Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட் 9th, 2007

நட்சத்திர வாரத்தில் அனைவருடைய சிந்தனைக்கும் தீனி போட விரும்பி இதோ ஒரு சின்ன போட்டி ஒன்று வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
            அபோகாலிப்டோ படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பலருக்குத் தெரிந்திருக்க கூடும். அந்த படத்தில் ஒரு பெரியவர் கதை ஒன்று சொல்வார். அதாவது மனிதன் காட்டில் இருக்கும் விலங்குகளிடம் தனக்கு தேவையான ஒவ்வொரு பலத்தையும் வரமாகப் பெற்றுச் செல்வானாம். அப்பொழுது ஒரு ஆந்தை இவன் நம் அனைவரையும் விட பலசாலியாகி விடுவானோ என்று சந்தேகப் பட்டு கேட்கும். அதற்கு ஒரு புலி,”இல்லை இவன் அனைத்தையும் பெற்றாலும் இவனுடைய வயிறு என்றும் அடங்காது அதன் தேவையைப் பூர்த்தி செய்ய இவன் எவ்வள்வோ போராட வேண்டியதிருக்கும்” என்று சொல்லும். பழங்குடி மக்களிடைய இந்த கதை இன்னும் நிலவி வருகிறது.
            தக்கோன் நிலைப்பான் என்கிற டார்வினுடைய கொள்கையும் இன்று ஈராக் ஆப்கான் போர் வரையிலும் அனைத்தின் அடிப்படையும் இந்த பசி தான். இதைத்தான் என்னுடைய முந்தைய அயனீகம் என்ற கவிதையிலும் சொல்ல முயன்றேன்.
            போட்டி என்னவென்றால் “பசி என்ற சொல் உலகில் இல்லாவிட்டால்…” என்ற தலைப்பில் அனைவரும் தத்தம் கற்பனை குதிரையை ஓடவிட்டு என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து எழுத வேண்டும். அது கவிதை வடிலும் கட்டுரை வடிவிலும் கூட இருக்கலாம். இந்திய நேரப்படி சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் வரும் பின்னூட்டங்களை (தங்கள் வலைப்பூவில் எழுதி பின்னூட்டத்தில் சுட்டி அனுப்பினால் போதும்)  படித்து சிறந்த பின்னூட்டங்கள் குறித்து என்னுடைய கடைசி பதிவில் எழுதப்படும்.

அதோட மட்டுமில்லீங்க ஏதோ வலைப்பூ மூலமா கொடுக்க முடிஞ்ச சின்ன 

பரிசு கீழே காணப்படும் டெம்டேஷன் மிட்டாயும் வழங்கப் படும்.  

9.jpg

வேற என்ன!  உங்களுடைய படைப்பை போட்டுவிட்டு ஒரு லிங்க் நம்ம பின்னூட்டத்துல போட்டுடுங்க ஓ.கே யா? 

வேறென்ன மக்களே உங்களுடைய கற்பனை குதிரையைத் தட்டி விடுங்க… ஓடட்டும்….  இனி போட்டியை யார் ஆரம்பிக்கப் போவது?

Read Full Post »

                டெல்லியில் சென்ற மாதம் ஒன்பதாவது ஓசியான் (ஆசிய-அரபு) திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒரு படத்திற்கு 20 ரூபாய் மட்டும் டிக்கட் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் க்ரீன் பார்க், பி.வி.ஆர் திரையரங்குகளில் ஒரு வாரம் 100க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் நண்பர்களோடு நானும் கடைசி நாள்தான் சென்று பார்த்தேன். உலக அளவில் இருந்து பல நல்ல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், இந்தியப் பிரிவிற்கான போட்டியில் பருத்திவீரன் திரையிடப் பட்டது நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய செய்தி.

                அந்தப்படத்தின் சிறப்பாக அனைவரும் தன்னை ஏதுனும் ஒரு நிலையில் இணைத்துப் பார்க்க வைத்த திரைக்கதை பெருமையாகப் பேசப்பட்டது.  அதே நேரத்தில் முக்கியமாக இந்திய பிரிவில் சிறந்த படத்திற்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கொடுக்கப்பட்டது நம் அனைவரையும் மகிழ்விக்க வந்த செய்தி.

                தமிழில் புது இயக்குநர்கள் பலர் ஒரு நல்ல கதையை சிறப்பான உத்திகளோடு படமாக்கும் முயற்சியில், ஈடுபட்டு இருக்கையில் இந்தச் செய்தி தமிழ் சினிமாவின் ஆரோக்கிய்த்திற்கு உதவும் என்றே நம்புகின்றேன்.  அவர்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் சினிமாவின் பெற்றோர்களின் கடன் தானே! அனைவரையும் மகிழ வைத்த பருத்திவீரன் தயாரிப்பு குழுவினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களை நமது நட்சத்திர வாரத்தில் கௌரவிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

Read Full Post »

                கொஞ்ச நாட்களுக்கு முன் ருத்ர வீணை என்ற தொடர் சன் டி.வி. யில் ஒளிபரப்பான தொடரை பலர் பார்த்திருக்கக் கூடும். அதில் தொடருக்கு முன் ஒவ்வொரு கருநாடக இசையின் ராகத்தால் ஏற்படும் நண்மைகள் குறித்து ஒரு சிறு விளக்கப் படம் இருக்கும்.  திருட வந்தவனின் மனத்தைத் திருத்துவது, தீராத வயிற்று வலியைப் போக்குவது, செல்வங்கள் வந்தடைவது என பல மானுட தேவைகளை தீர்த்து வைக்க இந்த இசை எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது சுவையாக சொல்லப்பட்டது. ஆனால் இதனுள் இருக்கும் அறிவியல் உண்மை ஆய்வுக்கு உரியதே.

                ஆனால் மேலை நாடுகளில் மனநோய் மருத்துவர்கள் மொசார்ட் உடைய சிம்ஃபனியால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து பலரும் ஆய்ந்துள்ளனர். 1992-93 MOZART EFFECT என்னும் புது சொல்லையே உருவாக்கி அதனால் ஒரு மனிதனின் மூளை வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை ஆய்ந்துள்ளனர். அவருடைய சிம்ஃபனி இசையைக் கேட்பதால் மன அழுத்தம் நீங்கி மூளை நரம்புகள் சிறப்பாக் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு உடலின் ஆக்க சக்தியும் சிந்தனையும் வெளிப்படுகிறதாம்.  ஆனால் இதற்கும் மறுப்பு இன்னும் இருந்து வருகிறது.  ஆய்வு தொடர்ந்தாலும் திட்ட வட்டமாக நிருபணம் ஆகவில்லை என்பது உண்மையே.  சிலர் அது நன்மைசெய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும் அது எந்தத் தீங்கும் செய்து விடாது.  ஆனால் நான் அது நன்மை செய்கிறது என்னும் உண்மையை 60 சதம் நம்புகின்றேன். இளையராஜாவும் பல இடங்களில் இக்கருத்துக்கு ஒத்துக் கொண்டுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது. மொசார்ட்டின் இசையை கேட்டிராதவர்கள் இங்கே சொடுக்கி இசையை கணினியில் இறக்கி கேட்டு மகிழலாம்.

              எனது கருத்து என்னவென்றால் தமிழிசையிலும் இவ்வாறு ருத்ர வீணையில் சொன்னது போல் கருத்துகள் இருக்கும் போது அதன் அறிவியல் உணமைகள் நிறுவப்பட்டிருந்தால் மக்களுக்கு தெரியப் படுத்துவதில் தப்பு ஏதும் இல்லையே! இது போன்ற ஆய்வுகளும் நமது பழமையைப் பாதுகாக்க உதவும் தானே!  (யாரேனும் ருத்ரவீணையின் விள்ளக்க படம் குறித்தோ ராகங்கள் – பயன் குறித்தோ செய்தி இருப்பின் தெரியப் படுத்தலாமே!)

  பி.கு.: குறைந்த பட்சம் இசையில் ஆணாதிக்க சிந்தனை இல்லை என்றே நம்புகின்றேன்.

Read Full Post »