்மிகப் பயணந்தான் வாழ்க்கை மதங்கள் கூறும் மாற்று அறிக்கை ஒரு ஜான் [...]
‘கதை வாயில்’ பகுப்புக்கான தொகுப்பு
அயனீகம்
Posted in கதை வாயில், கவிதை on ஜனவரி 18, 2007 | 3 மறுமொழிகள் »
ஃபீனிக்ஸ்
Posted in கதை வாயில் on ஜூலை 9, 2006 | 3 மறுமொழிகள் »
சிறகுகளோடு பறக்க எண்ணிய வெறும் கால் கை முளைத்த பெண் ஃபீனிக்ஸ் அவள் தன் ஜோடியை இங்கே விட்டு விட்டு கனவென்னும் நிழலை நிஜமாக்கப் பறந்த முதல் பெண் பறவை அவள் சாதனை வேள்வியில் சாம்பலாகிப் போனாலும் தன் சுவடுகளை விடுக்க மறக்கவில்லை பறவை வரலாற்றில் மறக்கப்பட்டாலும் அவள் வேட்கையை யாரும் மறக்க இயலுமோ? விரைவில் அவளைச் சந்திப்போம்……
மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை
Posted in கதை வாயில் on ஜூலை 5, 2006 | 8 மறுமொழிகள் »
கனவுகளே சிறகுகளாய் ஃபீனிக்ஸின் நினைவுகளாய் ஆழ்மனத்தில் உதித்தெழுந்த மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை சாம்பலாகாத வெற்றியும் உண்டு வெற்றியில்லாத சாம்பலும் உண்டு சாம்பலில்லையேல் அந்த வார்த்தை உனக்கு உண்டு வெற்றியில்லையேல் கிரகணத்துள் மறைந்த சூரியனாய் நீயுண்டு கண்டுபிடி அந்த வார்த்தை! சந்திக்கிறேன் விரைவில் உன்னை…..






