Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நட்சத்திர பதிவுகள்’ Category

                நான் காலேஜ் படிக்கும்போதே நாவல் எல்லாம் எழுதுறதுக்கு நோட் புக் வாங்கி வச்சிருப்பேன். ஆனா சில நண்பர்கள் என்னை சீக்கிரம் கதையை முடிக்க வைக்கணும்ங்கிறதுக்காக அந்த நோட்ல இருக்கிற பக்கங்களை கிழிச்சு சிறிசாக்கி ஏமாத்துவாங்க. அது மாதிரி தாங்க நேற்று நட்சத்திர வார முடிவுரை எழுதலாம்னு காத்துகிட்டு இருந்தேன், ஆனா மழை அடிச்சதால நெட் வரலை. யாரு செஞ்ச சதியோ? இப்ப தான் வந்தது. 

சரி மேட்டருக்கு வரேன். இந்த ஒரு வாரமும் நிச்சயமா எனக்கு நல்ல வாரமா இருந்தது. சில ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்க ஆரம்பிச்சேன். அதுல நான் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கல்ந்து கொண்டீங்க ரொம்ப சந்தோஷம். புது நட்புகள் வேறு. ஆனா வலை உலகத்துப் பெரிய தலைங்க எட்டிப்பார்க்காதது குறித்து வருத்தம் தான். இன்னும் அவர்களும் வருமளவுக்கு நல்ல பதிவுகளைப் போடவும் கத்துக்கணும். கத்துக்குறேன். இந்த ஒரு வாரம் நான் முடிக்க உதவியா இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்றோட ஒரு அத்தியாவசிய வேலை காரணமா வலைப்பூவுக்கு ஒரு ரெண்டு மாசம் லீவு விடறங்க. நவம்பர்ல தான் பார்க்க முடியும்னு நினைக்கிறேன். ஆனால் உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன்.

அப்புறம் தலைப்புக்கு வரேன். நம்ம முதல் பதிவுல முத்துலட்சுமியக்கா நிறைய பேசுறதைப் பத்தி எழுதி இருந்தேன். அவங்களையே இந்த ஒரு வாரம் வந்த நம்ம பதிவுகளைப் பத்தியும் நம்மளைப் பத்தியுமெழுதச் சொன்னேன். அவங்களோட பிஸியான நேரத்துல நமக்காக டைம் ஒதுக்கி எழுதி கொடுத்தாங்க. ரொம்ப நன்றியக்கா… இனி  முத்தக்கா……

……………………………………………………………………………………………………………………………………………

முடிவுரை முன்னுரை எழுதற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைப்பான்னு சொன்னேங்க நான் .. பரவாயில்லை எனக்கு எழுதிக் கொடுத்து பெரியாளாகிக்குங்கன்னு சொன்னப்புரம் நம்மளை கேட்டு செய்யலன்னா பெரிய பந்தா வுடறாங்கன்னு சொல்லிடுவாங்களோன்னு களத்தில் இறங்கிட்டேன்.. ப்ளாக்கரில் எழுதாததால் ஒரு குறைதான்வார்ட்ப்ரஸ் தளத்தில் எழுதும் சிலருடைய பதிவுகள் பின்னூட்ட திரட்டிகளில் தொடர்ந்து வருவதில்லை..முதல் பக்கத்தில் இருக்கும் போதே படித்தால் உண்டு சரி நட்சத்திரவாரத்தில் எல்லாரும் போல தன் திறமை எல்லாவற்றையும் முன்னே வைத்து ஒரு பந்தா காட்டுவாராக்கும் என்று பார்த்தால் வெறும் கேள்விகளால் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவாய் போட்டுக்கொண்டிருந்தார் ஏதாச்சும் செய்யணும்ப்பா என்று சில பேர் என்னேரமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்அது போல அதைசெய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று சொல்லிக்கிட்டு ஆரம்பித்தார் நட்சட்த்திரவாரத்தைஆமாம் இப்படிஎதாச்சும் செய்யனும் என்கிற ஆர்வம் இருக்கின்ற இளைஞர்கள் கம்மிதான். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும் வாழ்க வளமுடன்.. வழக்கம்போல நொய் நொய் ன்னு பேச ஆரம்பிச்சிட்டேனா..சரி விசயத்துக்கு வருவோம்.. முதல் பதிவு காமெடி.. எனக்கும் நாலு பேரை தெரியும்ப்பா என்று சொல்ல்லிக்கொண்டு உள்ளே வந்து வந்தனம் சொன்னார்தன் அடுத்த பதிவாக அயனுலகத்துக்கு க்காரணமான அவருடைய ஊரு பத்தி எழுதி கோயில் பத்தி விளக்கி இருந்தார் அதில் இருந்தே விழிப்புணர்ச்சி பதிவுகளை தொடங்கிட்டதா நினைக்கிறேன்குளத்தை தூர் வாரரது பத்தி ஆரம்பித்தார்..

அடுத்ததா நியூடெல்லி ரயில் , திருநங்கைகள் ஓரிரு உதாரணம் வச்சு எல்லாரையும் குத்தம் சொல்லக்கூடாது ன்னு சொல்லவர்ரார் சரிதானே இங்க லிவிங் ஸ்மைலோட பதிவுகளை படிக்கும் வரை எனக்கும் கூட கொஞ்சம் அவங்க மேல கோபம்கலந்த வருத்தம் இருந்தது. அரசியலில்நம்மாள செய்ய முடிஞ்ச விசயத்தை ஓட்டு போடறது தாங்க அத சரியாச்செய்யாம அரசியலை குத்தம் சொல்லக்கூடாது இப்படி அட்வைஸ்ம் உண்மை ஓட்டுப்போட போகாத படித்தவர்கள் தான் அரசியலை சாக்கடைன்னு சொல்றதேமுதல்ல ஓட்டை போட்டுட்டு பேசணும் இல்லயா அவங்க.அடுத்தது திருமூலர் சொன்னது எத்தனையோ விசயம் இருக்க இந்த விசயத்தை பத்தி இப்ப என்ன அவசரமோ சாருக்குசரிப்போகட்டும்எதோ பழமையிலிருந்து நல்ல விசயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரணும்ங்கற ஆர்வத்துல நாலு பேர் வந்து படிக்கணும்ன்னு தலைப்பை கவர்ச்சியா வ்ச்சி இதுவரை என்னோடது படிச்சாங்களா இப்ப பாருங்கன்னு குஷ்பு மேட்டரை போட்டுட்டு அதிகம் படிச்சதா ஒரு போஸ்ட் போட்டமாதிரி இது வும் அன்னைக்கு அதிகம் பார்வையிடப்பட்ட வேர்டுப்ரஸ் பதிவுல வந்தது..ம் நம்ம மக்களும் இப்படி தலைப்பு வச்சாத்தானே ஓடி வராங்க

மொசார்ட் சிம்பனியும் குழந்தைவளர்ப்பும் அதுவும் பழமையான நம்மோட ஒரு கலையின் விசயத்தை மீண்டும் வெளிச்சம்போட ஆசைப்படும் கனவு தான்.. ஓசியான் திரைப்பட விழாவைப்பத்தி இப்ப போட்டதை விட அதைப்பத்தி முன்பே போட்டிருந்தால் மக்கள் போய் பார்க்க வச்தியா இருக்கும் இனி செய்திகளை முந்தித்தரணும் அயன்எப்படியோ ஒரு சினிமா பதிவு..நட்சத்திர வாரத்தில்.சின்னபோட்டி நல்லாதா ன் இருந்தது ஆனால் பாவம் யாருமே அந்த மிட்டாயை வாங்க வரலைநகைச்சுவையாய் எழுதினதுக்கு எனக்குத்தான் தந்திருக்கணும் பசி பத்தி ரெண்டுவரியாவது எழுதினது நான் மட்டும் தான்.. தொலைக்காட்சி கட்டுப்பாடு ஒரு செய்திவிமர்சனம்மற்றும் ஊடக ஒழுங்கு பற்றீய ஒரு கனவுதிமுக அதிமுக ஒரே மேடையில் ???

அய்யா உங்க கிட்ட ரொம்ப கலாமின் தாக்கம் இருக்கு ரொம்ப கனவு காணறீங்க மங்கையக்காவுக்காக போட்ட கதை படிக்க திக்குன்னு இருந்தது எனக்குகதை என்னவோ தெளிவா இருக்கற மாதிரி தெரியல..அந்த பெண்ணை அவளோட கற்பனையை விவரித்த அளவு கதை தெளிவா இல்லைஒரு பொண்ணா இது மாதிரி ரொம்ப வெளிப்படையான கதை யை படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..இன்னொரு விசயம் சேக்கணும்…

மங்கையக்கா பேரு போட்டீருக்கே தலைப்பில் அந்த பொண்ணு க்கு எயிட்சா

(யக்கோவ் அதைத்தான் சொல்லாம புரிஞ்சிக்க வச்சிக்க புதுசா ஒரு உத்தி ட்ரை பண்ணேன். ஆனா மங்கையக்கா பேரைப் போட்டுதான் புரிஞ்சிக்க வைக்க முடியுது. நான் தோத்து இருக்கேன். ஓ.கே. – அயன்)

ஆண்டாள் பாட்டு இத்தனை கதை சொல்லி இருக்காங்களா சரிதான் இலக்கியம் படிக்கறாருன்னு கடைசியில் ஒரு கோடி காட்டி விட்டார் அயன்தொடர்ந்து நல்ல விசயங்களை பின்னூட்டம் பற்றிய கவலையின்றி எழுதுங்க..அயன்.

அன்புடன்

முத்துலெட்சுமி

Advertisements

Read Full Post »

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமிதம் நீர்த்து.                                                     (சிறுமை : காமம்)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.                         

(இவறல் : கடும் பற்றுள்ளம், ஏதம் : குற்றம்)

இது ரெண்டு குறளும் குற்றங்கடிதல் என்கிற அதிகாரத்துல நாம களைய வேண்டிய குற்றங்களாக வள்ளுவர் சொல்றாருங்கோ.  அதெல்லாம் என்னாதுன்னு பாத்தா… செருக்கு : துட்டு வந்தா ஓவரா ஆடுறதுன்னு வச்சிகிலாம், சினம் : ரொம்ப கோபப்படுறது, சிறுமையும் : ஓவரா சைட் அடிக்கறது இல்லாகாட்டி ஐடத்துகிட்ட போறதுன்னு வச்சிகலாம், இவறல் : துட்டு மேல ரொம்ப பிரியமா இருக்கிறதுன்னு பரிமேலழகர் சொல்றாரு, மாண்பிறந்த மானம் : ரைட்டா கிடைக்காத ரெஸ்பெக்டு, மாணா உவகை : அதிகமா கர்வம் புடிச்சு அலையறதுன்னு கூட வச்சுகலாம்.

இப்பொ இன்னாத்துக்கு இத்த சொல்றேன்னு பாக்குறீங்களா. நம்ம ஆண்டாளம்மா பாடிவச்ச பாட்ல ஒன்னை எட்து இதுகூட சேத்து வச்சு பாக்கலாம்னு தோணுச்சு.

அத்தாங்க  அன்றிவ் வுலகம் அளந்தாயடி போற்றின்னு அந்த அம்மா பாட சொல்லோ மகாபலியோட அகங்காரத்தை (செருக்கு) பெருமாளு வந்து அழிச்சாருன்னு சொல்றாங்க.

 சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றின்னு சொல்றச்ச இராவணனோட காமத்தை அழிச்சாருன்னு எட்துக்கலாமா?

அப்பாலிக்கா அந்த அம்மா சொல்றாங்க பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றின்னு. அதுல தீராத மோகத்துல அத்தாவது மாணா உவகைல ஓவரா ஆட்டம் போட்டானில்ல சகடாசுரன் அத்தை அழிச்சாராம்.

கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றின்னு அந்த அம்மா இன்னாத்த பாடுறாங்க….? அதுதான் சும்மா கன்னுகுட்டியா வந்த வத்ஸாசுரனை தூக்கி எறிஞ்சு விளாமரமா இருந்த கபித்தாசுரனை அழிச்சு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அட்சாரை அத்த பாடுறாங்க. அதுக்கு இன்னா அர்த்தம், வத்ஸன் வந்து சும்மா துட்டு மேல ரொம்ப ஆசை வச்சு கஞ்சாம்பட்டியா இருந்தானில்ல அதுதான் இவறல் அத்தையும், கபித்தனோட ரைட்டா வராத ரெஸ்பெக்டையும் அட்சு தூக்கினாரில்ல அத்தைப் பாடுறாங்க.

குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றின்னு அந்த அம்மா பாட சொல்ல நம்ம இந்திரனோட கோபமில்லை தீர்ந்து போச்சாம்.

இப்படி நம்மகிட்ட இருக்கிற நம்மளோட ஆறு கெட்ட பழக்கத்தையுமே அழிச்சு நம்மளை நல்லவனா மாத்துற தெறம அவன்கிட்ட தான இருக்குன்னு அந்த அம்மா பாடுதாம். இப்போ புரியுதா ஏன் பெருமாள் கோயிலுக்கு போய்கினுவான்னு சொல்றேன்னு!

Read Full Post »

அட ஆமாங்க ஒரு வாரம் நட்சத்திரமா நான் என்னைப் பற்றி சொல்வதைவிட உங்களுடைய பங்களிப்பை அதிகமாக எதிர்பார்த்தேன்  என்பது உண்மை.  அது தாங்க முன்னமே எழுதி வச்ச என்னுடைய நல்ல கதைன்னு நான் நினைச்சு பலராலும் வாசிக்கப் படாம விட்ட ஒரு கதையைத் திருப்பிப் போடறேன்.  ஏற்கனவே படிச்சவங்க இன்னொரு மீள்வாசிப்பு பண்ணிப் பாருங்களேன். இந்தக் கதை பிடிக்கலாம்.

…………………………………………………………………………………………………………………………………………….

இலவசம்

                       சென்னையின் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு அருகே வந்து அம்ர்ந்தாள். நீதி மன்றம் அருகே தான் உள்ளது. ஆனால் அவள் அங்கு இருந்து வரவில்லை. வாழ்க்கையே முடிந்துவிட்ட சோகம் அவள் முகத்தில். அந்த நிமிடத்திற்கு பின் அவள் தேகம் அனைத்தும் அனலாய்க் கொதித்தது. அந்த இடம் ஒன்றும் புதிதன்று. பத்து வருடத்திற்கு முன் அவளுடைய கனவுகளோடு அவளை வரவேற்றது இந்த இடம் தானே. உண்மையில் சொல்லப் போனால் அவளுடைய உயிரே இன்று தான், பத்து வருடம் கழித்துதான் அவளிடம் மீண்டுள்ளது. ஆனால் பயன் என்ன?

ஏழை விவசாயியின் மகள், படிக்காத பட்டிக்காடு, பட்டணத்து மோகம், சிலை போன்ற தேகம், அந்த அழகால் கிடைத்த காதல், இதழமுதையும், இடையமுதையும் கலந்து, கடைந்து ஒரு கனியமுதைப் பெற்றெடுத்து வீடு திரும்பும் இலட்சியம். உயிருள்ள அந்தக் கனவுப் படிமம் அவள் கண் முன் வந்து சென்றது. அவள் அருகே சென்றிருந்த யாரும் அவளுடைய கவனத்தை ஈர்க்கவில்லை.

கிராமத்தில் பாலங்கட்ட வந்த இஞினியர் என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தான். அவன் அணிந்திருந்த உடையும், பெண்களை கவர்ந்து இழுக்கும் வாசமும்அப்படிப்பட்ட ஒருவனுடைய காதல் படிக்காத பட்டிக்காட்டுப் பெண்ணுக்குஎல்லாம் அழகு தந்த இலவசம்.

பட்டணத்தில் இறங்கிய அன்றே கல்யாணம், அது முடிந்த உடனேயே மற்றதுஅவளது பெண்மையின் ஆழத்தைத் தொட்டு வெட்கப்பட வைத்த கனவுஇன்று அந்தக் கனவை பார்ப்பது போன்று கண்களை மூடிக்கொண்டாள். தன் கைகளால் தனது முகத்தையும் மூடிக்கொண்டாள். மெல்ல அவளது கைகள் கீழே நகர்ந்தன. அவள் வெட்கத்தை அவன் இப்படிதான் களைந்தான். கண் திறந்து பார்க்கக் கூச்சப் பட்டுக் கொண்டிருக்கையில் புதைந்து கிடந்த உண்ர்ச்சியையெல்லாம் உசுப்பி விடும் ஒரு இச்ச்இன்றும் அதே போன்ற உணர்ச்சி அவள் ஆழ் மனத்தில் உதித்தெழுந்தது. அருகே நிற்பவர்கள் அவளைக் கவனிப்பதைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை.

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் முதல் முறை ஒரு ஆண் உயிர் அவளை முட்டி நனைத்தது. அயர்வும், வெட்கமும், தோன்ற தனக்குள்ளேயே சிரித்துப் படுத்து இருக்கையில்தான் அந்த அந்தரங்கம் அரங்கேறக் காத்திருந்தது தெரிய வந்தது. அன்று அவளை விட்டுப்போன உயிர் இன்றுதான் திரும்பி வந்தது. ஆனால் பயன் என்ன? மெல்ல மெல்ல தனது கைகளை உண்ர்ச்சிகளற்ற மார்பகங்களூடே எடுத்துச் சென்றாள். காதலுக்குக் கிடைத்த பரிசு அந்த மோகம் என்றிருக்கையில், அந்த மோகமே மூலதனமாய் மாறி வயிற்றை மட்டும் கழுவ போராடிய நடை பிணம் இன்றுதான் உயிர் பெற்றது. ஆனால் பயன் என்ன?

அந்த உயிர் அவளுக்குள்ளே தொலைந்து போன அவளுடைய பெண்மையைத் தேடுகிறது. கல்லான உடம்பிற்குள் ஈரத்தைத் தேடுகிறது. மானம் பறித்துக்கொண்டு போன மனத்தைத் தேடுகிறது. அது எங்கே? இவளுடய மார்பகங்கள் ஒவ்வொரு முறையும் பிழியப்படும்போது அந்த மனம் நொறுங்கி விட்டதா? இல்லை அடிவயிற்றை நிரப்பிய அசிங்கத்தில் கரைந்து போனதா?

எங்கே அந்த மனம்? திடீரென்று கண் விழித்தாள். கண்களில் காளியின் வேகம். சமூகத்தைச் சுட்டெறிக்கும் வெம்மை. அவள் கைவிரல்களும் வேலாய் மாறியது. தனது ரவிக்கைகளைக் கிழித்தாள். புடவை முழுவதையும் களைந்தாள். திடீரென்று அந்த இடமே கலவரமூண்டது. “டாய் கசுமாலங்களாஇந்தா டாஇந்தாஇப்பொ வந்து எடுத்துக்கொஇந்த சுகத்துக்குத்தானே அப்பாவிகளே ஏமாத்துறே… “

அரை நிர்வாணம் முழு நிர்வாணம் ஆனது. அழகுகள் கூட கலவரத்தில் அர்த்தமற்றுப்போனது.

“வாங்கோ டா வாங்கோதைரியம் இருந்தா இனிமே வாங்கோ டா…” அருகில் இருந்த ஆண்கள் சிலர் வெட்கிக் கண் மூடினர். சிலர் அவளுக்கு ஆடை மாற்றச் சென்றனர். சிலர் பரிதாபம் பொங்க பார்த்து நின்றனர். அங்கும் சிலர் தனது காம வெறியைப் பார்வையால் தீர்த்துக் கொண்டிருந்தனர்.

“ஏய் கிட்ட வாராதேவயித்தைக் கழுவிக் கொண்டிருந்த அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையைக் கழுவிட்டீங்களே… ”

அதற்குள் ஒருவன் வேகமாய்ச் சென்று அவளை அறைந்தான். அது அவளுக்கு உறைக்கவில்லை.

“என்ன எனக்கு மட்டும் நோயைக் கொடுத்துட்டு நீங்க எல்லாம் நல்லா வாழலாம்னு நினைக்குறீங்களாவிட மாட்டேன். ..வாடா வாபொறுக்கிப் பசங்களா. துட்டும் கொடுத்து ஃப்ரீயா சுகந்தானடி கொடுக்குறோம்னு சொன்னீங்களேஇப்போ நான் தரேன்டா வாங்கோ… -| என்று தன் நிர்வாணத்தை மறைக்க மாட்டேனென்று பிடிவாதமாய் மல்லுக்கு நின்றாள்.

அப்பொழுதுதான் அவளுடைய வேதனை மற்றவருக்குப் புரிந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் காக்கிச்சட்டையிலும் அவளைச் சூறையாடிய கடமை அங்கு வந்தது.

Read Full Post »

அட ஆமாங்க மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த கட்சிகள். அவை எல்லாம் ஒவ்வொரு மூலையில நின்றுகிட்டு ஒவ்வொருத்தரையும் திட்டி தீர்க்கிறத இப்போ தொலைக்காட்சி வரைக்கும் கொண்டு வந்திட்டாங்க.

அதே இரெண்டு கட்சி அரசியல் அமைப்பு கொண்ட அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னாடி ரெண்டு தலைமையும் ஒரே மேடையில் ஒவ்வொருத்தருடைய கருத்துகளையும் சொல்லி விவாதம் பண்றாங்க. 

  இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான விவாதம் நம்ம நாட்டுக்கு ரொம்ப அவசியம்னு நான் நினைக்கிறேன். மத்திய அரசிலாவது தலைமைகள் ஒரே மேடையைப் பகிர்வதை பார்த்திருக்கிறோம். மாநில அரசுகள் ம்ம்ம்…

இன்னும் எவ்வளவு நாள் தான் ஓட்டுப் போடுகிறவங்களை இப்படி ஏமாத்திகிட்டு இருக்கப் போறாங்க?  என்றைக்குதான் அப்படிபட்ட ஒரு முதிர்ந்த அரசியல் நம்ம நாட்டுலையும் வரும். சட்டசபைல கூடி விவாதிக்குற விஷயத்தை ஒரு தடவையாவது தேர்தலுக்கு முன்னாடி பொதுவான இடத்துல விவாதிச்சா என்ன?

Read Full Post »

                தொலைக்காட்சிகள் சமீப காலமாகக் கட்டுப்பாடின்றி பல நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது நாம் கண்டு வரும் உண்மை. தேவையில்லாத செய்திகளை பரபரப்பாக மாற்றுவது, சிலரின் தனிமையில்  நுழைந்து அசிங்கப்படுத்துவது, சஞ்ஜ்ய் தத்தை தியாகி ஆக்குவாது என பல வரம்பு மீறல்கள் கண்கூடு.

                 இவை அனைத்தையும் கட்டுப்பட்டுத்த அரசு ஒளிபரப்பு கட்டுப்பாடு மசோதா ஒன்று தயாரித்து உள்ளது. மொத்த தொலைக்காட்சி நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்த முறை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பாடும் என்று தெரிகிறது.

                 ஆனால் மக்களாட்சியில் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டால் இனி ஊடகங்கள் அரசின் மொழியைத்தானே பேச வேண்டியதிருக்கும்.

                   மக்களவையில் கேள்வி கேட்க துட்டு வாங்கிய நல்ல் எம்.பி.க்களை யார் அடையாளம் காண்பது?  அரசு நினைத்தால் ஒளிப்பரப்பை ரத்து செய்துவிடும்.  இது மக்களாட்சி கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுதானே?

                  இதற்கு பதிலாக ஒளிபரப்பு ஸ்தாபனங்கள் ஒன்று கூடி தாங்களே தங்கள் நடத்தையை சீர்படுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்தினால் அரசின் தலையீட்டும் இருக்காது, இவர்களின் அத்துமீறல்களும் கண்காணிக்கப் படும். ஆனால் அப்படி ஒரு முதிர்ந்த தொழில் நடத்தக்கூடிய அளவிற்கு இன்றைய தொலைக்காட்சி நிறுவனங்கள் பக்குவப் பட்டுவிட்டனரா என்பது தான் என் கேள்வி?

Read Full Post »

நட்சத்திர வாரத்தில் அனைவருடைய சிந்தனைக்கும் தீனி போட விரும்பி இதோ ஒரு சின்ன போட்டி ஒன்று வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
            அபோகாலிப்டோ படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பலருக்குத் தெரிந்திருக்க கூடும். அந்த படத்தில் ஒரு பெரியவர் கதை ஒன்று சொல்வார். அதாவது மனிதன் காட்டில் இருக்கும் விலங்குகளிடம் தனக்கு தேவையான ஒவ்வொரு பலத்தையும் வரமாகப் பெற்றுச் செல்வானாம். அப்பொழுது ஒரு ஆந்தை இவன் நம் அனைவரையும் விட பலசாலியாகி விடுவானோ என்று சந்தேகப் பட்டு கேட்கும். அதற்கு ஒரு புலி,”இல்லை இவன் அனைத்தையும் பெற்றாலும் இவனுடைய வயிறு என்றும் அடங்காது அதன் தேவையைப் பூர்த்தி செய்ய இவன் எவ்வள்வோ போராட வேண்டியதிருக்கும்” என்று சொல்லும். பழங்குடி மக்களிடைய இந்த கதை இன்னும் நிலவி வருகிறது.
            தக்கோன் நிலைப்பான் என்கிற டார்வினுடைய கொள்கையும் இன்று ஈராக் ஆப்கான் போர் வரையிலும் அனைத்தின் அடிப்படையும் இந்த பசி தான். இதைத்தான் என்னுடைய முந்தைய அயனீகம் என்ற கவிதையிலும் சொல்ல முயன்றேன்.
            போட்டி என்னவென்றால் “பசி என்ற சொல் உலகில் இல்லாவிட்டால்…” என்ற தலைப்பில் அனைவரும் தத்தம் கற்பனை குதிரையை ஓடவிட்டு என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து எழுத வேண்டும். அது கவிதை வடிலும் கட்டுரை வடிவிலும் கூட இருக்கலாம். இந்திய நேரப்படி சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் வரும் பின்னூட்டங்களை (தங்கள் வலைப்பூவில் எழுதி பின்னூட்டத்தில் சுட்டி அனுப்பினால் போதும்)  படித்து சிறந்த பின்னூட்டங்கள் குறித்து என்னுடைய கடைசி பதிவில் எழுதப்படும்.

அதோட மட்டுமில்லீங்க ஏதோ வலைப்பூ மூலமா கொடுக்க முடிஞ்ச சின்ன 

பரிசு கீழே காணப்படும் டெம்டேஷன் மிட்டாயும் வழங்கப் படும்.  

9.jpg

வேற என்ன!  உங்களுடைய படைப்பை போட்டுவிட்டு ஒரு லிங்க் நம்ம பின்னூட்டத்துல போட்டுடுங்க ஓ.கே யா? 

வேறென்ன மக்களே உங்களுடைய கற்பனை குதிரையைத் தட்டி விடுங்க… ஓடட்டும்….  இனி போட்டியை யார் ஆரம்பிக்கப் போவது?

Read Full Post »

                டெல்லியில் சென்ற மாதம் ஒன்பதாவது ஓசியான் (ஆசிய-அரபு) திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒரு படத்திற்கு 20 ரூபாய் மட்டும் டிக்கட் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் க்ரீன் பார்க், பி.வி.ஆர் திரையரங்குகளில் ஒரு வாரம் 100க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் நண்பர்களோடு நானும் கடைசி நாள்தான் சென்று பார்த்தேன். உலக அளவில் இருந்து பல நல்ல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், இந்தியப் பிரிவிற்கான போட்டியில் பருத்திவீரன் திரையிடப் பட்டது நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய செய்தி.

                அந்தப்படத்தின் சிறப்பாக அனைவரும் தன்னை ஏதுனும் ஒரு நிலையில் இணைத்துப் பார்க்க வைத்த திரைக்கதை பெருமையாகப் பேசப்பட்டது.  அதே நேரத்தில் முக்கியமாக இந்திய பிரிவில் சிறந்த படத்திற்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கொடுக்கப்பட்டது நம் அனைவரையும் மகிழ்விக்க வந்த செய்தி.

                தமிழில் புது இயக்குநர்கள் பலர் ஒரு நல்ல கதையை சிறப்பான உத்திகளோடு படமாக்கும் முயற்சியில், ஈடுபட்டு இருக்கையில் இந்தச் செய்தி தமிழ் சினிமாவின் ஆரோக்கிய்த்திற்கு உதவும் என்றே நம்புகின்றேன்.  அவர்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் சினிமாவின் பெற்றோர்களின் கடன் தானே! அனைவரையும் மகிழ வைத்த பருத்திவீரன் தயாரிப்பு குழுவினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களை நமது நட்சத்திர வாரத்தில் கௌரவிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

Read Full Post »

Older Posts »