Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘வலையில் பெண்கள்’

வணக்கம் நண்பர்களே,

ஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

அப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம். என்னைக் கவர்ந்த முதல் விஷயம்  குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் தமிழ்மணத்தின் இந்த வார நட்ச்த்திரமான பொன்ஸ் அவர்களின் கட்டுரை கண்ணில் பட்டது.

பெண்கள் பரிகசிக்கப்படுவதை குறித்து ஏற்கனவே கோபம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் கேட்டிருந்த பல கேள்விகள் நியாயமானதாகத் தெரிந்தது. ஆதிக்க சமூகத்தின் நக்கல் போக்கு வெளியாகுவது போல் அந்தக் கட்டுரையின் முதல் பின்னூட்டமே ஒரு பெயர் சொல்லக்கூட தைரியம் இல்லாத பேடியினதாகப் பட்டது.

இந்தியப் பெண்கள் கணிப்பொறி கையில் ஏந்தி சுய சார்பு பெற்றிடினும் அவர்களுக்கென்று இருக்கக் கூடிய சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது. கல்வியாவது மாற்றங்களைக் கொண்டு வரும் என்றால் படித்தவர்களே இப்படி நடந்தால் எப்படி?

பெண் பதிவர்களே, உங்களுக்கு நான் விடுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எக்காரணத்திற்காகவும் எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம். கல்வியும், கருத்துப் பரிமாற்றமுமே நம் சமூகச் சிந்தனையை மாற்ற முடியும். முடிந்தால் நீங்கள் இன்னும் பத்து பெண்களை எழுதத் தூண்டுங்கள்.

முடிவாகப் பதிவுலகில் சாதனை புரிந்து வரும் அனைத்து பெண்களுக்கும், அவர்களுக்கு ஊக்க மருந்தாய் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த வார நட்சத்திரமான கலாய்த்தல் சிகரம்(self proclaimed) “பொன்ஸ்” அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு சிறு யோசனை… உங்கள் கட்டுரை அடிக்கடி complaint செய்கிற ஒரு அழுகாச்சி குழந்தையின் சாரமாக இருந்தது. அந்த மனப்போக்கைப் பெண்கள் விடுத்தாலே, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்தாலே பெண்கள் முன்னுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன் நீங்க எப்படி?

Read Full Post »