Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘யோகா..!’ Category

வணக்கம் நண்பர்களே..!

ரொம்ப நாளைக்கு முன்னாடி யோகாசனம் பற்றிய தொடர் ஒன்று ஆரம்பிச்சோம்.  அதை இப்போ தொடரலாம்னு முடிவு பண்ணி எழுத ஆரம்பிக்குறேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி யோகாசனம் நம்ம மனசையும் உடலையும் சுத்தமா வச்சுக்கத்தான்.  இதுல முதல் பயிற்சி நம்மளோட உடல்ல அங்கங்கே தங்கி சக்தியோட்டத்திற்கு தடையா இருக்கிற வாயுவை எடுக்கிறது.  அதைத்தான் பவன்முக்தாசனம்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இதுல பலநிலை பயிற்சிகள் இருக்குது. இதுல நாம அடையப் போகிற பயன் நம்மளோட உடலில் இருக்கிற அசைவுகளையும், அங்கே தேங்கி இருக்கிற காற்றையும் உணருவதுதான். இதோ பயிற்சி ஆரம்பம்.

1. ஆரம்ப நிலை (பிராரம்பிக் ஸ்திதி):

இதோ கீழே கொடுக்கப் பட்டுள்ளது போல் காலை நன்றாக நீட்டி சற்று சாய்ந்து, முதுகு, கழுத்து, தலை இவற்றை நேராக வைத்து நன்றாக மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள்.

fig-1.jpg

1.(அ)  பாதங்குலி நமன் :

அதே நிலையில் சற்றே தங்கள் பாதங்களின் விரல்களை கீழே கொடுத்திருப்பது போன்று நீட்டி மடக்கவும்.  விரல்கள் பின்னுக்கு வரும்போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.  முன்னால் விரல்களை நீட்டும்போது மூச்சை வெளியே விட வேண்டும்.  அப்படி செய்யும்போது கண்களை மூடியபடி மூச்சுக்காற்றைக் கவனிக்கவும். மேலும் அப்படி விரியும்போது காலில் ஏற்படும் உணர்வுகளைக் கவனிக்கவும்.  இதை 10 முறை செய்த பின் முன்னே சொன்ன ஆரம்ப நிலையில் இரெண்டு மூச்சு அமைதியாக அமர்ந்து கொள்வது நல்லது.

1. ஆ. கூல்ஃப் நமன்:

 மேற்கூறிய அதே பயிற்சியை விரல்களில் இருந்து ஏறி கனுக்காலில் செய்வதுதான். மேலே இரெண்டாவது படத்தில் கொடுத்திருப்பது போன்று செய்ய வேண்டும்.  ஆனால் நம்து கவனம் சற்றே மூச்சு, எண்ணிக்கை மற்றும் பாதம் கனுக்கால் தொடைப்பகுதி சதைகளில் ஏற்படும் மாற்றங்களில் இருக்க வேண்டும்.

fig-2.jpg

1. இ. கூல்ஃப் சக்ரா:

இப்பொழுது பாதங்களை கீழே காட்டியுள்ளது போன்று சுற்ற வேண்டும்.

fig-3.jpg

முதலில் வலது பாதத்தைச் சுற்ற வேண்டும். வலமாக 10முறையும், இடமாக 10 முறையும் சுற்றுக. இதையே இடது பக்க பாதத்திற்கும் செய்க.

இரெண்டாம் நிலையாக இரெண்டு பாதங்களையும் ஒன்றாக வைத்து சுற்றுங்கள்.

மூன்றாம் நிலையாக இரெண்டு பாதங்களையும் பிரித்து வைத்து ஒரே நேரத்தில் சுற்றுங்கள்.

ஒரு சுற்றில் பாதம் மேலே ஏறும்போது மூச்சை உள்ளே இழுங்கள். பாதம் கீழே இறங்கும்போது மூச்சை வெளியே விடுங்கள்.

இன்றைக்கு இத்தனை பயிற்சி போதும். மீண்டும் அடுத்த பதிவில்.

Advertisements

Read Full Post »

வணக்கமுங்க….. போன வகுப்புல நம்ம பாடி சோடா அடிச்ச லூட்டி தாங்கல… அவரு பாட்டுக்கு சுருதி பின்னாடி ஓடிட்டாரு. யோகா வகுப்பு ஆனா அவருக்காக நிக்காது. அதுதான் நானே நான் புரிஞ்சிகிட்டத சொல்ல வந்தேன்.

யோகா பண்றதுக்கு ஆரம்பிக்கும் முன்னாடி சில விஷயங்களை நாம கவனிக்கணும். அதை இங்கு பார்ப்போம்.

1. எப்பையுமே நாம குறிப்பிடாத நேரம் தவிர மூக்கால மட்டுமே மூச்சு விடுங்க

2. நம்மளோட உடல், மனம் எல்லாத்தையும் ஒன்று படுத்துவதற்காகவே இந்த யோகா செய்கிறோம்னு சொன்னோமில்லை. அதுக்கு உடல்நிலை, மனநிலை, ஆன்மீகநிலைன்னு ஒவ்வொரு நிலையிலயும் நாம உணர வேண்டிய விஷ்யங்கள்்யங்கள் இருக்கு. அப்படி ஒவ்வொரு நிலையிலையும் அதை உண்ர்ந்து நாம முன்னேறுனா ரொம்ப நல்லது. சரி அதைவிடுங்க நமக்கு ஆன்மிக நிலை வளர்ச்சியை உணரப் போகிறது பத்தி பேசமாட்டோம். அதுக்கு நானில்லை சித்தி அடையனும். ஆனால் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் தேவையானதை சொல்லுகிறேன். அதுனால ஒரு ஆசனம் செய்யும்போது நாம முக்கியமா கவனிக்க வேண்டியது நம்து உடல்ல ஏற்படுகிற மாற்றங்கள் தான். நாள்பட நாள்பட உங்களுக்கே மனசைப் பற்றி புரியும்.

3. ஒவ்வொரு ஆசனம் முடிந்த பிறகு சவாசனத்துல இருந்த மனதை அமைதிப் படுத்த வேண்டியது ரொமப முக்கியம்.

4. இடைநிலை முதிர்நிலை ஆசனங்கள் செய்யும்போது மாற்று ஆசன்ங்கள் செய்ய வேண்டியது அவசியம்

5. காலைல செய்றது ரொம்ப நல்லது. அதாவது சூரியன் உதயமாகும்போது. சூரியன் மறையும்போதும் செய்யலாம். மற்ற நேரங்கள்ல செய்றதுக்கு அவ்வளவு பயன் இருக்காது.

6. காற்றோட்டமான சுத்தமான இடத்துல வச்சு செய்றது ரொம்ப தேவை. முக்கியமாக நாற்றம் எதுவும இருக்கக் கூடாது. அக்கம் பக்கத்துல நாற்காலி, கட்டில்னு இருந்து நீங்க யோகா பண்ணும்போது்ண்ணும்போது அடி் பட்டுகிட்டா நான் பொறுப்பில்லை.

7. கீழ ஏதாவது விரிச்சுகிட்டீங்கன்னா உங்க உடம்புல வருகிற சக்தி பூமி வழியா போயிடாது.

8. உங்களுக்கு வசதியான உடை உடுத்திக்கூங்க. இருக்கமா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்.

9. பச்சதண்ணில குளிச்சிட்டு பண்ணிங்கன்னா பயன் கூடும்.

10. உங்கள வயிறு காலியாக இருக்கணும். மலச்சிக்கல் வாராம பாத்துக்கூங்க். அதுக்காக இருக்கிற ஆசனமும் நாம பார்ப்போம்.

11. சாப்பாட்டு விஷ்யத்துல இதுதான்னு எதுவும் கட்டாயம் இல்லை. ஆனா மாமிசம், எண்ணெய்ப் பலகாரம், காரம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது்வயிறு. அரைவயித்துக்கு சாப்பாடு,கால் வயித்துக்குத் தண்ணின்னு சாப்பிட்டீங்கனா நம்ம சாப்பாட்டுல இருந்து உற்பத்தியாகுற சக்தியின் அளவு கூடும்.

12. ஒவ்வொரு ஆசனமும் உங்கள் வச்திக்காக பண்றது. அதுனால அதிக்மா கஷ்டப்படுத்தக் கூடாது.

13. ஏதாவது ஆசனம் செய்யும்போது எங்கையாவது அதிகமான வலி இருந்தால் உடனே பயிற்சியை நிறுத்திட்டு மருத்துவரை அணுகுங்கள்.

. ……………………………………………..

ஸ்ஸ்ஸ்ஸ…….. நிறைய ரூல்ஸ் பேசியாச்சு. சரி விடுங்க ஆரம்பிக்கும் போது நாம முக்கியமா செய்ய வேண்டிய ஆசங்களை பவனமுக்தாசனா பகுப்பு ஆசனங்கள்னு பிரிக்கலாம். இதுவேதான் சில மனோதத்துவ நிபுண்ர்களும்தொடர்ச்சியா பண்ணுவாங்களாம் (அதுக்கு பேரு அவங்க மொழியில PMR – Progressive Muscular Relaxation). ஏன்னா இது

1. மனசுல பதிஞ்சிருக்கிற சில தேவையில்லாத மின்னுண்ர்வுகளை நீக்கி களைப்பை நீக்கும். புத்துண்ர்ச்சி தரும்.

2. அதுனால நாம் நரம்புகள்லையும், இரத்த நாளங்களிலும் சில பாதிப்புகள்னால வரக்கூடிய அடைப்புகள் நீங்கும்.

3. எலும்பு சதை எல்லாம் விரிவடைந்து மேற்கொண்டு நாம செய்ய வேண்டிய ஆசனங்களுக்கு உதவியா்வியா இருக்கும்.

இன்றைக்கு நிறைய பேசிட்டேனோ. சரி ஒன்னு பண்ணுங்க நாளைக்கு நாம சந்திக்குற வரைக்கும் உங்களுக்கு இன்னும் தெரிஞ்சிக்கணும்னா பவனமுக்தாசனா பத்தி படிச்சுகிட்டு இருங்க நாளைக்கு இன்னும் விளக்கமா பார்க்கலாம்.

Read Full Post »

ரொம்ப நாளா யோகாவைப்ற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.  ஆனால் அதற்கு நான் முழுமையாக யோகா பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற்று அதன் பின்பு எழுதினால்தான் நன்றாக இருக்கும்.  ஆனால் அது விரைவில் முடியாது என்பதால் பாடி சோடாவை அணுகினேன். அவர் எனக்காக இங்கே யோகா வகுப்பு எடுக்க ஒப்புக் கொண்டார். ஆகவே இதோ அந்த வகுப்புகளைத் துவங்கி ஆயிற்று. முதல் வகுப்பில்யோகா என்றால் என்ன? நமக்கு அது ஏன்  முக்கியம் என்பதுகுறித்து இன்று காலையில் தான் கற்றுக் கொடுத்தார். இதோ அந்த முதல் வகுப்பு….. ்கொடு

என்னங்கையா அப்ரசெண்டுகளா.. என்னடா அண்ணேன் மூணு வருஷமா பில்ட் அப் மட்டும் தான் கொடுக்குறானேன்னு நினைச்சீங்களா..? அதுதான் இல்லை. எடுத்த உடனே குங் பூ கத்துக்கணும்னா முடியுமா? அதுதான் கொஞ்ச நாள் குங் பூக்கூ தயார் பண்ண இந்த பாடி சோடா வாயால உங்க பாடிய பத்தி கொஞ்சம் பேசலாம்னு வந்திருக்கேன். ஏம்மா சுருதி எங்கமா இருக்கே… நான் உனக்கு யோகா கத்துத் தரேன்னு சொன்னேனே இப்படி உங்க அம்மா பச்சப் புள்ளையா வளத்து இருக்காங்களே… வா இங்கா வா இப்படி… உட்காரு அங்குட்டு… நான் சொல்றத கவனமா கேட்டுக்கணும் சரியா..?

யோகான்னா என்னன்னா…?

“மாஸ்டர் எனக்குத் தெரியும் அது அவன் தங்கச்சி ரொம்ப சூப்பரா இருப்பா..?”

ஒத வாங்குவீங்க ராஸ்கல் அயோக்கியப் பயலுகளா.. இந்த வயசுல உங்களுக்கு சைட்டு கேக்குதா சைட்டு..உங்க உடம்ப எப்படி உங்க மாஸ்டர் பிட்டா வச்சிருக்கேன்.. அப்படி வச்சுக்க சொல்லலாம்னு கூட்டியாந்தா.. எப்பப்பாரு பொண்ணுங்க நினைப்பு.. சரி பாடத்தைக் கவனி.. யோகாங்கிற வார்த்தை சம்ஸ்க்ருதத்துல இருந்து வந்ததாம. அப்படி யூனிடின்னு நம்மத் தமிழ்ல சொல்லுவாங்க. லோக்கல் பாஷைல சொல்லனும்னா ஒருமைப்பாடுன்னு வச்சிக்கலாம். எதுக்கு ஒருமைப்பாடு. அதுதான் நம்ம பாடில பல உறுப்புகள் அதோட வேலைய தனியா சென்சுகிட்டு இருக்கு அதுகள எல்லாத்தையும் சேர்த்து் ஒன்னுபோல நம்ம பிட்னஸ்க்கு ஒன்னு சேக்கறதுன்னு அர்த்தம்.

இப்போ நாம எல்லாரும் ஒரு நாளைக்கு பல விஷயங்களை சந்திக்கிறோம். அதுனால சில நேரம் ஓவர் பீலிங் ஆகி உட்கார்நதிடறோம். அப்படி பீலிங்குல உட்காரும்போது நம்ம மூச்சுக்காத்து எல்லா செல்லுலையும் போய் சேராம வெறும் மேலோட்டமாவே நின்னுடறது. அது மட்டுமில்லாம நம்ம எலும்பெல்லாம் வளர வளர வளையிற தன்மை குறைஞ்சு நட்டமா நின்னுடறதால வயசாடுச்சுன்னா குனிய முடியல நிமிர முடியலன்னு ஒரே கஷ்டம். சுருதி உங்கம்மாவுக்கு நீ கத்துகிட்டு போனதையெல்லாம் கத்துக் கொடுமா..

ஆனா நம்ம முன்னோர்கள் என்ன சொன்னாங்கன்னா.. நம்ம வாழ்க்கையில ஒரே லட்சியம் உயர்ந்த ஆன்மிக ஞானத்தை அடையறது.

“மாஸ்டர் வெள்ளையானையா கருப்பு யானையா?”

யானை இல்லைமா ஞானம் சொல்லு….்்த்த்த்த்த்த்ஹ்ட்

“யானை”

ஸ்ஸ்ஸ்ஸ்…………… முடியல. சரி அதைவிடு. ஆன்மிக ஞானம்னா நமக்குள்ள இருக்குற சக்தியெல்லாம் முழுசா ரியலைஸ் பண்றதுன்னு அர்த்தம். கடவுள அடையறதுன்னு… தெரியாத ஒன்னப் பத்தி சொல்ல மாட்டேன். இந்த அயன் பய கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம கிட்ட கத்துகிட்டு போய் வாழ்க்கையோட அர்த்தத்தைப் பத்தி எழுதி புயூசர்ல மனுசங்க எல்லாம் எப்படி இருப்பாங்கன்னு கவிதைங்கிற பேர்ல அயனீகம்னு ஒன்னு கிறுக்கினான். அது யாருக்குமே புரியலைன்னு சொன்னாங்க அது வேற விஷயம். ஆனா அதுல சொல்ற மாதிரி லைப்ல ஒரு முன்னேத்தம் வேணும் இல்லையா. அதுக்கு தான் யோகா யூச்புல்.

ஆனா இன்னைக்கு இருக்கிற நிலைமைல ஆன்மீகம் பத்தி பேசினாலே நான் போலி சாமியார்னு சொல்லுவான். அதுனால இந்த யோகா பதாஞ்சலி சொன்ன 8 உறுப்பு அதுதான் யாமா, நியாமா, ஆசனா, பிராணயாமா, பரதியாஹரா, தாரணா, தியானா, சமாதி…

“மாஸ்டர் இவங்க எல்லாம் யாரு மாஸ்டர்”

வாய மூட்றா வாய மூட்றா நானே மனப்பாடம் பண்ணி ஓட்டிகிட்டு இருக்கேன் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுகிட்டு. எங்க விட்டோம். ஆம் அந்த எட்டு ஸ்டேஜ்ல இருந்து ஆன்மிகத்தைப் பத்தி நான் சொல்லல்ல. ஆனா உங்க மன்சையும் உடலையும் கட்டுக் கோப்பா வச்சிகிட்டு வாழ்க்கைல நல்லா இருக்கிறதப் பத்திதான் நாம பேசப் போறோம். ரைட்டா.. என்னம்மா சுருதி கொஞ்சம் இந்த யோகாவை மாஸ்டர்கிட்ட கத்துகிட்டன்னா அப்புறம் ரோட்ல போற மொள்ளமாறி முடிச்சவுக்கி கிட்டெல்லாம் போயி நீ திருந்தவே மாட்டியான்னு நிக்க மாட்ட சரியா…

கடைசியே.. எதையுமே ப்ளான் பண்ணாம பண்ணக் கூடாது.. அப்படி ப்ளான் பண்ணாம பண்ணா விபரீதத்துல போயி மாட்டிப்போம். அதுனால நாளைக்கு எப்படி யோகா பண்ண ஆரம்பிக்கிறது… எந்த வியாதிக்கு என்னென்ன யோகா நல்லதுன்னு மாஸ்டர் எடுபேனா சரியா.. நாளைக்கு எல்லாரும் வந்திடுங்க…. இப்போ எல்லாம் போயிடுங்கோ. நான் கொஞ்சம் சுருதி கூட….

……………….

அய்யோ மாஸ்டர்.  சரி அடுத்த வகுப்பில் ஆரம்பிக்கும் போது நாம் செய்ய வேண்டிய பயிற்சிகளைப் பற்றி நடத்துவாராம்.

Read Full Post »