Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கதை வாயில்’ Category

bg-forgottentales.jpg

அயனீகம்

 சூன்யத்தில் இருந்து

சூன்யத்தை நோக்கிய

பயணத்திற்கான மாற்றுக் கருத்து

 

நரம்பியல் வள்ர்ச்சியில்

முதிர்நிலை அடைந்த

நரனின் மனத்தில்

நாளும் உதித்திடும் கேள்வி

 ஏன்?

 

வெற்றிக்கும் தோல்விக்கும்

நடுவே ஊசலாடும்

உயிருள்ள வாழ்க்கைதான்

 ஏன்?

 

வறுமைக்கும் செழுமைக்கும் நடுவே

பந்தாடும் பருவந்தான்

 ஏன்?

 

தக்கோன் நிலைப்பான்

 என்றக் கூர்தலறக் கோட்பாடு

சொன்னான் டார்வின்

 

அமைதியை நோக்கிய

ஆன்மிகப் பயணந்தான்

வாழ்க்கை

மதங்கள் கூறும் மாற்று அறிக்கை

 

ஒரு ஜான் வயிற்றுக்காக

மூளை வளர்ந்தது தான்

எத்தனை! எத்தனை!!

 

முளைத்த கருத்துகள்

எத்தனை?

சாதனைகள் எத்தனை?

அதற்கான சோதனை எத்தனை?

சண்டைகள் எத்தனை?

விரியும் ஏற்றத்தாழ்வுகள்

 எத்தனை?

 

இத்தனைப் போராட்டங்களுக்குப்

பின்னும் மனிதன்

விரும்புவது ஒன்றே ஒன்றுதான்

‘அமைதி’

 

சிலருக்கு சோறு கிடைத்தால் அமைதி

சிலருக்கு வீடு கிடைத்தால் அமைதி

சிலருக்கு இவற்றிற்கான கூலி கிடைத்தால் அமைதி

அதன்பின்னும் முன்னேற்றம் தேடி

தொலைத்து விடுவது அமைதியைத் தான்…

பின்பு தேடியலைவதும் அமைதியைத் தான்…

 

தவம் – அமைதியைத் தேடி தவம்

அறிவியல் சாதனை தேடி தவம்

‘ஏன்’ என்னும் கேள்விக்காகத் தவம்

இத்தனை தவங்களின் விளைவாய் வந்த

சாதனை செல்லும் பாதைதான் எங்கே?

தத்துவங்கள் காட்டும் திசைதான் எங்கே?

 

வயிறு நிரப்ப வழி சொல்வது விஞ்ஞானம்

நரம்பியல் வழியில் தீர்வு சொல்வது மெய்ஞ்ஞானம்

 இவை இரண்டையும் இணைக்கும் பாலம் தான் புது ஞானம்

 ஆம் அது தான் ‘அயனீகம்’

 

சோற்றைத் தேடி தொலைந்து போன

சிந்தனை வளர்ந்து சிதறிப் போன

அமைதி இப்படியும் வரலாமோ?

நரம்பியல் வளர்ச்சியில் இயற்கையின் விளைவாகவோ

நரனின் முயற்சியில் செயற்கை முறையிலேயோ

மனிதனுக்குள்ளே பச்சையம் வந்தால்…..

 

 

சூன்யத்திற்கு பின் ஓரணு உயிர்தான்

மானுடத் துவக்கம்

சூன்யத்திற்கு முன் பச்சையம்

முளைத்த மக்கள் தான்

மானுட முடிவோ….

 

நின்ற இடத்தில் சூரிய தயவில் மனிதனுக்குள்ளே

சாப்பாடு தயார்….

ஓட்டலுக்கு வேலையில்லை,

வயல் காடோ மாடி வீடு

உடையோன் இல்லான் பேதமில்லை

 

கலைதாகமும் அறிவுப் பசியுமன்றி

வேறெதுவும் இல்லாத

அந்த முடிவுக்கு முந்தைய நாள்

 எந்நாளோ?

Advertisements

Read Full Post »

சிறகுகளோடு பறக்க எண்ணிய

வெறும் கால் கை முளைத்த

பெண் ஃபீனிக்ஸ் அவள்

தன் ஜோடியை இங்கே விட்டு விட்டு

கனவென்னும் நிழலை நிஜமாக்கப்

பறந்த முதல் பெண் பறவை அவள்

சாதனை வேள்வியில் சாம்பலாகிப்

போனாலும் தன் சுவடுகளை

விடுக்க மறக்கவில்லை

பறவை வரலாற்றில் மறக்கப்பட்டாலும்

அவள் வேட்கையை யாரும் மறக்க இயலுமோ?

விரைவில் அவளைச் சந்திப்போம்……

Read Full Post »

கனவுகளே சிறகுகளாய்

ஃபீனிக்ஸின் நினைவுகளாய்

ஆழ்மனத்தில் உதித்தெழுந்த

 மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை

சாம்பலாகாத வெற்றியும் உண்டு

வெற்றியில்லாத சாம்பலும் உண்டு

சாம்பலில்லையேல் அந்த வார்த்தை உனக்கு உண்டு

வெற்றியில்லையேல் கிரகணத்துள் மறைந்த சூரியனாய் நீயுண்டு

கண்டுபிடி அந்த வார்த்தை!

சந்திக்கிறேன் விரைவில் உன்னை…..

Read Full Post »