அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான். அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு. ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு. குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள் காதல காதல் அறியாமை உய்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி [...]
‘வகையிலி’ பகுப்புக்கான தொகுப்பு
பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்….!!
Posted in இலக்கியம், வகையிலி, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், பரிமேல் அழகர், மின்சார கனவு, வள்ளுவன், வைரமுத்து on ஜூன் 3, 2009 | 3 மறுமொழிகள் »
ஏ. ஆர். ரகுமானுக்காக ஒரு ஆவணப்படம்
Posted in சினிமா, வகையிலி, குறிச்சொல் இடப்பட்டது ஆஸ்கார், ஏ. ஆர். ரகுமான், கோல்டென் குலோப், தமிழ் இசை, மேற்கத்திய தரம் on பெப்ரவரி 6, 2009 | 3 மறுமொழிகள் »
இதோ ஆஸ்கார் விருது பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கு எனது நண்பன் அவரது சாதனைகளை வைத்து எழுதிய ஒரு சிறு கவிதை. உங்கள் பார்வைக்காக. ஆங்கிலத்தில் முன்னுரை இருந்தாலும் கவிதை தமிழில்தான் குழம்பிவிட வேண்டாம். எனது மனங்கவர்ந்த தொலைக்காட்சி விளபரங்களைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்
சொல்ல மறந்த சொற்கள்..
Posted in வகையிலி on பெப்ரவரி 3, 2009 | 4 மறுமொழிகள் »
பட்டின்னா நமக்கெல்லாம் மன்னிக்கணும் எனக்கெல்லாம் தெரிந்தது நாய், சிற்றூர் மட்டும் தான். களவு, தெப்பம், மகன், விபசாரி, அட்டவணை, தெப்பம், ஆட்டுக்கிடை,பசுக்கொட்டில், விக்கிரமாதித்தனுடைய மந்திரி, பாக்குவெற்றிலைசுருள், பூச்செடிவகை, காவலில்லாதவர், சீலை, இடம் இப்படி இத்தனை அர்த்தத்தை மறந்ததைப் புரிஞ்சுகிட்டேன்.
ரவிசங்கர் போன்ற வலைப்பதிவர்களே தமிழ்ச்சொல் தேடலுக்கு உதவிபுரியுங்கள்!
Posted in வகையிலி, குறிச்சொல் இடப்பட்டது tamil word hunt, thesarus, tourism, travelling on மே 12, 2008 | Leave a Comment »
ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகின்றேன்…. ஒரு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு இரெண்டு வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் வார்த்தைகளைத்தேட முடியவில்லை. TRAVELLER, TOURIST இதுதான் அந்த இரெண்டு வார்த்தை. பயணி, சுற்றுலா பயணி என்று சுலபமாகசொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அதன் முழு ஆன்மாவையும் கொடுக்கின்றதா என்பதுதான் சந்தேகம். Traveller என்பவன் தனது பயணத்தை வழக்கத்துக்கு மாறாக அமைத்து அவன் செல்லும் இடங்களின் கலாச்சார புவியியல் கூறுகளை பதிவு செய்பவன். ஹுவான் சுவான் ஒரு [...]
மூடுபனி விலகும் காலம்….!
Posted in வகையிலி on பெப்ரவரி 19, 2007 | Leave a Comment »
மார்கழி மாதம் முடிந்து வரும் வேளையில் அதோ புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் அந்த அமைதியான கிராமத்தை நோக்கி வேகமாக இரெண்டு வேன் சென்று கொண்டு இருக்கிறது. ஆம் மாங்குடி கிராமம் தான். உலகமயமாக்கல் என்று வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உலகப் பேருந்தை கடைசி நேரத்தில் இடம் பிடிக்கத் தவறிய ஒரு கிராமமாகத்தான் தோன்றியது. இந்த ஊரில் பள்ளிக்கூடம் கூட இருக்கிறதா என்று இரெண்டு மாதங்களுக்கு முன் “அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்” ஆய்வாளர்கள் சந்தேகத்தோடு வெயிலுக்கு ஒதுங்கினர். அதில் [...]
வலைப்பதிவுகள் தேவைதானா………?(2)
Posted in வகையிலி on ஜனவரி 9, 2007 | Leave a Comment »
அட நான் சொல்ல வந்தது என்னன்னா..! காரைக்குடியில் போன வாரம் இந்திய சமூக அறிவியல் மாநாடு அழகப்பா பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதில் கல்வி துறை சம்பந்தமாக ஒரு ஆய்வறிக்கை கொடுக்க நேர்ந்தது அதற்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “வலைப்பூக்கள் நமது கல்விக்கான ஒரு மாற்று சாதனம்”. ஆம் blogs என்பவை கடந்த பத்து ஆண்டுகளில் தான் இப்படி தோன்றி பெருமளவில் வளர்ந்து வந்துள்ளன. மேலை நாடுகளில் கல்வித்துறையில் இவை இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே பயன்படுத்தப் [...]
விருந்தோம்பலுக்குப் பேர் போன தமிழகம்…!
Posted in வகையிலி on December 20, 2006 | 4 மறுமொழிகள் »
இன்று தமிழ்கத்தில் இருந்து எனது கல்லூரி பேராசிரியை டெல்லிக்கு ஒரு நேர்முகத் தேர்விற்காக வந்திருந்தார். எனக்கு இங்கு வேலை அதிகமாக இருந்ததால் என்னால் அவரை விமான நிலையம் சென்று அழைத்து வர முடியவில்லை. அவருக்கு ஹிந்தி வேறு தெரியாததால் அவருடைய இன்னொரு வடக்கத்திய மாணவரைச் சென்று அழைத்து வர சொல்லி இருந்தேன். பேராசிரியையது வேலை முடியும் நேரத்திற்கு அவரைச் சென்று சந்திக்கலாம் என்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் யூ.ஜி.ஸி அலுவலகம் சென்றிருந்தேன். அந்த ஹரியானாவைச் சேர்ந்த [...]
காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா!!!
Posted in மனதைக் கவர்ந்த விளம்பரங்கள், வகையிலி on December 14, 2006 | 2 மறுமொழிகள் »
ஐரோப்பாவின் சிறந்த படைப்பியக்க விருது பெற்ற விளம்ப்ரம் ஒன்றைப் பார்த்தேன். பின்பு தான் தெரிந்தது காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா…. இதோ எனது பதிவுலக நண்பர்களுக்காக….. கீழே கிளுக்குங்கள்.. http://www.epica-awards.org/assets/epica/2004/winners/film/flv/11071.htm
நன்றி ஐயா…..!
Posted in வகையிலி on ஆகஸ்ட் 1, 2006 | 3 மறுமொழிகள் »
தேன்கூடு போட்டிக்கான “நேற்று இது நடந்து இருந்தால்” கதைக்கு 10 ஓட்டுகள் போட்டு 80 கதைகள்ல தொலைந்து போகாம என் மானம் காப்பாற்றிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றி ஐயா…. நன்றி! இந்த மாதத் தலைப்பு உறவாம்…. போட்டியில ஜெயிச்ச நம்ம நிலா அக்கா தலைப்பு கொடுத்திருக்காங்க….எந்த உறவைப்பத்தி எழுத….எப்படி எழுத ஒரே கொழப்பமா இருக்கு… பார்ப்போம்…… நீங்க யாராவது ஒரு ப்லாட் கொடுங்களேன்…..






