Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘சிறுகதை’ பகுப்புக்கான தொகுப்பு

மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம். நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இப்படின்னு சொன்னாக..

முழு பதிவையும் வாசிக்க »

வெள்ளிக்கிழமைகள்ல காலைல மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு அந்தப் புடவையை அம்மா கட்டிகிட்டு வந்து சோறு ஊட்டுவாங்களே. அதை சாப்பிட்டுட்டு அப்படியே அவங்க மடியில அந்த மஞ்சள் கலருக்கு நடுவுல தூங்கி எழுந்தா எப்படி இருக்கும்.

முழு பதிவையும் வாசிக்க »

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்
தமிழில் சிறுகதையின் தோற்றம்:
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்
‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’
எனும் டொடரால் அறியலாம்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம்  ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே  முழுவதுமாக கிடைத்துள்ளது.  அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….
……………………………………………………………………………………………………………………………………………
காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது.  நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது.  அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக [...]

முழு பதிவையும் வாசிக்க »

                அன்று காலை அவசரமாக வேலைக்குக் கிள்மபிக்கொண்டிருந்தான். டெல்லியில் பொங்கல் முடிந்தும் பலருக்குப் பொங்கல் வாங்கித்தரவில்லை என்ற வருத்தம் பல நண்பர்களுக்கு இருந்ததாலும் வேலை அதிகமாக இருந்ததாலும் இந்த முறை அருகில் இருந்த ஒரு தென்னிந்திய சமையல்காரனிடம் சொல்லி பொங்கலை கல்லுரிக்கு இடைவெளி நேரத்தில் கொண்டு வர திட்டமிட்டிருந்தான். அதனால் அதற்கான வேலைகளில் மும்ரமாய் ஈடுபட்டு சங்கருக்கு ஃபோன் செய்து வைக்கும் போதுதான் தந்தையிடம் இருந்து அந்த துக்கமான தகவல் வந்து சேர்ந்தது. உடனே சங்கரிடம் சொல்லி [...]

முழு பதிவையும் வாசிக்க »

                வகுப்பு முடிந்து அன்று வீடு திரும்பினேன். சுமார் மாலை 4 மணி இருக்கும். எனது நண்பன் அஜித் வெளியே பொய் இருந்தான். அறையில் இருந்த அரை இருளில் பட படவென்று சத்தம் கேட்டது. எலி உள்ளே நுழைந்து விட்டதோ என்று சுற்றி முற்றி பார்த்ததில் ஒரு பட்டாம்பூச்சி சன்னல் வழியே வந்த ஒளி கீற்றை உயிர் மருந்தாக எடுத்து ஜன்னல் அருகே சசலத்துக் கொண்டிருந்தது. நானும் பட்டாம்பூச்சிதானேஎன்று கவனிக்காமல் அதையும் தொந்தரவு செய்யாமல் எனது பாடங்களைஎடுத்துப் படிக்க [...]

முழு பதிவையும் வாசிக்க »

                “ஜாதகம் சாமியெல்லாம் பொய். எங்க எதுத்த மாதிரி தான் சிவன் கோயில் இருக்கு. ஆனால் நான் உழைப்பை மட்டுமே நம்பினேன் இன்றைக்கு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறேன்.  ஒரு நாளைக்காவது கோயிலுக்கு போய் இருக்கேனா” என்று ஜம்பமாய்ப் பேசிவந்த வெங்கட கிருஷ்னன் அன்றைக்கு ரொம்ப பய பக்தியாய் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். வெளியூரில் இருந்து வீடு திரும்பிய நான் வேகமாக அம்மாவிடம் கேட்டேன்.
                “அதுவா… கஷ்டம்னு வந்துட்டா எல்லாரும் அவன் கால்ல தான போய் விழுந்தாகணும். அவருடைய மூத்த தலை பேரன் [...]

முழு பதிவையும் வாசிக்க »

{தேன்கூடு போட்டிக்கான கதை}
                  சின்ன வயசுல இருந்தே பீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும். அஞ்சாம் க்லாஸ் படிக்கும்போதே அப்பா வாங்கிக்கொடுத்த ஷூவை வச்சிக்கிட்டு,
“மச்சி இதுதாண்டா அப்பா லண்டன்ல இருந்தி வாங்கிட்டு வந்த ஷூ. இந்த ஷூவால மிதி வாங்கினா நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுடா” என்று பள்ளி நண்பர்கள் அனைவரையும் போட்டு மிதிப்பான். பெரிய இடத்து பிள்ளைவேறு, அவனுக்கென்று ஒரு கும்பல். அப்பொழுதே பள்ளி முதல்வர் பெற்றோரிடம் புகார் செய்தால்,
“சின்ன பிள்ளைங்கன்னா அப்படி இப்படி குறும்பு [...]

முழு பதிவையும் வாசிக்க »

இலவசம்

                       சென்னையின் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு அருகே வந்து அம்ர்ந்தாள். நீதி மன்றம் அருகே தான் உள்ளது. ஆனால் அவள் அங்கு இருந்து வரவில்லை. வாழ்க்கையே முடிந்துவிட்ட சோகம் அவள் முகத்தில். அந்த நிமிடத்திற்கு பின் அவள் தேகம் அனைத்தும் அனலாய்க் கொதித்தது. அந்த இடம் ஒன்றும் புதிதன்று. பத்து வருடத்திற்கு முன் அவளுடைய கனவுகளோடு அவளை வரவேற்றது இந்த இடம் தானே. உண்மையில் சொல்லப் போனால் அவளுடைய உயிரே இன்று தான், பத்து வருடம் கழித்துதான் [...]

முழு பதிவையும் வாசிக்க »

                    
                   “தயவு செய்துயிதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.. என்னைச் சுற்றி உள்ள அனைத்து அபாயங்களையும் நான் அறிவேன். ஒரு பெண் ஒரு ஆண் சாதித்த எல்லா விஷயங்களையும் சாதிக்க வேண்டும். அவர்கள் தமது முயற்சியில் தோல்வியுற்றால், அது அடுத்த பெண்ணுக்கு ஒரு சவாலாகத்தான் அமைய வேண்டும்.” ஜார்ஜ் புட்நம் தனது மனைவியிடம் இருந்து கிடைத்த இந்தத் தகவலை வைத்துக் கொண்டு பெருமையாய் அவளைக் குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார்.
      ஐந்து வருடங்களுக்கு முன்பு [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »