Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘e-Schools(மென் – பள்ளிகள்)’ Category

வணக்கம்,

என்னுடைய ஆசையை மதித்து பூங்கா இதழில் பதிவு செய்த பெரியோர்களுக்கு என் நன்றிகள்.

நான் சொல்லிய விஷயம் குறித்து இன்னும் தெளிவாக எழுதலாம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இதோ e-schools பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மென் பள்ளிகள் (e-schools) என்பது வலையுலகை மூலதனமாக வைத்து நடத்தப்படும் பள்ளிகள். இது குறித்து உலக அளவில் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இந்தியாவில் இன்னும் இது திட்ட அளவிலேயே தான் உள்ளது. ஐ.நா. வின் global e-schools and communities initiatives என்ற திட்டத்தின் மூலமாக Information and Communication Technologies ஐ கல்வித்துறையில் பயன்படுத்த பல திட்டங்கள் இயற்றப் பட்டு வருகிறது. இவர்கள் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதன் மூலமாகத் தொழிற்கல்வி திட்டத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளனர். இது மிகவும் சுலபமாக முடியும் ஏனென்றால் நாம் கற்றுக் கொடுக்க வேண்டியவர்கள் வயதுக்கு வந்தவர்களாகவே அமைகின்றனர். ஆனால் வலை மூலமாக ஒரு மென்பள்ளி உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களை வைத்து செயல்படுகிறதா அது முடியுமா என்று வலை முழுவதும் தேடிய பின்புதான் அது முடியும் என்ற நம்பிக்கை கொள்வது போல் கனடாவில் உள்ள ஒரு மென் – பள்ளி தென்பட்டது. உங்கள் பார்வைக்காகவும் நமது திட்டத்திற்காகவும் இதோ அது குறித்து சில விளக்கங்கள்.

அந்த மென் – பள்ளியின் வளாகத்தை இங்கே சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்.

முதலில் அவர்களுடைய நோக்கத்தை சற்று பார்ப்போம்.

வேலை காரணமாகவோ குடும்பச் சூழல் காரணமாகவோ பள்ளி செல்ல இயலாதவர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வீட்டில் அமர்ந்த படியே அவர்களால் தங்களது படிப்பைத் தொடரமுடியும். இதுகிட்டத்தட்ட நான் முந்தையமடலில கூறியதோடு ஒத்துப் போகிறது அல்லவா. ஆனால் இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு இவற்றை எப்படிசெய்யப் போகிறோம் என்பது தான் நமது முதல் பிரச்சனை. முதலில் நாம் இநத அமைப்புக்கு ஏற்ற மென்வளாகத்தை (domain) அந்தப் பள்ளியின் அமைப்பைப் போன்று ஒரு பக்கம் ஏற்படுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க software engineersஓட வேலை. நமக்கு அவ்வளவு அறிவு கிடையாதுங்க.. அப்புறம் அவர்களுக்குத் தேவையான பாட திட்டத்தை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடத்தையும் எந்த முறையில் நாம் அமைக்கப் போகிறோம், அதன் விளைவை எப்படி சோதிக்கப் போகிறோம் என்பதெல்லாம் ஆசிரியர் பயிற்சி பெற்ற சிலருடைய உதவியோடு நாமே செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதைவிட முக்கியமான கட்டம் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்பதுதான். இதற்கு நான் முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்தத் துறையில் வேலை பார்க்கும் NGOக்களை தான். ஆம் அவர்களுடைய உதவியோடு பல இடங்களில் மையங்களை உருவாக்கி அங்கே இலவச கணினி வழி கல்வி வழங்க வேண்டும்.

அதோடு அந்தப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த மாணவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் சில வாக்கு மாறாத ஆசிரியர்களும் தேவை.

இவ்வளவுக்கும் தேவையான பணத்திற்கும், ஆளுதவிக்கும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய மூலங்கள் சிதறிக் கிடப்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வலைஞர்களின் ஆதரவைத்தான் மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன். அது எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறும்…

அயன்.

Advertisements

Read Full Post »

வணக்கம் தலைவி தலைவர்களே…

எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு ஆசை இருந்துகிட்டே இருந்தது. அதை எப்படி செயல் படுத்துவதுன்னு புரியவே இல்லை. இப்போதான் அந்த ஆசைக்கு ஒரு உருவம் வந்து கொண்டு இருக்கு. இந்த நிலைமைல நான் நாடுவது எல்லாம் நம் வலை நண்பர்களின் அன்பும் ஆதரவும் தான்.

சரி நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம். அந்த நேரத்துல தான் என்னோட பல்கலையில போன வருஷம் தேசிய சமூக அறிவியல் மாநாடு நடந்தது. அதுல இதைப் பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி கட்டுரையை அரங்கேற்றினேன். ஆனால் அது வெறும் தாளிலேயே இருந்துவிடக் கூடாதுன்னு என் பள்ளிகளிலும் பிற பள்ளிகளிலும் போய் அதை நடைமுறை படுத்த விசாரித்தேன். ஆனால் அங்கு வலையுலகம் வாங்கியுள்ள நல்ல பேரினால் பள்ளிகளில் வலைத் தொடர்பு இழுக்கவே மறுத்து விட்டார்கள்.

என்ன செய்ய? இந்த நிலையில் உதயமானதுதான் ஒரு புது யோசனை. நாம் ஏன் ஏற்கனவே இருக்கின்ற ஒரு அமைப்புக்குள் சென்று செய்ய வேண்டும். நாமே ஒரு புது அமைப்பை உண்டு பண்ணலாமே என்று தோன்றியது. பின்பு எனது பேராசிரியரிடம் கேட்டதற்கு அவரும் சிறு சிறு ஆலோசனை சொன்னார். இவைஅனைத்தையும் உங்கள் முன் வைக்கிறேன். இது நடைமுறை சாத்தியம் என்பவர்களும், இல்லை என்று நம்புவர்களும் தாராளமாகத் தங்கள் கருத்துகளை அனுப்புங்கள். அதற்காக ஏங்கி நிற்கிறேன்.

யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் – பள்ளி துவங்க வேண்டும். இங்கே ஆசிரியர்கள் தினம் வேலைக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. வலைமூலம் நம் பள்ளியின் பாடத்திட்டமும் அதற்குத் தேவையான கலந்துரையாடல்களும் கொடுக்கப் படும். மாணவர்கள் தாங்கள் புரிந்து கொள்ளும் விஷயங்கள் குறித்து வலைமூலம் தங்கள் எண்ணங்களை எழுதுவார்கள். அவர்களது எழுத்துக்களை வைத்து நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது மனவளர்ச்சியை ஆராயலாம். இதற்கு தேவை ஒரு மென்பள்ளியின் வலைதளம், ஒரு சின்ன அலுவலகம், 5-6 கணிப்பொறி, இலவசமாக இந்தக் கல்வியைத் தொடர மாணவர்கள். கடைசி தேவையை அடைவதுதான் கடினம் என்பது மிக நன்றாகத் தெரியும். ஆனால் நாம் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் துவங்குவதற்கு தேவையான முதலீட்டை விட இதில் மிகக்குறைவே வேண்டியது இருக்கும். துவக்கத்தில் பள்ளி 14-15 வயது குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே பயன்படலாம். நாளாக நாளாக இதை மேற்கொண்டு வளர்க்கலாம்.

இன்னும் ஒரு யோசனை உருவாகியது. சில தொழிற்சாலைகளில் இந்த வயது குழந்தைகள் படிப்பை விட்டு வேலை செய்யக் கூடும் அப்படிப் பட்டவர்களுக்கு எளிதில் அந்தத் தொழிற்சாலை அதிபரின் உதவியோடு அங்கேயும் துவங்கலாம். எனது யோசனை எத்தனைபேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை… ஆனால் நிச்சயம் பல மாறுதல்களுக்காகவும் அடிப்படை குறிக்கோள் வெற்றி பெறவும் தேவையான உயிர் இதில் உள்ளது என்று நம்புகின்றேன்.

எனது ஆராய்ச்சி கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக…
blogging-full-paper.doc

Read Full Post »

நமது வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் அனுபவங்களும் ஒரு பாடம் தான். அப்படி நான் என் துறைக்கு வந்த பின்னர் உணர்ந்த முதல் விஷயம் நம் நாட்டில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள். இது சாதிப் பிரச்சனையால் வந்த ஏற்றத் தாழ்வல்ல, பால் வேறுபாடு காண்பதால் வந்தது அல்ல, பண வேறுபாட்டால் வந்தது அல்ல. நமது கல்வி முறையால் கிணற்றுத்தவளைகளாய், புத்தகப் புழுக்களாய் வளர்த்து விட்ட சில மாணவர்களுக்கும், உலகமயமாக்குதலை மையமாகக் கொண்டு வளர்ந்து வந்த சில மாணவர்களுக்கும் இருக்கக் கூடிய ஏற்றத்தாழ்வு.

உங்களில் எத்தனையோ நண்பர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் கல்லூரி நண்பர்களைவிட கிராம புற கல்விக்கூடத்தில் வளர்ந்ததால் நாம் பின் தங்கி இருக்கிறோமே என்று எண்ணி இருக்கலாம். பள்ளியிலேயே நமக்கு இதைக் கற்றுக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணி இருந்திருக்கலாம். நாம் கடந்து வந்தப் பிரச்சனைகளை நமது வருங்கால இளைஞர்கள் கடக்கக் கூடாது என்பத்ற்காக வலைப்பூக்கள் மூலம் நமது கல்வி கூடங்களில் சில மாற்றங்கள் செய்வதற்காக புதிய வலைப்பூ ஒன்று துவங்கி இருக்கிறேன். இது சம்பந்தமாக ஆராய்ந்ததில் நான் உணர்ந்த முதல் விஷயம் நமது ஆசிரியர்களுக்கு வலைப்பூக்கள் குறித்து அறிமுகம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

பள்ளிகளில் கணினி, வலை வசதிகள் எப்படி ஏற்படும் என்ற சந்தேகம் எழக்கூடும். Sarva Shiksha Abhiyaan என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வசதிகள் கொண்டு வரத் துவங்கியாச்சு. இனி வலை வச்தியை ஏற்படுத்த வேண்டியது தான்.

முதல் திட்டமாக நான் படித்தக் சென்னை கன்னட சங்க மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்களிடம் வலைப்பூக்கள் பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன். அதற்காக அவர்களுக்கு இதில் ஏற்படும் கருத்துப் பரிமாற்ற வளர்ச்சி குறித்து விளக்குவதற்காக இன்று http://vithai.edublogs.org/ என்ற வலைப்பதிவைத் துவக்கி வைத்துள்ளேன். இது இரு மொழிகளிலும் (ஆங்கிலம், தமிழ்) இயங்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இங்கே கல்வி முறைகளில் நாம் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் குறித்த கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். இதற்கு பல மென்பொறியாளர்களின் உதவி எனக்குத் தேவைப்படலாம். இதில் சேர்ப்பதற்காக நீங்களும் கருத்துகள் கொடுப்பின் ஏற்புடையதாக அமையும்.

உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கும்

அயன்

Read Full Post »

தோழர்களே, பல்கலைக்கழகக் கருத்தரங்கிற்கு நான் தயார் செய்யும் ஒரு கருத்துக்கட்டுரையின் சுருக்கம். தலைப்பு நமது சம்பத்தப் பட்டதாக இருக்கவே இங்கு இடுகின்றேன். படித்துவிட்டு நிறை குறை குறித்து கிளிக்குங்கள்.

……………………………………………………………………………………………………………………………………………

BLOGGING – AN ALTERNATIVE LEARNING TOOL FOR ALL IN
INDIA

In an era of globalization, where the technology and exposure decide the future culture of the country, it is essential for the instructors/teachers to synchronise the evolving energy and reap productive assets out of it. The roots of future India has thus to be nourished and made fit to face the future challenges without deviating from our own traditional roots. In this context, personal web publishing in general and web logging (blogging) in particular helps to transcend the limitations of our traditional learning techniques and create a new educational landscape.

Blogs can be conceptualised as a reflective conversational learning tool for organized self learning. It can facilitate child development by raising the learning process to newer levels, thus bringing about a paradigm shift in our educational system.

For Students/Children, it improves the responsibility and commitment of the children along with their communication and writing skills. It also creates a social networking which provides an environment for their own emotional, psychological and social development. Blogging also gives enormous opportunities for their development in their own field of interests, thus enabling them to rise above the traditional learning methodology. It facilitates the children to perceive the traditional subjects in a new light, making the whole learning process enjoyable rather being mechanical.

For teachers/instructors, it can be an effective facilitating tool which will shift the focus of our education system from instructing to facilitating. The teachers and instructors can create their own blogging community with their own students and teachers from other institutions. They can add new links from the web which will be more relevant for their course, conduct competitions which can improve the creativity of the students, announce group projects and assess the child development in a more pragmatic and realistic way. It will prove to be a valuable supplement to our traditional teaching methodology with its major advantage of decentralizing the classrooms.

For the institutions, they will increase the accountability of the teachers and the students as well. They will also assure the quality of education by bringing their institutions in contact with the world.

But for a developing country like India will this model be suitable? The complete analysis of the possibilities in the existing structural frame work is being discussed in the paper in detail. Improved employment opportunities resulting from the technological boom will have its social benefits too. Overall this new model can be summed as a small step with a huge impact. This is an endeavour to conceptualise this idea.

Read Full Post »

Here is an appeal to all Tamil Bloggers!

Having been blogged for so many years by so many people… I would like to have suggestions regarding how to improve our education system through blogging… (particularly in the indian context). Please do post ur suggestions on positives and negatives regarding blogging, do’s and don’ts, and their major role in child development. I’m also interested in having partners to design a site or blog which could be an alternative to our education system. Please don’t forget to reply

Read Full Post »